கீற்றில் தேட...

திரவக் கண்ணாடியென நகர்கிறது நதி
கூழாங்கற்களும் குறுசங்கும் பொறுக்கி சந்தோஷிக்கிறார்கள்
சலவைக்காரிகளின் சந்ததிகள்
தண்ணீர் சேந்த வரும்
கொலுசுக்காரிகளின் மீன்களிடம்
சிக்கிக் கொள்கிறான் தூண்டில்காரன்
பாம்புக்கு பயந்து பாறையில் நிற்பவன்
சிறுகல்லெறிந்து சுக்குச் சுக்காய் உடைக்கிறான் சூரியனை
குளிக்கும் பொழுதில் கோவணத்தை தவற விட்டவனை
மர்மப் பிரதேசத்தில் கடித்து அகோரப் பசியை
அறியப் படுத்துகின்றன சேட்டைக்கார சிறுமீன்கள்!

 - ஸ்ரீதர்பாரதி