மாண்புடைப் பெண்ணெனப் புகழப் படினும்
வீண்மகள் என்றே இகழப் படினும்
மண்ணில் வர்க்கம் உள்ள வரையில்
பெண்ணின் தளையது இறுகுதல் ஒழியா
விடுதலை வேண்டும் அறிவுடைப் பெண்ணே!
நடுநிலைக் கருத்தில் மயங்கிட வேண்டாம்
வர்க்கம் ஒழிக்கும் சமதர்மம் ஒன்றையே
தர்க்கம் புரிந்து வென்றிட வைப்பாய்
 
(சிறப்பான பெண் என்று புகழப்பட்டாலும், வீணான பெண் என்று இகழப்பட்டாலும், வர்க்க சமுதாயம் உள்ள வரையில் அவளுடைய அடிமை விலங்குகள் இறுகிய படியே இருக்கும். (ஆகவே) சுதந்திரத்தை விரும்பும் அறிவுசால் பெண்களே! (வர்க்க சமரசம் செய்யும்) நடுநிலைக் கருத்தியல்களில் மயங்கிடாமல், வர்க்க ஒழிப்பையே நோக்கமாகக் கொண்ட சோஷலிசக் கருத்தியலை மட்டுமே ஆதரித்து, வாதாடி, போராடி, வெற்றி பெறச் செய்யுங்கள்)

- இராமியா