இயற்கை அறிவியல் வழியில் சென்று
பயன்பல பெற்று உயர்ந்த மனிதன்
கடலில் சுறாவிடம் சிக்கிய களிறென
மடமைச் சந்தை விதிகளில் சிக்கிப்
புவிவெப்ப உயர்வால் அழியா திருக்க
சமூக அறிவியல் கொடையாய் அளித்த
சமதர்மம் ஏற்பது ஒன்றே தீர்வு
 
(இயற்கை அறிவியலின் வழியில் பல சாதனைகளைப் புரிந்து, அதனால் மிகப் பல பயன்களையும் பெற்ற மனித இனம், கடலில் சுறா மீனிடம் சிக்கிய யானையைப் போல (மக்களின் நல்வாழ்வை எண்ணாது, இலாபத்தையே நோக்கி இயங்கும்) மடத்தனமான சந்தையின் விதிகளில் சிக்கி, புவி வெப்ப  உயர்வினால் அழியாமல் இருக்க, சமூக அறிவியல் கொடையாக அளித்து இருக்கும் சோஷலிசத்தை ஏற்பது ஒன்று தான் (இவ்வுலகம் அழியாது இருப்பதற்கான) தீர்வாகும்.)

- இராமியா

Comments

2 comments

2
GunduBalu
என்னய்யா மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறே. மொதல்ல இந்த மொதலாழித்துவம் கண்டு புடிச்ச இன்டர் நெட்ட பாவிகிறட நீர் நிறுத்தணும். அதனால எம்மளவு புவி வெப்பமயமாகுதுன்னு தெரியுமுல்ல.
devakim.r
ரொம்ப நன்ட்ராக இருக்கு

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.