விழுந்த பல்லை
சாணியில் சுற்றி
கூரையில் எரியும் போது
குழந்தை கேட்டது
"கூரையில்
பூசணிப்பூக்கள்
இப்படித்தான் பூக்கிறதா?"

***

பிச்சையெடுக்கும்
குழந்தைகளைப் பார்த்து
பாவப்படும் என் குழந்தையிடம்
நாடு நாடாக இந்தியா கையேந்துவதை
எப்படிச் சொல்வது?

- ப.கவிதா குமார்