குழந்தைக்கு தாய்மையின் முத்தங்கள்
வாலிபத்தின் வசீகர முத்தங்கள்
கொண்டாட்ட தருணங்களில்
ஆசீர்வதிக்கப்படும் முத்தங்கள்
நினைவுகளின் உண்டியலில்
சேமிக்கப்பட்ட முத்தங்கள்
கடைசியாய் செலவழிக்கப்படுகின்றன
இறுதி சடங்கின் முத்தங்கள்
முத்தங்களால் முன் மொழியப்படாத வாழ்க்கை
யுத்தங்களில் அழிந்து கொண்டிருக்கின்றது
கீற்றில் தேட...
முத்தங்களின் உண்டியல்
- விவரங்கள்
- பகல்நிலவன்
- பிரிவு: கவிதைகள்