இவ்வே, பீலி அணிந்து, மாலைசூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
பூசனை செய்வது போலவே வினைஞரை
மாசறு அரசியல் பாடம் தவிர்த்துக்
கூலி உயர்வு வட்டம் தன்னில்
நூலினால் கட்டி ஞானக் குருடாய்
வைக்கும் பொதுமைக் கட்சிகள் உளதால்
முதலிகள் மகிழ்வுக் கெல்லை இலையே

(இங்கு மயிலிறகுகள் சூட்டி, அழகுடன் நெய் பூசி (ஆயுதங்களைப்) பாதுகாப்பாக வைத்துப் பூசை செய்வது போல, தொழிலாளர்களைக் கூலி உயர்வு வட்டத்தில் இருந்து வெளியே வராமல் கட்டி வைத்தும், குற்றமற்ற அரசியல் பாடம் கற்றுத் தராமலும், ஞானக் குருடர்களாய் வைத்துக் கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளதால் முதலாளிகள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.)

- இராமியா