நீ
விதித்த விதிகளுக்குள்
எல்லை மீறாத விலங்கென
கூண்டோ....கயிறோ...
சிறைப்படுத்தி
என்னை சுற்றிவரச் செய்கிறாய்.
மீறுதலின்...
என் சுதந்திரத்தின்....
இயல்பு மறந்து...
சட்டங்களுக்குள் அடைபட்ட
புகைப்படத்தின் உயிர்ப்பற்ற புன்னகையை
உதிர்த்து வாழ்தல் என்பது...
கருத்த இரவு தோறும்
அமைதியின்றி...
நட்சத்திரங்களாய் உடைந்து சிதறி...
எதையோ தேடித் தேடித் தினமும்
தோல்வியுடன் திரும்பும்...
களைத்த நிலவைப் போல்
சலிப்பாய்தான் இருக்கிறது எனக்கும்.