அவனிடம் எந்தக் கடைக்கோ
இல்லை கோவிலுக்கோ
இல்லை பஸ்ஸ்டாண்டுக்கோ
வழி கேட்டால் கூட
கலைச்செல்வி வீடு இருக்குல்ல மச்சான்
அதிலருந்து என் வீடு உள்ள
தூரம் போல இரண்டு மடங்கு
இல்லை ஒரு மடங்கு இருக்கும்
இல்லை அதில பாதி தான்
என்பான் எப்போதும்.

உனக்கும் கலைச்செல்விக்கும்
எவ்வளவு தூரம்டா மச்சான்
என்று கேட்டால் மட்டும்
அவனிடம் கட்டி நிற்கும் மௌனம்
ஒளியாண்டுகள் தொலைவு நீளும்.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
kosinraa
நல்ல கவிதை நண்பா. வாழ்த்துகள். கோசின்ரா
krishna
ஓ!எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே சாதி என்பதற்கு முழுவிளக்கம் எவரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன். என்ன நிறம்? என்ன வடிவம்?என்ன உயரம்? என்ன சுவை? என்ன மனம்? என்ன ஒலி? இரவா? பகலா? காலையா?மாலையா? வெயிலா?மழையா? சாதியவாதம் பேசுபவர்களே,உலகில் ஏதெனும் ஒரு பொருளூடண் ஓப்பிட்டு கூற முடியுமா? ஒய்யாரகொண்டையாம் ஒரு கோடி ஈறும்,பேனுமாம்?
chinnappayal
மிக்க நன்றி கோசின்ரா..!
கு.ப.அருண்பிரசாத்
அருமையான கவிதை நண்பரே..............
தொடரட்டும்...................

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.