கவர்ந்திழுக்கும்
உடைகள் அவன் அணிந்திருக்கவில்லை
அவ்வளவு ஏன்
அவன் சொல்லிக்கொள்ளும்படியான
உடையே ஒருபோதும்
அணிந்ததுகூட இல்லை
தலைவாருதலும் முகச்சவரமும்
ஒருபோதும் செய்ததில்லை
வாசனைத்திரவியங்களின்
வாசனை கூட அவன் அறிந்திருக்கவில்லை
அடுத்த வேளை பற்றிய
கவலையின்றிப் பசியாற
ஒரு சுமாரான வேலையும் கூட
அவனிடம் இருந்ததில்லை
அவளைக்க விதை பாடி மயக்க
அவனிடம் தமிழ் இல்லை
குறுஞ்செய்திகளும்
அஞ்சல்களும் வாழ்த்து அட்டைகளும்
அவளுக்கு அனுப்ப
வாய்த்ததில்லை
இருப்பினும் அந்த ஏவாளிற்கு
ஆதாமிடம் தூய காதல் இருந்தது
நான் ஆதாம்

- சின்னப்பயல்  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.