சிதறிக் கிடப்பதால் ஒடுங்கிய நிலையில்
வதங்கிய வாழ்வை வாழ்ந்திடும் தோழா
வைகல் எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன்ன தத்துவம்
அளித்திட்ட மார்க்சின் வழியில் இணைந்தால்
துளியும் ஐயம் என்பது இல்லை
உழைப்போர் வெல்லும் ஒரேவழி அதுவே

((ஒற்றுமையின்றிச்) சிதறிக் கிடப்பதால் ஒடுங்கிய நிலையில், சாரமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழனே! ஒரு நாளைக்கு எட்டுத் தேர் செய்யும் (திறமை படைத்த) தச்சன், ஒரு மாதங் கூடிச் செய்த தேர்க் காலைப் போன்ற நேர்த்தியும் உறுதியும் கொண்ட தத்துவத்தை அளித்த கார்ல் மார்க்சின் வழியில் இணைந்தால், அது தான் உழைக்கும் மக்கள் வெல்லும் வழி என்பதில் துளியும் ஐயம் இல்லை.)

- இராமியா