ஆரிய உருவே போற்றி!
ஆணவத் திருவே போற்றி!!
ஆழிசூழ் தமிழ்நிலத்தை
ஆரிருள் சூழச்செய்த
ஆரிய உருவே போற்றி!
ஆணவத் திருவே போற்றி!!
கஞ்சியிலார் வீட்டில்
கரண்டையும் பறித்துக்கொண்ட
விஞ்சிய புகழே போற்றி!
வீராங் கனையே போற்றி!!
கணினியை எறிந்துவிட்டு
கரும்பலகை ஏந்த வைத்த
காவியத் தலைவி போற்றி!
கருணையே பொழிந்தாய் போற்றி!!
கிரைண்டரை கவிழ்த்துவிட்டு; அம்மிக்கும்
ஆட்டுரலுக்கும் அரிய வாய்ப்பளித்த
அருந் தவப்புதல்வி போற்றி!
அம்மையை தொழுதோம் போற்றி!!
சிம்னி விளக்கை மீண்டும்
சீர்படுத்தி எரிய வைத்த
சந்திர ஒளியே போற்றி!
சரித்திரம் படைத்தாய் போற்றி!!
எடிசனின் விளக்குகளை
எரியாமல் செய்திட வந்த
எம் குலவிளக்கே போற்றி!
ஏழையர் சிரிப்பே போற்றி!!
எண்ணெயும் திரியும் இன்று
இணைந்திட வழிவகுத்த
உன்னதத் தாயே போற்றி!
உலக நாயகியே போற்றி!!
பனையேறும் தொழிலைக் காக்க
பனையோலை விசிறி தந்த
பறக்கும் பாவையே போற்றி!-நின்
பாதார விந்தம் போற்றி!!
கடைக்கோடி மக்களுக்கும்;கற்கால
வாழ்வளிக்க பொற்கால ஆட்சி பூண்ட
பூணூலார் மகளே போற்றி!
புரட்சியின் வடிவே போற்றி!!
சீர்கெட்ட நிலை கண்டு
சிலிர்த்தெழுவோரை யெல்லாம்
சிறையிலடைத் திடுவாய் போற்றி!
சிரித்திடும் நரியே போற்றி!!
- சைதை மா.அன்பரசன் (