கீற்றில் தேட...

windowrain

ஒரு வேனிற்காலத்தின்
மாலைப் பொழுது...

வெயில் மங்கிவிட்டது...

எப்பொழுதோ
என் சுவாசத்தில்
நீ தோற்றுவித்த‌
காற்றழுத்தத் தாழ்வுநிலை
என் வாசலில் கொட்டித்தீர்க்கிறது
அடை மழையாய்...

மழை இப்போதைக்கு
ஓய்வதாய்த் தெரியவில்லை...


- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)