அவனுக்கு சில்வர் டம்ளரிலும் 
எனக்கு அலுமினிய குவளையிலும் 
கொடுத்தார்கள் தேனீர்;
நல்லவேளை  
ஆதிக்க சாதிக்குக் கொடுத்த டம்ளரில் 
கொடுக்கவில்லை எனக்கு
கருமம்.

அருவெறுப்பும், அழுக்குகளும் 
நிறைந்த ஒன்றைத்தொட 
எப்படி  மனசு வரும் 
எனக்கு.