கீற்றில் தேட...

உஷ்ணத்தால் எழுதப்பட்ட
கவிதையொன்று
பேரமைதி தவழும்
எனதறைக்குள் பரிசளித்துப் போகிறது
உன் நினைவுகளை

உன்னோடிருந்த ஒவ்வொரு நொடிகளையும்
நான் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்

எழுத எழுத
நம்மிருவருக்குமான  நெருக்கங்கள்
விழுதாய் வேரூன்றிக் கொண்டிருக்கிறது என்னுள்

மலைபோல் குவிந்து கிடக்கும்
எனதெழுத்துக்களை
பத்திரமாய் பதப்படுத்தியிருக்கிறேன்
நீ வரும்போது
உன்னோடு உறவு கொள்ளெட்டுமென

- வழக்கறிஞர் நீதிமலர்