தொழிலின் புரட்சியால்பொருளின் உற்பத்தியை
மொழிய முடியா அளவில்உயர்த்தி
அதிசயம் காணச் செய்தமுதலியே
மதியுடன் முளைத்த சமதர்மத்தத்துவம்
உரிமைப் பறிப்பை எதிர்த்ததுபொறாமல்
சரிநிகர் மோதலில்கவிழ்ந்து போனாய்
வஞ்சகந் தனிலே வென்றபோதும்
அஞ்சா வினைஞரே நல்லவர்வல்லவர்
(தொழிற் புரட்சியின் மூலம்சொல்ல முடியாத அளவிற்குப் பொருள் உற்பத்தியை உயர்த்தி அதிசயத்தை நிகழ்த்திய முதலாளி வர்க்கமே! (உற்பத்தி உறவு தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பொருந்ததாகி விட்டது என்ற) அறிவுத் திறனுடன் முளைத்த சோஷலிசத் தத்துவம், சுரண்டுவோரின் அடிமை கொள் உரிமையைப் பறித்ததைப் பொறாமல் சரிநிகராக எதிர்த்து நின்றதில் கவிழ்ந்து போனாய். (பின்) வஞ்சகத்தால் வென்ற போதிலும் (சுரண்டலக்கு எதிராக) அஞ்சாமல் போரிடும் தொழிலாளர்களே நல்லவர்களும் ஆவர்; வல்லவர்களும் ஆவர்.)
- இராமியா