தெருவுக்குத் தெரு
முளைத்திருக்கின்றன
பல குழந்தைத்
தொழிற்சாலைகள்
காலைக் கடிக்கும் ஷூ
கழுத்தை நெரிக்கும் டை
முதுகு பொறுக்கும் சுமையுடன்
தீயெனப் பொசுக்கும்
வெயிலில் சீருடையணிந்த
குழந்தைத் தொழிலாளிகள்
காதைக் கிழிக்கும்
ஹாரனுடன் தெருவில் வந்து
திரும்புகின்றன இவர்களை
ஏற்றிச் செல்லும் சிறை வண்டிகள்
கையசைத்துச் சிரிக்கும்
கனவுப் பைத்தியங்களைக்
கண்ணாடி வழியே கண்டவாறு
வாரி எறியப் பட்ட
காகிதக் குப்பைகளின்
நடுவே விதியே என
குழந்தைத் தொழிலாளிகள்
தலை வாரி மை பூசி
தன் அப்பாவின்
கனவுச் சிறையில்
அடைக்கப்பட்ட கைதியாக
கடைசிவரை கண்ணாடி
வழியே பார்த்தவாறு நம்
குழந்தைத் தொழிலாளிகள்
- அருண் காந்தி (