கீற்றில் தேட...

எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.
நான் அறையில் உறங்குகிறேன்.
நாய் தரையில் உறங்குகிறது.
நாய் கனவு காண்கிறது.
நானும் கனவு காண்கிறேன்.
நாய் தேர்தலில் நிற்பதில்லை.
நானும் தேர்தலில் நிற்பதில்லை.
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது.
மனிதன் நான் எல்லாவற்றுக்கும்
நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.