இலங்கையில் இராணுவ நடவடிக் கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அதிபர் மகிந்தா ராஜபக்சே இராணுவ அணிவகுப்பை நடத்தி வெற்றியைப் பிரகடனப்படுத்தி முடித்திருக்கிறார்.

தமிழ் ஈழத் தாயகத்தை சிங்கள ஆக் கிரமிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கான விடு தலைப்போராட்டத்தைக் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக நடத்தி வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் வரலாற் றில் இதுவரை நேரிட்டிராத பின்னடைவை சந்தித்திருக்கிறது. அந்த இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் மரணம் அடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக அந்த இயக்கத்தின் ஒரு தரப்பினர் உட்பட பலர் செய்திகள் வெளியிட்டுள்ளனர். ஆனால் பிரபாகரன் இன்னமும் உயிரோடு தான் இருப்பதாக அறுதியிட்டுச் சொல்லுகிற இன்னொரு தரப்பும் தகவல்களைத் தந்த வண்ணம் உள்ளது.

தமிழ் உணர்வு, ஈழம், விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் தொடர்பாக இணைய தளத்தில் தற்போது உலா வருகிற வசவு இலக்கியம்ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டு நிற்கிற இந்தக் கட்டத்தில்இனி உடனடி யாக முன்நிற்பது என்ன?’ என்பது கவனத்தை ஈர்க்க வேண்டியுள்ளது.

இலங்கையில் அந்த நாடு விடுதலை பெற்ற 1948 முதல் சம உரிமைகளும், வாய்ப்பு களும் கோரித் தமிழ் மக்கள் போராடி வந்துள் ளனர். தனி ஈழம்என்ற கோரிக்கை எழுப்பப் படுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிப்பொறுப் பேற்றுச் செயல்பட்ட அரசுகள் இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்கவில்லை.

இந்தப் பின்னணியில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டிவிட்டவெற்றிக்களிப்பில் திளைத்து நிற்கும் ராஜபக்சே அரசு, இலங் கைத் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஆர வாரமான அறிவிப்புகள் பலவற்றையும் வெளி யிட்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளின் அனுபவம் இந்த அறிவிப்புகள் நடைமுறைப் படுத்தப்படுமா என்ற ஐயப்பாட்டையே முன் நிறுத்தியுள்ளது.

முடிவுக்கு வந்துவிட்ட இராணுவ நட வடிக்கைகளின் விளைவாக எழுந்துள்ள மனித அவலங்கள் சார்ந்த பிரச்சனைகளுக் குத் தீர்வு காண வேண்டியது, இலங்கை அரசின் முன்பாக மட்டுமின்றி சர்வதேச சமு தாயத்திற்கே ஒரு பெரும் சவாலாக நிற்கிறது.

இவற்றில் இரண்டு முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஒன்று-வன்னி பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு லட்சத்திற் கும் அதிகமான, சொந்த நாட்டி லேயே அகதி களாகி நிற்கிற, புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வுப் பிரச் சனைகள்.

இரண்டு- இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடரப்பட்ட காலகட்டத்தி லும் சரி, இப்போதும் சரி, தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள்.

ஐ.நா. அமைப்பின் பிரதிநிதிகள், சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முகாம்களில் நிலவுகிற மோச மான சூழல்கள் பற்றிய அதிர்ச்சியும் கவலை யும் அளிக்கிற தகவல்களை வெளியிட்டுள்ளனர். இங்கு நிவாரணப்பணிகள் முழுமையாக வும் அவசர உணர்வோடும் மேற்கொள்ளப் படாவிட்டால் ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவு தவிர்க்க இயலாததாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கையாகவே இத்தகவல்கள் அமைந்துள்ளன. இலங்கை அரசு இதற்காக சர்வதேச சமுதாயத்தின் உதவிகளுக்காகக் கைநீட்டுகிறதேயொழிய, ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற வற்றின் நேரடி ஈடுபாட்டையும் கண்காணிப் பையும் தவிர்க்கும் போக்கிலேயே செயல் பட்டு வருகிறது. இந்தத் துயர்துடைப்புப் பணிகள் ஒளிவு மறைவற்றதாக, நம்பத்தகுந்த வகையில் மேற்கொள்ளப்படுவதற்கு சர்வ தேச சமுதாயம் உத்தரவாதமான நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும்.

உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து வாழும் இந்தத் தமிழ் மக்கள் தங்கள் சொந்தக் குடி யிருப்புகளுக்குத் திரும்பும் வகையில் இலங் கை அரசு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் பரப்பப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற் றிய பின்னரே அங்கு மக்கள் செல்ல அனும திக்க முடியும் என்று இலங்கை அரசு சொல்லி வருகிறது. இது காலங்கடத்துகிற முயற்சியாக இல்லாமல் விரைவுபடுத் தப்பட வேண்டியது அவசியம். மேலும், அந்தப்பகுதிகளில் நேரிட் டுள்ள சேதங்களை முறையான பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் முலம் சீர் படுத்தித் தருவது இலங்கை அரசின் கடமை யாகும். இந்தப்பகுதிகளில் ஏற்கனவே குடியி ருந்த தமிழர் குடும்பங்களைத் தவிர, இதர பகுதிகளிலிருந்து சிங்களர்களைக் கொண்டு வந்து குடியமர்த்துகிற முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் பரவ லாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட முயற்சி களை இலங்கை அரசு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இலங்கை அரசின் இராணுவ நடவடிக் கைகள் கிளிநொச்சி - முல்லைத்தீவு பகுதி களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்னதாகவே - நார்வே நாட்டின் தலையீட்டால் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருந்த காலகட்டத்திலேயே - இலங்கைத் தமிழர் களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் வரைமுறையற்ற வகையில் நடைபெற்று வந் துள்ளன. இதற்கான ஏராளமான சான்றுகள் பலவும் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக் கையின் ஒரு பகுதியாக, அப்பாவி மக்கள் திர ளாக இருந்த பகுதிகளில் ஏவுகணை, கொத்து வெடிகுண்டு, நச்சு வாயு உமிழும் இரசாயன குண்டுகள் - ஆகியவற்றின் தாக்குதல்கள், இளைஞர்கள் கடத்தல், பெண்கள் மானபங் கம் போன்ற பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை, விடுதலைப்புலிகள் அல்லாத இலங்கைத் தமிழர் அமைப்புகள் பலவும் கூடக் குற்றச்சாட்டுகளாக அடுக்கி யுள்ளன.

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இது தொடர்பான தீர்மானம் சர்வதேச நிர்ப்பந் தங்கள் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மனித உரிமை மீறல்கள் மற் றும் இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங் கள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத் தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் கடுமை யாகத் தண்டிக்கப்பட வேண்டும். இராக்கை யும், ஆப்கானிஸ்தானையும் ஒப்பிட்டுப் பேசி, இலங்கை அரசு இந்த மனித உரிமை மீறல் களைத் திரையிட்டு மூடி மறைக்க முற்படு வதை சர்வதேச சமுதாயம் அனுமதிக்கக் கூடாது.

மறுவாழ்வு, மனித உரிமை குறித்த இந்த அம்சங்களை சுட்டிக்காட்டுகிற இந்த நேரத்திலேயே, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒரு நீண்டகாலத் தீர்வுக்கான அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்படுவதையும் வலி யுறுத்துவது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் இரா ணுவ நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்டுள்ள வெற்றியோ, விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட் டுள்ள பின்னடைவோ, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு, மகிந்தா ராஜபக்சே அரசு தன் னிச்சையாக முடிவெடுத்து நிரந்தரத் தீர்வு கண்டுவிடுவதற்கு இட்டுச்செல்லாது. இராணுவ நடவடிக்கைகள் சில உடனடிப் பயன்களை மட்டுமே தந்துள்ளதே தவிர, இலங்கைத் தமிழர் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருக்கும் என்பதை இலங்கை அரசு உணர வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண் டும் புத்துயிர் பெற்று எழும்”, “பிரபாகரன் தக்க தரு ணத்தில் முகங்காட்டித் தனி ஈழத்திற்கான போரை மீண்டும் வழிநடத்துவார்”, “தனி ஈழமே இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு”, “ஒன்று பட்ட இலங்கைக்குள் ளிட்ட அரசியல் தீர்வு என்பது சாத்தியமே அல்ல”, என் றெல்லாம் இன்றைக்கும் முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழ்நாட்டில், இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம் இந்த சிந்தனை ஓட்டத்தில் தான் செயல்படுகிறது. திமுக தலைமையி லான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை மக்களவைத் தேர்தலில் இப்பிரச்சனை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டு நிற்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கைத் தமி ழர்களை விடவும் அதிகமாக இலங்கையின் இறையாண்மை பற்றியே கவலைப்படுகிறார் கள்என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். பாமக நிறுவனர், மார்க்சிஸ்ட்டுகளை ஒரு பகி ரங்கப் பட்டிமன்ற விவாதத்திற்கே கூட அழைத்திருக்கிறார். ஜனசக்திநாளேட்டில் உதயை மு.வீரையன், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு பிழைபட்ட ஒன்று எனச் சித்த ரிக்க முற்பட்டிருக்கிறார்.

இலங்கையில் தனிஈழக் கோரிக்கை எழுந்ததற்கு காரணம் சிங்களப் பேரின வாத மும், அதை ஊக்குவித்த இலங்கை ஆட்சி யாளர்களின் கொள்கைகளே என்பதை, அங்கே இனப்படுகொலைகள் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்றாவது உலக நாடுகளில் இன மோதல்களை ஊக்குவித்து, அதன் மூலம் அரசியல் - இராணுவ ஆதாயம் தேடும் ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு இடந்தரக்கூடாது என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்ப டையான நிலைபாடு.

ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளிட்டு, தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதே சங்களுக்கு சுயாட்சி உரிமையும், கூடுதல் அதிகாரப் பகிர்வும் வழங்கக்கூடிய அரசியல் தீர்வு மட்டுமே, இலங்கைத் தமிழர் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வந்துள்ளது.

1987-ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாடு இந்தத் திசை யில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி என்ற போதிலும், அடுத்தடுத்து இலங்கையில் நடந் துள்ள நிகழ்வுகள், இலங்கைத் தமிழர் பிரச் சனையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. அங்கு மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப் புச் சட்டத் திருத்தங்கள், நீதிமன்றத் தீர்ப்புக் கள், அரசு நடவடிக்கைகள் என்று பலவும் அரசியல் தீர்வுக்கான வழித்தடத்தை ஆக்கிர மித்து நிற்கின்றன.

இலங்கை அரசு அமைத்துள்ள அதிகாரப் பகிர்வுக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் செயல்பாடு தனக்கே நிறைவளிப்பதாக இல்லை என்பதை அதிபர் ராஜபக்சேவே ஒரு கட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். கூடவே அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளைத் தானே பொறுப்பேற்று மேற்கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இலங்கையின் இன்றைய சூழலில், தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்பது, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி தமிழர் வாழும் பிரதே சங்களுக்கு விரிவுபடுத்தி அமலாக்குவதோடு மட்டும் நிறைவு பெற்றுவிடாது. இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு சகல விதத்திலும் சமமாக அரசியல், சமூக, பொரு ளாதார, பண்பாட்டு உரிமைகள் தமிழ் மக் களுக்கு உத்தரவாதமாகக் கிடைக்கச் செய்வதே அரசியல் தீர்வின் மையக் கருவாக அமைய வேண்டும்.

இலங்கை அரசு, இலங்கைத் தமிழ் மக் களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வரும் அனைவரையும் உள்ளடக்கி, அரசியல் தீர் வுக்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க வேண்டுவது அவசி யம். இதில், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப் பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் அண்மையில் உருவாகியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ள பல் வேறு தமிழர் அமைப்புகள் மற் றும் கிழக்கு மாகாண ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல மைச்சர் பிள்ளையன் தலைமையிலான அமைப்பு முதலானவை இடம் பெறுவது நல்லது.

யாழ்ப்பாணம், வன்னி நகரங்களில் உள்ளாட்சித்தேர்தல்கள் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், இலங்கையில் தமிழர் அமைப்புகளிடையே போட்டியும், கருத்து வேறுபாடுகளும் எழுந்துள்ளது இயற்கையே. எனினும், ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் இனச்சிக்கலுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டுவதி லும், அதைச் செயல்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந் திப்பதிலும் இலங்கைத் தமிழர் அமைப்புகள் ஒரு குறைந்தபட்சக் கருத் தொற்றுமையை உருவாக்கிச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இவை அனைத்திலும் இந்திய அரசு தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அண்மைக்காலமாக இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு கடைப்பிடித்த அணுகுமுறை தமிழ் நாட்டின் அரசியல் இயக் கங்கள் பலவற்றின் கண்ணோட்டத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையைத் தடுத்திட அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதில் இந்திய அரசு போதிய முனைப்புக் காட்டவில்லை என்று தமிழ்நாட்டில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ராஜபக்சே அரசின் இராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடு என்று மட்டுமே இந்திய அரசு பார்த்தது. இன்றைய இலங்கை நிலைமையில், ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ் மக்களின் நீண்ட கால நலன்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு செயலூக்கம் மிகுந்த நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

15வது மக்களவைத் தேர்தல் முடிந்து, மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலை யில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர் பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு, அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப் புத்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக் களில் கூர்மையான விவாதங்கள் நடத்தி விடைகாண்பது சாத்தியம்;அவசியமும் கூட.

- உ. ரா. வரதராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It