பொதுவாக இந்திய தேர்தல் ஆணையம் என்பது எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் கட்டுப்படாமல் சுயேட்சையாக குடியரசு தலைவருக்கு கீழே இயங்கும் நடுநிலை அமைப்பு. இந்த தேசிய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களாக இந்திய ஆட்சி பணி IAS தேர்வு பெற்றவர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தேசிய தேர்தல் ஆணையத்திற்கு கீழே தான் ஒவ்வொரு மாநில தலைநகரிலும் தேர்தல் ஆணையங்கள் இயங்குகின்றன. இவையும் கூட நேரடியாக தேசிய தலைமை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் காலங்களில் தலைமை தேர்தல் ஆணையம் அந்த அந்த மாநிலத்தில் இயங்கும் அதன் கிளை அமைப்பின் மூலம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை நடத்துகிறது.

இப்படி முழுக்க முழுக்க இந்திய ஆட்சி பணித்துறை (IAS) அதிகாரிகளால் அதுவும் குறிப்பாக UPSC BOARD மூலமாக தேர்வு செய்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இந்த தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலே எல்லையில்லா அளவுக்கு குழப்பங்களை இந்த ஆணையம் உருவாக்கியதோடு வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையில் தேர்தல்கள் பல மாநிலங்களில் நடந்து முடித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுக்கும் தரவுகள் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது என்ற செய்திகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கொண்டு இருந்த நிலையில் அப்படியான ஒரு நிலை தமிழகத்திலும் நிலவுகிறது என்பது தான் அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது..

தேர்தல் ஆணையம் கொடுத்த முதல் தரவும், அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடுத்தடுத்த தரவுகளும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை இங்கே ஆதாரங்களுடன் வெளியிடுகிறோம்.

  1. ஒன்றிய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் கிளைக்கும் உள்ள வேறுபாடு

https://www.elections.tn.gov.in/PCwise_Gendercount_01012024.aspx?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR0E3Jtc1pZeLYCJR6SSxXnMslO-LNcclf3lXby0ZNsvJ1zm2fjgU7atI9o_aem_AU9QENEVjJID0Vb_mnSPNrndmOAXMTgaw4a0toOZDN1sXLNFgtgpf7TG4WO_CkteunyNRf2_4l53yeujcFAUTmc3

tn election commission 1

tn election commission 2

சென்னையில் இருக்கும் சத்ய பிரபு சாஹூ தலைமையிலான தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 6,18,90348.

19-04-2024 அன்று தமிழகத்தில் இருக்கும் 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், வாக்கு செலுத்தியவர்களின் விபரங்களை வெளியிடாமல் விழுக்காடு அடிப்படையிலேயே வெளியிட்டார்கள். அதுவும் கூட மாலை, மறுநாள் மாலை, இரண்டு நாட்கள் கழித்து என்று வெளியிட்ட விழுக்காடுகள் கூட மாறி இருந்த நிலையில், எண்ணிக்கையை வெளியிடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததன் பின்னர் 5 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் பின்னர் 25-05-2024 அன்று மொத்தமாக 5 கட்டங்களில் நடைபெற்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் மற்றும் வாக்கு செலுத்தியவர்கள் விபரம் வெளியிட்டார்கள்.

tn election commission 3

tn election commission 4

tn election commission 5

மேலே கொடுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மொத்த வாக்காளர்கள் 6,23,33,925 என்றும் வாக்கு செலுத்தியவர்கள் 4,34,58,875 என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரே தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இருந்து வெளியிட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையும், தில்லியில் இருந்து 25-05-2024 அன்று வெளியிட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு 4,43,577 வாக்காளர்கள்.

இந்த வேறுபாடுகள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் குறைந்த பட்சம் 5,526 வாக்காளர்கள் மதுரையிலும் அதிகபட்சம் 27,893 வாக்காளர்கள் திருவள்ளூரிலும் காணப்படுகிறது.tn election commission 6

இந்த வேறுபாடு, ஏறக்குறைய வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கையில் 1% வருகிறது.

  1. வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கைக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு

தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அது தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருக்கிறது.

https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS222.htm

தேர்தல் ஆணையம் 25-05-2024 அன்று வெளியிட்ட வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கைக்கும், வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் மொத்த வாக்குக்களும் (பதிவான வாக்குகள் = செல்லும் வாக்குகள் + செல்லாத வாக்குகள்) வேறுபடுகிறது. 38 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் தேர்தல் ஆணையம் 25-05-2024 அன்று தெரிவித்த பதிவு செய்யப்பட வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது. திருவள்ளூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஆணையம் 25-05-2024 அன்று தெரிவித்த பதிவு செய்யப்பட வாக்குகளின் எண்ணிக்கையை விட 12,318 அதிகமாக இருக்கிறது. இப்படியாக 39 தொகுதிகளிலும் இருக்கும் வித்தியாசம் 2,60,141 வாக்குகள் வித்தியாசமாக இருக்கிறது.

tn election commission 7

  1. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் இருக்கும் வாக்குக்களுக்கும் FORM 20 க்கும் உள்ள வேறுபாடு

இறுதியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அந்த முடிவுகளை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அதை படிவம் 20 லே பதிவேற்றம் செய்வார்கள். இதில் பல படிவங்களில் அந்த தேர்தல் அதிகாரியின் கையெழுத்துக்கள் இல்லை. 5 பாராளுமன்ற தொகுதிகளில் வேறுபாடுகள் காணப்படுகிறது.tn election commission 8மொத்தத்தில் தேர்தல் ஆணையம் மீதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் உள்ள நம்பிக்கைகளும் தரமும் குறைந்து கொண்டே வருகிறது. கீழ்க்கண்ட .

ஏற்கனவே, இங்கே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர், ஒய்வு பெற்ற IPS அதிகாரியின் 20,000 புத்தகம் படித்தது, 5 லட்சம் வழக்குகள் பதிவிட்டது போன்ற முன்னுக்கு பின் முரணான தகவல்களை பகிர்வதன் மூலம் இப்படி இந்திய ஆட்சி பணியில் இருப்போர்களின் தரம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தல்களை நடத்திய இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் கவனம் கொள்ளாது ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களை அளிப்பது ஒட்டுமொத்த தேர்தல் அதிகாரிகள் என்பதை தாண்டி அந்த ஒன்றிய ஆட்சி பணித்துறை தேர்வு முகமையின் மேலே இருக்கும் மரியாதை குறைய வாய்ப்பு இருக்கிறது.

வெறுமனே தேர்தல் ஆணையம் என்ற ஒற்றை பழியை அவர்கள் மேலே போடுவதையும் தாண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்று தரமான, முறையான தரவுகளை பொதுமக்களுக்கு கொடுத்து உங்கள் மேலே இருக்கும் மரியாதையை உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, இப்படி தவறுகள் நிகழா வண்ணம் உரிய பயிற்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்

- ஆர்.எம்.பாபு

Pin It