காங்கிரஸ் - பாஜக மட்டுமல்ல இருக்கும் பிற CPI, CPIM முதற்கொண்ட தேசிய, மாநிலக் கட்சிகள் முதல் சில்லரை ஓட்டரசியல் கட்சிகள் வரை அனைத்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டுத் தான் செயல்படுகின்றனர்.
பிற தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகளும் அதே போல இந்திய சட்டங்களில் உள்ள உரிமைகளைத் தான் கேட்டுப் போராடுகின்றனர்..
புதிய இந்தியாவை அல்லது புதிய தமிழகத்தை கேட்டுப் போராடவில்லை...
அனைத்து மக்களும் சமமல்ல, பார்ப்பான் உயர்ந்தவன் தான், மற்ற மற்ற சாதிகள் தாழ்ந்தது தான் என்று ஒரு நாமக்காரர் நமது மூதாதையர் தோற்றத்தில் இருந்து பேசிய வீடியோ பார்த்திருப்பீர்கள்....
நாயை, அதாவது நாயின் வகைகளை சொல்லி அதுகள் கலக்காது நாம கலக்கலாமான்னு உதாரணத்திற்கு சொன்னாரில்ல...அதை அமித்தும் மோடியும் எதிர்க்கும் ஒரே இடம் காஷ்மீர்..!
அப்படிப்பட்ட பண்டிட்கள் தான் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி ஒரே தேசம், ஒரே வரி, ஒரே தேர்தல் என்று நம்மிடம் உதார் விடுகிறார்கள்...
ஆட்சியை கைப்பற்ற தேசபக்தி நாடகம் போடுகிறார்கள், அதற்கு நமது பிள்ளைகளைக் கொலை செய்கிறார்கள், பழியை அடுத்தவர்கள் மேல் திணிக்கிறார்கள்...
அதை மறைப்பதற்கு போர்ப் பதற்றத்தை வலிந்து ஏற்பாடு செய்கிறார்கள்.
பங்களாதேஷ், பாகிஸ்தான் பாய்களிடம் இறக்குமதி செய்யாவிடில் நாம் ஒரு 'வெங்காயத்தை'யும் சாப்பிட முடியாது. 15% உற்பத்தி கூட உள்நாட்டில் இல்லை.
வெளிநாட்டுக்காரரின் தயாரிப்பு இல்லையென்றால் பல்லு வெளக்குவதிலிருந்து நம் அன்றாடத் தேவைகள் அனைத்தும் நின்று போகும்...
இந்திய அரசியல்வாதிகள் பேசும் "MAKE IN INDIA", " MADE IN INDIA" கோஷம் வெற்றுக்கூச்சல் தான்...
குண்டூசி முதல் ராணுவத் தளவாடம் வரை இறக்குமதி அல்லது பன்னாட்டு நிறுவனத் தயாரிப்பு தான்...
1846-ல் ராஜா குலாப் சிங் பிரிட்டீஷ் அரசிடமிருந்து 'அமிர்தசரஸ்' ஒப்பந்தம் மூலம் 75 லட்சத்துக்கு காஷ்மீரை வாங்குனாராம்..!!??
இப்பக்கூட 'காஷ்மீர் விற்பனைக்கு' என்ற போர்டை அமித்தும், மோடியும் பாக்கெட்டில் வைத்துள்ளார்கள்...
பத்திர ஆபிஸ் முதல் போலீஸ் போடும் IPC செக்சன் சாதாரண பெட்டிக் கேஸ் வரை 1860 வரையறுத்து 1862ல் கொண்டுவரப்பட்டது தான். தற்போதுள்ள அல்லது ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அப்பப்ப தங்களுக்கு சாதகமான சிலவற்றை திருத்து சட்டமாக்கிக் கொள்வார்கள். அதையும் பொது மக்களிடம் கருத்து கேட்க மாட்டார்கள்.
பண்டிட்களை துரத்திட்டானுக பாய்கள் என்பவர்கள் பேசாத விசயம் 1934 வரை பசுவைக் கொல்வதற்கு மரண தண்டனை, துப்பாக்கி வைத்துக் கொள்ள இந்துக்களுக்கு (பண்டிட், ராஜபுத்திரர்) மட்டும் அனுமதி ராணுவத்தில் முஸ்லிம், புத்த மதத்தினர் புறக்கணிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களால் உதை கொடுத்து துரத்திவிடப்பட்டது தனிக்கதை...
இப்போது பேசிய மோடி கூட காஷ்மீரில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா படமெடுங்கள் என்கிறார்.... A சான்றிதழ் படம் எடுக்கப் போறான்கள் கம்னாட்டிகள்... ஏற்கனவே காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர்னு பாட்டும் இருக்கே.
புல்வாமாவில் 40 ராணுவத்தினர் பிணமானபோது மேக்கப் போட்டு MAN VS WILD சூட்டிங்கில் இருந்தவருக்கு வேறு என்ன பேச முடியும்..?
இப்ப காஷ்மீர் சட்டப் பிரிவு 370 பற்றி குப்பன் முதல் மோடி வரை பேசிக் கொண்டுள்ளனர். 1947 சுதந்திர இந்தியாவில் சேராத பகுதி ஜம்மு காஷ்மீர் ஏன் 1949ல் தான் சேர்ந்தது? அதுவும் ஒப்பந்தம் போட்டு... அந்த ஒப்பந்தம் பற்றி மூச்சுவிட மாட்டார் மோடி...
ஆனால் சுதந்திரம் வாங்கும் முன்னே முஸ்லிம் மாநாட்டுக் கட்சியை தொடங்கிய ஷேக் அப்துல்லா 1946லேயே ராஜா போட்ட அமிர்தசரஸ் ஒப்பந்தம் செல்லாது என்றார்...
காஷ்மீரில் துப்புரவு தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டம் இல்லை என்கிறார் மோடி ஜீ. சட்டம் இருக்கும் மாநிலத்தில் ஆய்துடைக்கும் காகிதமாகவே உள்ளதை பேசவே மாட்டார் நம்ம காஷ்மீர் மீட்பர்...
370 நீக்கியாச்சு, அப்புறமும் காஷ்மீர் மக்கள் ஆய் உட்கார்ந்து தான் போறாங்களாம்..
144 தடை, அடிக்கு 4 ராணுவ வீரர்கள்... மோடி சொல்கிறார் எந்த போராட்டமும் இல்லையாம்..!
1954 காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே சட்டப்பிரிவு 370 நீர்த்துப் போக, 35A கொண்டு வந்ததால் காலாவதி ஆன இந்த 370 டுபாக்கூர் சட்டத்தை பாஜக நீக்கியதாக வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுத்த ஆட்சியைக் கலைத்துவிட்டு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடப்பதை புகழ்ந்து தள்ளுகிறார் மோடி... பாவம் இவருக்கு ஓட்டுப்போட்ட ஜனங்கள்...
- தருமர்