பழைய வகை விவசாயத்தின் அடையாளங்கள் எல்லாம் எப்போதோ மறைந்தோடி விட்டது. ஆடு - மாடு - ஏர்க்கலப்பை - மாட்டுவண்டி - விதை - எரு உரம் எதுவும் விவசாயிகளிடம் இப்போது சொந்தமாக இல்லை! கமிஷன் ஏஜெண்டுகள், வியாபாரிகள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சூதாட்டக் களமாகிவிட்டது விவசாயம்!

farmer with kalappai10 ஏக்கர் விவசாய நிலம் அதன் உரிமையாளரான விவசாயியை விட, ஒரு 10 க்கு 10 கடையில் உட்கார்ந்திருக்கும் கமிசன் மண்டிக்காரனுக்கே அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறது! ஊழல் பேர்வழிகள், தங்களின் கருப்புப் பணத்தை ஒளித்து வைக்கும் இரும்புப் பெட்டியாகவும், ரியல்எஸ்டேட் முதலைகளின் லாபவெறிக்கு உதவும் துருப்புச் சீட்டாகவும் விவசாய நிலங்கள் மாறிவிட்டது!

விவசாயத்தின் பழைய முகமும் மாறிவிட்டது.

சுயதேவைக்கான உணவுப்பொருள் உற்பத்தி என்பதற்குப் பதிலாக, சந்தைக்கான, லாபத்திற்கான உற்பத்தி என்பதை நோக்கி விவசாயிகளை திருப்பி விட்டுவிட்டனர் ஆட்சியாளர்கள்! இந்த சூதாட்ட வலையில் சிக்கி, ஏன் விலை ஏறுகிறது? ஏன் திடீரென்று விலை குறைகிறது? என்பதற்கான சந்தை விதிகளைப் புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளாக நிற்கிறார்கள் விவசாயிகள்.

சந்தைக்கான உற்பத்தியில் சூதாட்டம் தெரிந்தவன்தான் களத்தில் நிற்க முடியும்! லாபத்துக்கான உற்பத்தி என்றால் அதிக மூலதனமும், சுயநலமும், லாபவெறியும், உள்ளவன்தான் வெற்றிபெற முடியும்! இந்த இரண்டு தகுதியும் இல்லாததால், 'விவசாயம் செய்வதைவிட கூலிவேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம்' என்ற மனநிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வருகின்றனர்.

விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் உள்ள உறவும் பழைய வகையிலான பற்றும் பாசமுமாக இல்லை! தன்னை வாழவைக்கும் தெய்வமாக கருதிய விவசாயியை, கடன்வலையில் தள்ளி, அவமானப்படுத்தி, இறுதியில் தற்கொலைக்குத் தூண்டும் வில்லனாக விளைநிலங்கள் மாறிவிட்டதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர் விவசாயிகள்! லாபகரமான ஒரு மாற்றுத் தொழில் கிடைத்துவிட்டால், தனது நிலங்களை விற்றுவிட்டு தப்பியோடுவதற்கு விவசாயிகள் தயாராகவே உள்ளனர் என்பதுதான் இன்றைய எதார்த்தமான உண்மை!

பொங்கல் திருவிழா அதன் உண்மையான பொருளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. விவசாயிகளின் வாழ்வோடு பிணைந்த ஒரு கலாச்சார வெளிப்பாடாக பொங்கல் விழா இல்லை. பாரம்பரிய விழாவின் ஒரு அடையாளச் சின்னமாக, ஒரு சடங்காக மட்டுமே நடக்கிறது! தன் வாழ்வில் தொலைந்துபோன சந்தோஷத்தை தொலைக்காட்சியின் ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழ்க்குடி மக்கள்!

2007 ஆம் ஆண்டின்படி உலகிலுள்ள தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், பண்ணையிடல் சார்ந்த முக்கியத்துவம் தொழில்மயமாக்கல் தொடங்கியதிலிருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சேவைத் துறையானது உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்களை வேலைக்கு அமர்த்தும் பொருளாதாரத் துறையாக விவசாயத்தை கைப்பற்றிக்கொண்டது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை விவசாயம் வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ள போதிலும், விவசாயப் பொருட்களின் உற்பத்தி நிகர உலக உற்பத்தியில் (நிகர உள்நாட்டு உற்பத்தியின் கூடுதல்) ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது.

இதற்கிடையில் தான் ராகுல் - மோடி வகையறாக்கள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரப் போகிறோம் இலவசமும் , மானியமும் தருவதாக போலிவேசம் போடுகிறார்கள் .

farmer 630தற்போதுகூட விவசாயிகளை தங்கள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி அட்டை மச்சம் தழும்பு வரையிலான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டு வருடத்திற்கு ₹6,000/- தருவதாக கூறி சாதகத்தையும் பெற்று வருகிறார்கள்.....

அதன் பலனை கீீழ்காணும் கதைப்படி வருங்காலத்தில் விவசாயிகள் உணர்வார்கள்...

ஒரு கதை சொல்லும் பாடம்!

========================================

ஒரு நாட்டுல ஒரு பெரிய கெட்டவன் இருந்தானாம். அந்த நாட்டுல இருக்குற யாருக்குமே அவன் நல்லது செஞ்சது கிடையாது. ஊருக்கும், மனிதர்களுக்கும் இவனால எந்தவொரு நல்லதும் நடந்ததில்ல. அதனால, ஊரே அவனை வெறுத்து ஒதுக்கி வச்சிட்டாங்கலாம்.

அந்த கெட்டவனுக்கு வயசான காலத்துல, சின்ன உதவி செய்யக்கூட ஆளில்லாமல் கஷ்டப்பட்டானாம். உடனே ஊர்க்காரர்களை வீடு வீடாக சென்று பார்த்து, "நான் செஞ்சதெல்லாம் தப்புதான் என்ன மன்னிச்சிருங்க.இப்போ நான் திருந்திட்டேன்"னு காலில் விழுந்து கதறி அழுதானாம். நம்பிக்கையில்லாத ஊர்மக்கள் இவன் பேச்சை நம்பவில்லை. ஆனால் அந்த கெட்டவன் சலிக்கவில்லை.

மறுபடியும், ஊர் பெரியவர்களைத் தேடிப் பிடித்து , "என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள். இனி நான் சாகுறதத் தவிர வேறு வழியில்லை. ஆனால் எனக்கு ஒரு கடைசி ஆசை. நான் செத்த பிறகு என் பொணத்தை கயிறு கட்டி தரையில் இழுத்து சென்று புதையுங்கள். இனிமேல் ஊருக்கு கெட்டது செய்ய நினைக்குறவனுக்கு என் சாவு ஒரு பாடமா இருக்கணும்"னு சொன்னானாம்.

பரவாயில்லை இவனுக்கு சாகும்போதாவது புத்தி வந்ததே என்று நம்பி, சரிப்பா...நீ சொன்ன மாதிரியே நாங்க செய்யிறோம்னு சொல்லிட்டாங்களாம்.

கெட்டவன் செத்துப்போன அன்று ஊர்கூடி அவனின் கடை ஆசைப்படியே அவன் காலில் கயிறைக் கட்டி தரையில் இழுத்து சென்றார்களாம். அப்போது பெரிய போலீசுப் படையே ஊருக்குள் வந்து இறங்கியதாம்.

என் பொணத்தை வீதியில் இழுத்துச் சென்று புதைக்க ஊர்க்காரர்கள் சதி திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று நேற்றுதான் புகார் அனுப்பியிருக்கிறார். அதை விசாரிக்க வந்த இடத்தில் அவன் கூறிய புகார் உண்மை என்று புலனாகிவிட்டது என்று கூறி ஊரையே கைது செய்து ஜெயிலில் அடைத்து விட்டார்களாம்!

சங்கிகள் கூட்டம் இந்த கெட்டவனுக்கு அண்ணன்கள்! உஷாரா இருங்கப்பா!

- MN & தருமர்

Pin It