உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ - பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா?

asifa bjp leaders

இந்துத்துவா - பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. அவர்களது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெண்ணுடல் மீது எழுதப்பட்டதாகவே அது இருக்கிறது.

பாஜக கும்பலின் பாலியல் குற்றங்கள் - ஒரு தொகுப்பு

karnataka bjp ministers

 1. பிப்ரவரி 7, 2012-ம் நாள் அன்று, கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக அமைச்சர்கள் லக்‌ஷ்மண் சாவடி, சி.சி.படீல் மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணா பாலேமர் ஆகியோர் ஆபாசப் படம் பார்த்ததை நிருபர்கள் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இதனால் எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து, மூவரும் பதவி விலகினர்.
 1. மார்ச் 20, 2012-ம் தேதி குஜராத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர் சவுத்ரி, ஜீத்தாபாய் பர்வத் இருவரும் சட்டபேரவையில் ஆபாசப் படம் பார்த்ததை செய்தியாளர்கள் கண்டு, அது ஊடகங்களில் வெளியாகி, பெரும் அமளியானது.
 1. அஸ்ஸாம் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொளி 18, பிப்ரவரி 2017 அன்று தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. ஏற்கனவே அவர் மீது 34 வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும், அவர் பதவி விலகவில்லை. பாஜக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 1. மே 19, 2017ம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலித் அணியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சாரத் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைமை அறிவித்தது.
 1. இமாச்சலப் பிரதேசத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணாவின் பெயர் அடிபட்டது, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு செப்டம்பர் 09, 2009ம் தேதி, தான் வகித்து வந்த ஊடக அறிவுரைக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
 1. மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி மீது, வீட்டு வேலைக்காரியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஜூலை 5, 2013ம் தேதி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு, பின்னர் கைதும் செய்யப்பட்டார்.
 1. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக ஆபாசக் காணொளி 2005ம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் அந்தக் காணொளி போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் காணொளியின் பின்புலமாக மோடியின் குழு இருந்ததாக ஜோஷியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
 1. மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்டச் செயலாளர் ரவீந்தர பவந்தாதே பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட காணொளி வெளியானதை அடுத்து, அந்தப் பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வுப் புகார் அளித்தார். வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, தன்னை ஏமாற்றி விட்டார் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜூலை 4, 2017ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என பாஜக மறுத்தது.
 1. ஜார்க்கண்ட் மாநில பாஜக மகளிர் பிரிவுத் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொளி டிசம்பர் 27, 2016ம் தேதி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது. முதலில் அதனை மறுத்த கீதா சிங், பின்பு பதவி விலகினார்.
 1. பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து, 2017, ஜனவரி 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையை முஸ்லிம்கள் செய்த கொலையாக சித்தரித்து, பாஜக கலவரம் ஏற்படுத்த முயன்றது. இறுதியில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
 1. இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கினார். நந்தினி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன நந்தினியைக் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கொடூரமாகக் கொலை செய்து பாழுங் கிணற்றில் வீசினார். ஜனவரி 14, 2017ம் தேதி மணிகண்டனும், அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
 1. ஆர்.ஆர்.எஸ். மூத்த தலைவரும், மேகாலயா ஆளுனராக பாஜக-வால் நியமனம் செய்யப்பட்டவருமான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், டிசம்பர் 7, 2016ம் தேதி நேர்முகத் தேர்விற்காக வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பிரச்சினை வெடித்தது. இதனையடுத்து, ஆளுனர் மாளிகையில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்டோர், ஆளுநர் மாளிகையை இளம்பெண்கள் கிளப்பாகவே மாற்றிவிட்டார் சண்முகநாதன் என பிரதமர், குடியரசுத் தலைவருக்குப் புகார் அனுப்பியதோடு, அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தினர். இறுதியில் அவர் பதவி விலகினார்.

varun gandhi sex scandel

 1. வெளிநாட்டுப் பாலியல் தொழிலாளிகளுடன் விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டு, அந்தப் புகைப்படங்கள் வெளிவராமல் இருப்பதற்காக இந்திய இராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதாக 2016ம் ஆண்டு பாஜக இளம் தலைவர் வருண் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
 1. ஜூலை 21, 2017-ம் தேதி சிறுமியைக் கடத்தி, பாலியல் வல்லுறவு கொண்டதாக திருவனந்தபுரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜெயதேவ் ஆகஸ்ட் 17, 2017ல் கைது செய்யப்பட்டான்.
 1. பிப்ரவரி 27, 2017ம் தேதி மேற்கு வங்காள பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூஹி சவுத்ரி, 17க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.
 1. மோடி முதல்வராக இருந்தபோது, 2002ம் நடந்த குஜராத் கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர்.
 1. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நலியா நகர பாஜக தலைவர் சாந்திபாய் சோலங்கி, 2015 ஆகஸ்ட் மாதம் தன்னிடம் வேலை பார்த்த 25 வயது பெண்ணை (திருமணம் ஆனவர்) மயக்க மருந்து கொடுத்து கெடுத்ததோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்களுடனும் உறவு கொள்ளச் சொல்லி  வற்புறுத்தி இருக்கிறார். பல முறை கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார். இறுதியில் 2015, ஜனவரி 25ம் தேதி அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பாஜக பிரமுகர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர்களை சஸ்பெண்ட் செய்வதாக மாநிலத் தலைமை அறிவித்தது.
 1. உத்தரப் பிரதேசம், உன்னா மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017 ஜூன் மாதம் பாலியல் வன்புணர்வு செய்தனர். அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து 2018 ஏப்ரல் 3ம் தேதி கொலை செய்தனர். குல்தீப் சிங்கின் சாதி செல்வாக்கிற்கு அஞ்சி, மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், ஏப்ரல் 14, 2018ல் மத்திய புலனாய்வுப் பிரிவு போலிசார் குல்தீப் சிங்கை கைது செய்தனர்.
 1. இதன் உச்சகட்டமாக, காஷ்மீர் மாநிலத்தில் 2018 ஜனவரி 10ம் தேதி, குதிரை மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஆசிஃபா-வை 8 பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் கடத்தி, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்திருக்கிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ்.யைச் சார்ந்த ‘இந்து ஏக்தா மஞ்சு’ என்ற அமைப்பு போராட்டமும் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் லால்சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா போன்றோரும் பங்கெடுத்திருக்கின்றார்கள். இருப்பினும் காவல் துறை அந்த 8 பேரையும் கைது செய்திருக்கிறது. பிரச்சினை பெரிதாகவே, குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் செய்த பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
 1. ஏப்ரல் 22, 2018ம் தேதி திரிபுரா மாநிலத்தில் 'அகில பாரத அகண்ட விகாஸ் பரிஷத்'  என்ற இந்துத்துவ அமைப்பின் தலைவர் கோஷ் (58 வயது), 14 வயது சிறுமியை பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக,பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 1. ஏப்ரல் 22, 2018ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற தொடர்வண்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் 2006ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்.

இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்த, இந்துத்துவக் கும்பலின் பாலியல் குற்றங்கள். வெளிவராத செய்திகள் எவ்வளவு இருக்கின்றனவோ..!

காமச் சாமியார்களும், இந்துத்துவ அமைப்புகளும்

இந்துத்துவ அமைப்புகளுக்கும், காமச் சாமியார்களுக்குமான தொடர்பு, தொப்பூள் கொடி உறவு போன்றது. இவர்கள் அரசியல் ரவுடிகள் என்றால், அவர்கள் ஆன்மீக ரவுடிகள்; இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது.

kummanam and sreehari

 1. கேரளாவில் 'புல்லட் சாமியார்' என்று பிரபலமாக அறியப்பட்டவர் சாமியார் ஶ்ரீஹரி. இவர் தொடர்ச்சியாக ஒரு பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டிருந்தார். இவரின் பாலியல் கொடுமைகளைப் பொறுக்க முடியாத அந்தப் பெண், சாமியாரின் ஆணுறுப்பைத் துண்டித்து எறிந்தார். இந்த சாமியாருக்கும், பாஜக மாநிலச் செயலாளர் கும்மனம் இராஜசேகரனுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆனால், ஆணுறுப்பு துண்டிப்பு நாடு முழுவதும் பேசப்பட்டபோது, தனக்கும் சாமியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இராஜசேகரன் நழுவிக் கொண்டார்.

amit shah and jeyandrar

 1. மறைந்த காஞ்சி சங்கர மடச் சாமியார் ஜெயேந்திரன், தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியதும், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து ஏராளமான ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதும், ஒரு பிரபல நடிகையுடன் ஜெயேந்திரன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதும் தமிழகம் அறிந்ததே. ஆனாலும், கடைசி வரை ஜெயேந்திரனுக்கு ஆதரவாகவே பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டன.

nithyananda h raja

 1. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் காணொளி வெளிவந்து, தமிழகம் முழுவதும் அவரது பெயர் நாறிய பின்னும், அவர் அண்மையில் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ADVANI and ASARAM BABU

 1. ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆஷ்ரம் பாபு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி, சிவ்ராஜ் சவுகான், ராமன் சிங் உள்ளிட்டோருக்கு நட்பு இருந்தது.

Manohar Lal Khattar and ram rahim

 1. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சாமியார் ராம் ரஹிம் சிங்கிற்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 2014 அரியானா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராம் ரஹிம் சிங்-ஐ பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். 1995ம் ஆண்டு அரியானா பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதே, தான் சாமியாரைச் சந்தித்து வணங்கியதாகத் தெரிவித்தார். மோடியின் இந்தப் பேச்சிற்குப் பின்னர், அரியானா தேர்தலில் ராம் ரஹிம் சிங், பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்களின்போதும் ராம் ரஹிம் சிங்கின் ஆசிரம பக்தர்கள், பாஜகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்கள். ராம் ரஹிம் சிங் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில்தான் அவருடன் பாஜக நட்பு பாராட்டியது என்பது கவனிக்கத்தக்கது.

Sai Baba and bjp leaders

 1. மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா மீது ஓரினச் சேர்க்கை வல்லுறவு புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். ஆனாலும், அவருடன் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்த வண்ணமாகத் தான் இருந்தது.

இந்து மதமும், பாலியல் முறைகேடுகளும்

பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகளின் பாலியல் குற்றங்கள் தான்தோன்றித்தனமானவை அல்ல. அதற்கு ஒரு தத்துவார்த்த அடிப்படை, கலாச்சார வேர் இருக்கிறது. அதுதான் இந்து மதம்.

இந்து மதத்தின் கடவுளர் கதைகள் எல்லாமே ஆபாசக் களஞ்சியங்கள் தான். அடுத்தவன் மனைவியை கள்ளத்தனமாக அனுபவித்த இந்திரன், சிவனுக்கும், விஷ்ணுவுக்குமான காமக் களியாட்டத்தில் பிறந்த அய்யப்பன், பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்ப்பதையே வேலையாகக் கொண்டிருந்த கிருஷ்ணன், ஆண்டுக்கணக்கில் பார்வதியுடன் சுகித்திருந்த சிவன் என எல்லாமே ஆபாசத்தின் உச்சம். வரைமுறையற்ற பாலியல் புணர்ச்சிதான் இந்துக் கடவுள்களின் பொதுவான அம்சம். மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள், பெரியார் வெளியிட்ட 'கடவுளர் கதைகள்' புத்தகத்தைப் படிக்கவும்.

கடவுளர்களின் யோக்கியதை இப்படி என்றால், அடியார்களின் யோக்கியதை அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. சிவனடியாருக்கு தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்த இயற்பகை நாயனார், பாலியல் கவிதைகளை எழுதிக் குவித்த ஆண்டாள், சமணர்களின் வீட்டுப் பெண்களை கற்பழிக்க உதவுமாறு இறைவனிடம் வேண்டிய திருஞான சம்பந்தர் ("பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுளமே") - இவர்களின் வரலாறுகளைத் தோண்டிப்  படித்தால், இன்றைய இந்துத்துவக் கும்பல்களின் பாலியல் குற்றங்களுக்கான வேர் எங்கிருக்கிறது என்பதை உணர முடியும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

கெடுவாய்ப்பாக, இந்த பாலியல் குற்றக் கும்பல்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கும்பலுக்கு சிறுமி, பருவம் வந்த பெண், வயதான பெண் என்ற எந்த வேறுபாடும் இல்லை. நாம்தான் நமது குழந்தைகளை, பெண்களை உரிய பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்.

aasifa banner against bjp 1

 1. ஆசிஃபா படுகொலைக்குப் பின், கேரள மாநிலத்தில் சேட்டன்மார்கள் 'எங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். பாஜகவினர் யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வர வேண்டாம்' என்று வீட்டு வாசலில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாமும் அதுபோல் எழுதி வைக்க வேண்டும்.
 1. நமது பெண் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் இருக்கும் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரை அடையாளம் காட்டி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்ல வேண்டும்.
 1. எவ்வளவுதான் நட்பு, உறவு இருந்தாலும் இந்துத்துவக் கும்பலை வெளியில் சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; வீடு வரை அனுமதிக்கக் கூடாது.
 1. இந்து மதச் சாமியார்களின் வண்டவாளங்களை பெண்களுக்கு எடுத்துச் சொல்லி, யோகா, தியானம் என்று அவர்கள் பின்னே போகாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
 1. இந்துத்துவக் கும்பல் மோசமான பொறுக்கிக் கும்பல் என்பதை விடாமல் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இத்தனை அட்டூழியங்கள் செய்த பின்னும், கலாச்சாரத்தைக் காக்கவே அவதரித்தவர்கள் போல் அவர்கள் பேசுகிறார்களா? இந்தக் கட்டுரையை அவர்களிடம் படிக்கக் கொடுங்கள். பாஜக என்றால் 'பாலியல் ஜல்சா கட்சி' என்றுதான் அர்த்தம் என அழுத்தமாகச் சொல்லுங்கள்.

ஆசிஃபாக்களை இந்தக் குற்றக் கும்பலிடம் இருந்து காக்கும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது.

- கீற்று நந்தன்

Pin It