flood relief

தொடர் மழை தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டி போட்டது. எங்குநோக்கினும் வெள்ளம். எங்கும் மின்சாரம் கிடையாது. எங்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடையாது. எந்த ஒரு ஊடக கவனமும் கிடையாது. இப்படி ஒரு நிலை ஒரு ஐந்து நாட்களுக்கு முன்னால். இப்போதும் அப்படித்தான் ஆனால் மழை விட்டு விட்டு.

உண்மையான ஒரு மக்கள் நல அரசு என்ன செய்திருக்க வேண்டும் அன்றே கூடி விவாதித்து முடிந்த வரை மத்திய அரசிடம் நிவாரண பொருட்களை வாங்கி உடனடியாக மக்களுக்கு வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளத்தில் இருந்து காவல்துறை உதவியுடன் மீட்டிருக்கவேண்டும். ஆனால் எதையும் செய்ய வில்லை இந்த ஸ்டிக்கர் அரசு.

flood relief 355இணையம் வளர்ந்து வருகிறது. அதை பற்றி மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களே உள்ளது. ஒரு உண்மையை சொல்லவா, இந்த தன்னார்வலர்கள் அனைவரும் இணையதளத்தின் வழியே உதவி செய்ய ஒருங்கிணைக்கப்பட்டவர்களே. அரசு மழையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதை உணர்ந்தவர்கள் நாம் ஏன் வெட்டியாக நடிகர்களுக்காக அடித்து கொள்ள வேண்டும். ஏன் நாம் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடாதா என ஒன்றினைந்த ஒரு சிறு கூட்டம் தான் இன்று ராணுவமும் அரசும் கூட உதவ முடியாத இடங்களுக்கு சென்று உதவினர்.

என்றும் இல்லாமல் இளைஞர்கள் குளிரையும் , மழையையும் கூட பொருட்படுத்தப்படாமல் தன்னலம், விளம்பர நோக்கமில்லாமல் தன் சுய செலவில் உதவ மக்கள் அவர்களை வாழ்த்த அரசு வேடிக்கை பார்த்துகொண்டிருந்து. மன்னிக்கவும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும் பிரவாயில்லை அந்த தன்னார்வலர்கள் மீது வன்முறையை ஏவி உதவி செய்தால் நாங்கள் மட்டும் தான் செய்வோம். நீங்க செய்யக்கூடாது என்றும் , உங்கள் நிவாரண பொருட்களில் தங்கத்தாரகை புரட்சி தலைவியின் ஸ்டீக்கர் ஒட்டித்தான் கொடுக்கனும் என சொன்னது ஒரு கூட்டம். முதன்முறையாக இளைஞர்களை கண்டு அரசு அஞ்சி நடுங்கியது. ஒரு விதத்தில் நம் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வெற்றியே. அய்யா நீங்கள் கண்ட கனவு பலித்துவிடும் கலங்காமல் உறங்குங்கள்.

மேலும் ஒரு பக்கம் வட இந்திய ஊடகங்கள் சென்னை, கடலூர் வெள்ளத்தை கண்டுகொள்ளவே இல்லை. நடிகர் சித்தார்த் அவர்களின் பொன்னான முயற்சியாலும், பல தன்னார்வலர்களின் முயற்சியாலும் போராடியே பெறவேண்டி இருந்தது ஊடக கவனத்தை. இதோ அந்த மின்னஞ்சல்

ஒரு புறம் தமிழகத்தை சாராத நடிகர்கள் எல்லாம் லட்சக்கணக்கில் நன்கொடையாக வாரிவழங்க. நம்ம சூப்பர் ஸ்டார்(இனி நான் தவறி கூட அப்படி சொல்ல மாட்டேன்) ஏதோ பத்து லட்சம் கொடுத்தார். உங்களுக்கே தெரியுமே நம்ம ரஜினி ஒரு படத்துக்கு எவ்வளவு கோடி வாங்குறார்னு. ஆபத்து காலங்களில் கொஞ்சம் தாராளமாக உதவினால் என்ன அந்த மனிதருக்கு.

ஆளாளுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதுதான் சரியான நேரம் என ஆளுங்கட்சியை குறை சொல்லிவிட்டு ஆளுங்கட்சி ஸ்டீக்கர் ஒட்டுகிறது எனகூறிக்கொண்டே உதய சூரியன் படம் போட்ட பையில் நிவாரண பொருட்களை வழங்குகிறதாம். கேட்டால் அரசியல் ஆதாயம் இல்லாத முயற்சியாம்.

சென்னை மழை நமக்கு பல உண்மைகளை புரிய வைத்தது. வட இந்திய அரசியல்வாதிகள் பலவும் தமிழகத்தை வெறும் வாக்குகளுக்காக மட்டுமே நேசிக்கின்றனர் என்று. இங்கு மழையில் மக்கள் பரிதவித்து கொண்டிருக்க அவர்கள் தங்களுக்குள் அடித்து கொண்டார்கள். இந்த மழைக்கே இப்படி இருப்பவர்கள் எப்படி நமக்கு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் உதவுவார்கள் என நம்பலாம்?

இந்த சென்னை மழை ஒரு அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அது மனித நேயம், மதச்சார்பற்ற உதவி, இளைஞர்களின் ஆக்கப்பூர்வ சக்தி என அனைத்தையும் வெளிப்படுத்தியது. இந்து ஒருவன் முஸ்லீம் வீட்டில் தங்கினான். கிறிஸ்தவன் முஸ்லீம் தயாரித்த உணவை சாப்பிட்டான். பிராமணண் ஒரு கிறிஸ்தவனின் மீட்பு படகில் பயணித்தான். இங்கு மதமும் இல்லை, சாதியும் இல்லை எல்லாம் மனித நேயம், தூய இதயம். உண்மையில் எந்த அயல்நாடுகளிலும் காண முடியாது இந்த மனித நேயத்தை. கர்நாடகம் உதவ முன்வந்தது, கேரளம் உதவ முன்வந்தது. ஆனால் இங்கு உள்ள அரசியல்வாதிகளின் கேவலமான பிரித்தாளும் கொள்கையால் அவை அவமரியாதை செய்யப்பட்டது.

நிச்சயம் Twitter தளத்தை பாரட்டியே ஆகவேண்டும் இங்கு தான் தொடங்கியது அந்த தன்னார்வலர்களின் கூட்டு. நானும் அதில் பங்குபெற்றேன் என்பதில் மகிழ்ச்சியே.

கடலூரில் உதவி வரும் சில Twitter நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

http://twitter. com/vallavan003

http://Twitter. com/iamvariable

http://twitter. com/alien420_

கடலூருக்கு சென்ற போது, நேரில் கண்டேன் உண்மையான மனித நேயத்தை இவர்கள் வழியாக. ஏதோ என்னால் முடிந்தது ஒரு இரண்டு நாள்கள் அவர்களுடன் இணைந்து களப்பணி ஆற்றினேன்.

நிச்சயம் இவர்களை பாராட்டவேண்டும் கடலூருக்காக எங்கிருந்தோ வந்து உதவிய நல்லுள்ளங்களை பாராட்ட வேண்டும்.

முடிவாக அரசு என்பது மக்கள் நலனுக்காக தானே! மக்களை புறக்கணித்த அரசு என்ற அமைப்பு தேவையா! புறக்கணியுங்கள் அரசை. இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள். நேரம் வந்து விட்டது. கலாம் கனவை நினைவாக்க வாரீர்!!

Pin It