நண்பர்களே! இக்கட்டுரையை எழுதும் இத்தருணத்தில் என் மடியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒன்றரை வயது. என் எதிர் வீட்டு அர்ச்சகரின் குழந்தை. நாங்கள் இந்த வீட்டிற்கு வந்த பிறகு அவர்கள் திருமணமாகி எதிர்வீட்டிற்கு வந்தார்கள்.

பின்னர் அவர்களுக்கு இந்தக் குழந்தை பிறந்தான். அவன் ஓரளவு நடந்து பழகியவுடன் முதன் முதலாக வந்தது எங்கள் வீட்டிற்குத்தான். இப்போது பேசப் பழகுகிறான். எல்லோரையும் பார்த்து 'கா.. கா..' என்று மட்டுமே அழைக்கத் தெரிந்த எங்களின் செல்லக் குரல் அவன்.

எங்கள் வீட்டில் அசைவம் சமைத்தபோதிலும், அவனுக்காக சில நேரம் தயிர்சாதம், சாம்பார் சாதம் சமைத்து நீலா ஊட்டி விடுவார். அவனுக்கு என் மீதுதான் அதிக ப்ரியம். ஒரு நாள் தவறாமல் மாலை நேரம் இங்கு வந்து விடுகிறான்.

chinmayi_350எங்கள் அடுக்கத்தின் கீழ்த் தளத்தில் இரண்டு குடும்பம் மட்டும் தான் பார்ப்பனரல்லாதவர்கள். ஏனைய மூன்று குடும்பங்களுமே பார்ப்பனர்கள். ஆனால் அர்ச்சகர் வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்குத்தான் அந்தக் குழந்தையை அனுப்புவார்கள். ஏனைய பார்ப்பனர்கள் வீட்டிற்குக் கூட அவனை அனுப்பி நான் பார்த்ததில்லை.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் என்னுடன் பழகும், புழங்கும் சக மனிதர்களுக்கு என்னால் இயன்ற அளவு அன்பைக் கொட்டிக் கொடுப்பேன். அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகளை நான் மதிப்பேன். அவர்களில் எவரேனும் என் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையோ, உணவுமுறையோ தவறு என்றால் அதை கடுமையாக எதிர்ப்பேன்.

உனக்கும் எனக்கும் எல்லோருக்கும்தான் பூமியில் வாழும் உரிமை உள்ளது. அந்த சம உரிமை எங்கே பாதிக்கப்படுகிறதோ, எங்கே அது தட்டிப் பறிக்கப்படுகிறதோ அங்கேதான் மனிதன் கூட்டம் கூடி தனக்காகப் பேசி தன் உரிமைக்காக இயக்கம் கட்டுகிறான். தலித் இயக்கங்களும், திராவிட இயக்கமும், தமிழ்த் தேசியமும் இங்கிருந்துதான் உருவாகின்றன. தன்னைக் காத்துக் கொள்ளும் கோட்பாடுகளை உருவாக்குகிறான் வாய்ப்பிழந்தவன்.

நீண்ட காலப் போராட்டத்தின் பின்னரே சமூகத்தில் சமவாய்ப்பற்று பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் உரிமை கிடைத்தது; அதுவும் முழுமையாக அல்ல. இட ஒதுக்கீடு என்னும் உரிமை சென்று சேராத வர்க்கங்களும் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு என்பதைக் காட்டிலும் சமூக அந்தஸ்துக்கு என்பது பொருத்தமாக இருக்கும். ஏழையாகவே இருந்தாலும் பார்ப்பனர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களே. பணமே இருந்தாலும் சூத்திரனுக்கோ, தலித்துக்கோ பார்ப்பனர்களுக்குரிய அந்தஸ்து கிடைத்து விடுவதில்லை. இந்த இடத்திலிருந்துதான் சின்மயி விவகாரத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

சின்மயி மிகச் சிறந்த பாடகர். அவரது பாடல்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனக்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்னும் புகாரின் பேரில் டிவிட்டர்களான ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதான பின்னர்தான் தெரிந்தது மீனவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் தொடர்பாக சமூக விரோதக் கருத்துக்களை சின்மயி எழுதி வெளியிட, ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் கடுஞ்சொற்களில் அவரிடம் உரையாட, அவரோ திட்டமிட்டு இவர்கள் வசவியதை எல்லாம் பிரதி எடுத்து விட்டு தான் எழுதியதை எல்லாம் அழித்து விட்டார். அவர் போலீசில் புகார் கொடுத்தபோது கூட 'முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி எப்படி எல்லாம் கிண்டல் செய்திருக்காங்க பாருங்கோ' என்றுதான் பலம் கூட்டியிருக்கிறார்.

மக்கள் பிரச்சினைகளில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான குரலை ஒலிப்பதில் சமூக வலைத்தளங்கள் ஆற்றி வரும் பங்கைக் கண்டு பொருமிக் கொண்டிருந்த ஆளும் வர்க்கத்திற்கு, சின்மயி விவகாரம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. உடனடியாக ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைது செய்யப்பட்டதில் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை இருக்கிறது. 'இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்' என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ் கூறியிருப்பது இணையதளங்களில் நிலவும் கட்டற்ற கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருத வேண்டும். இதில் வினோதம் என்னவென்றால், இடதுசாரிகளை ஆபாசமாக சித்தரித்து கவிதை எழுதி, அதை 'கருத்துச் சுதந்திரம்' என்று கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதை வரவேற்றிருப்பதுதான்.

ராஜனின் எழுத்துக்கள் ரசிக்கத்தக்கவை அல்ல. சின்மயியிடம் இவர் ஓர் அரசியல் வாதத்தை நடத்தியிருந்தால் – வேண்டாம், அது வெட்டி வேலைதான் – ‘சின்மயியிடம் விவாதிக்கிறேன் பேர்வழி’ என்று அவர் விரித்த வலையில் போய் சிக்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. இங்கே ராஜனின் குரலை அடித்தட்டு சமூகங்கள் தங்களுக்கிடையில் வசவிக் கொள்ளும் மொழியாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் இத்தகைய வார்த்தைகளை நேரடியாக ராஜன் போன்றோர் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் வெவ்வேறு விஷயங்களில் ஆபாசம் கலந்த எள்ளல் தொனி அவரது மொழியில் இருக்கி்றது.

சின்மயின் மொழி ராஜனின் மொழியை விட ஆபத்தானது மட்டுமல்ல, ஆபாசமானதும் கூட. பார்ப்பனரல்லாதோரின் தலைமுறை மீது வைணவம் குதத்தில் சொறுகிய வாளைப் போல அது இறங்கியிருப்பதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. மீனவர் படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு இவர்கள் அவரைக் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்கலமா? என்ற கேள்வியில் ஒரு நியாயம் உள்ளது. நிச்சயமாக நான் நடிகர் மாதவனிடம் போய் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க மாட்டேன். ஆனால் மாதவன் பொதுப் பிரச்சனையில் கருத்துச் சொல்லி அது முரண்பாடாக இருந்தால் மாதவனிடம் ஈழம் தொடர்பாக கருத்துச் சொல்லும் படிக் கேட்பேன். அந்த வகையில் மின்சாரத் திருட்டு தொடர்பாக ஓர் இணைப்பைக் கொடுத்து. தன் வீட்டின் அருகிலும் அப்படியான திருட்டுகள் நடப்பதாக எழுதியதாகவும், கிட்டத்தட்ட குடிசைப்பகுதி மக்களை அவர் திருடர்களாகச் சொன்னதாகவும் உடனே இவர்கள் கேள்வி எழுப்ப, தொடர்ந்து சின்மயி இது மாதிரி அரிய பல கருத்துக்களைக் கொட்ட, இவர்களும் விட்டேனா பார் என்று அவரைத் திட்டியிருக்கிறார்கள்.

இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கிறது. சின்மயின் அம்மா ராஜனை என்ன செய்கிறேன் பார் என்று சவால் விட்ட ஆடியோ ஒன்றையும் கேட்டேன். ஆக மொத்தம் அவர்கள் திட்டமிட்டு இவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டுமென்றே டிவிட்டியிருக்கிறார்கள்.

அப்படி எழுதியதுதான் // மீனவா மீனைக் கொல்றா மீனவனை இலங்கை இராணுவம் கொல்றா// என்று மீனவர் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். வினவு குழுமத்தின் நாடகப் பிரதியொன்றின் வசனம் என்கிறார்கள் சிலர். அது வினவு பிரதியாக இருந்தால் என்ன, கனவுப் பிரதியாக இருந்தால் என்ன ? அங்கே சின்மயி அதை அவருடைய பதிலாகத்தான் பயன்படுத்துகிறார். ஆக மொத்தம் அவருடைய கருத்துதான் அது. இன்னொரு இழையில் தான் அப்படிச் சொன்னதை உறுதியும் படுத்துகிறார்.

அது போல ‘சோ கால்ட்’ தலித் தலைவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களை வைத்து பிரச்சனை செய்கிறார்கள் என்பது போன்று எழுதுகிறார். ஆக மொத்தம் சின்மயி எழுதிய எல்லாமே சமூக விரோதக் கருத்துக்களாக உள்ளன. சின்மயின் கோபம் என்பது பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தலித், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பார்ப்பனக் கருத்தியலாக உள்ளது.

காலம் காலமாக அறிவுத்தளத்தில் இப்படியான கருத்துக்களையே பார்ப்பனர்கள் கொண்டிருந்தாலும் பெரும் ஊடகங்களில் அவர்களுடன் பார்ப்பனரல்லாதார் மோத வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இன்றும் கூட அதே நிலைதான் தொடர்கிறது. பார்ப்பனீயத்தைப் பாதுகாத்துக் கொண்டே தலித்துக்களை ஒடுக்கும் சூத்திரப் பார்ப்பனீயம், பார்ப்பனீயத்திற்கு இணையாக இல்லை என்றாலும் அதுவும் அச்சு ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்தும் நிலைதான் உள்ளது.

இணைய தளத்தில் 2005-க்குப் முன்னர் வரை பார்ப்பனர்கள் மட்டுமே அதுவும் அமெரிக்கப் பார்ப்பனர்கள் மட்டுமே செல்வாக்குச் செலுத்தினார்கள். பின்னர் இணைய வசதிகள் கிராமங்கள் வரை பரவியதன் விளைவாகவும், சமூக வலைத் தளங்கள் உருவானதன் விளைவாகவும் எழுத வாய்ப்பில்லாதவர்கள், நினைப்பதை கட்டற்ற சுதந்திரத்தோடு எழுதுகிறார்கள். இப்போது வெகுசன ஊடகங்கள் சமூக வலைத் தளங்களில் கட்டற்ற சுதந்திரம் தேவையா என்று விவாதிக்கிறார்கள். உண்மையில் கட்டுப்பாடே இல்லாத சுதந்திரத்தோடுதான் பார்ப்பனர்கள் தங்களின் கருத்துக்களை அச்சு, காட்சி ஊடகங்களில் பரப்பி வந்தார்கள்.

இங்கே கட்டுப்படுத்த முடியாத தொழில் நுட்பத்தைக் கட்டற்ற சுதந்திரம் என்று தட்டையாகப் புரிந்து கொண்டு, ஏதோ இவர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு கட்டுரைகள் எழுதுவது போலவும், இணைய பாவனையாளர்கள் கட்டுப்பாடற்று கருத்து எழுதுவது போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள். உண்மையில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இணைய ஊடகம்தான் தமிழகத்தின் சமகாலப் பிரச்சனைகள் சகலத்திலும் எழுச்சி ஏற்பட பங்காற்றியிருக்கிறது. ஈழம், தூக்குத்தண்டனை எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு என சகலத்திலும் அதன் பங்களிப்பு அளப்பரியது என்னும் நிலையில்தான் சின்மயியோடு இவர்கள் மோதியதைக் காண வேண்டும்.

பொது வெளியில் கருத்துச் சொல்லும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற பார்ப்பனர்களை நான் பார்க்கிறேன். அதே நேரம் எத்தனையோ பார்ப்பன நண்பர்கள் நம் சமகாலப் போராட்டங்களில் பங்கேற்பவர்களாக இருக்கிறார்கள். பொது வெளியில் அவர்கள் கருத்துச் சொல்லும்போது அவர்கள் மீது எவரும் இப்படிப் பாய்வதில்லை.

சின்மயி தன்னை அய்யங்கார் என வெளிப்படையாக எழுதுகிறார். அதுவும் iyengar என்று எழுத வேண்டிய வார்த்தைகளை HIGH engar என்று திமிரோடு எழுதுகிறார். நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை இத்தனை பார்ப்பனத் திமிரோடு எழுதும் சின்மயி போன்றவர்கள், இம்மாதிரியான வசவுகளில் சிக்குவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

இப்போது சின்மயியை ஷோபா சக்தி, லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா போன்றோர் ஆதரிக்கிறார்கள். ராஜனையும், சரவணகுமாரையும் டிவிட்டர் பொறுக்கி என்கிறார் 'இலங்கை ரைட்டர்' ஷோபாசக்தி. 'இணையப் பொறுக்கி, செக்ஸிஸ்ட்' என்கிறார் லீனா மணிமேகலை. பொதுவாகவே இவர்கள் எல்லா நிலைகளிலும் தமிழர் எதிர்ப்பு நிலை எடுப்பவர்கள் என்னும் நிலையில் இதிலும் ஒன்றிணைகிறார்கள். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும், செக்ஸியிஸ்ட் என்றும் இணையப் பொறுக்கிகள் என்றும் சொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? தமிழச்சியை இணையத்தில் அவமதித்ததோடு, ‘அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா என்று நாங்கள் பள்ளி செல்லும்போது பாடுவார்கள்' என்று தலித் வேடம் கட்டி, ஆடி அம்பலப்பட்ட பின்னர் வெளியிட்ட மொக்கைக் கட்டுரையில் திருத்தம் கொண்டு வந்த இந்த யோக்கிய சிகாமணி, அரசியல் ரீதியாக நம் சமகாலப் பிரச்சனைகளில் நிற்கும் ராஜனை இணையப் பொறுக்கி என்கிறார்.

உள்ளூர் பூர்வகுடிப் பழங்குடிகளைக் கொன்ற டாடாவிடமே பணம் வாங்கி, கொல்லப்பட்ட பெண்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று படம் எடுக்கும் லீனா மணிமேகலையும் இவர்களை இணையப் பொறுக்கிகள் என்கிறார். மார்க்ஸ் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளை ஆண் குறியோடு ஒப்பிட்டு பரபரப்புக் கவிதை எழுதிய அதே லீனா, ராஜனை செக்ஸியிஸ்ட் என்கிறார். ‘மதுரை பொண்ணு’ புகழ் சாருவும், ஜெயமோகனும், தினமலரும், பார்ப்பன ஊடகங்களும் இவர்களோடு இணைகிறார்கள்.

இதில் நுட்பமான இன்னொரு விஷயம் என்னவென்றால் லீனாவோ, ஷோபா சக்தியோ மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதும் பேசியதில்லை. மக்கள் பிரச்சனைகளை வைத்து நிதி வாங்கி ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள். ஷோபாசக்தி என்னும் அந்தோணி தன் வாழ்நாளில் மொத்த எழுத்தையும் இலங்கை அரசுக்காக மட்டுமே செலவிட்டவர். அதற்காக தன்னை தலித்தாகக் காட்டி விற்றவர். இவர்கள் பெண் ஒடுக்குமுறை விவாகரம் ஒன்றை கையில் எடுக்கிறார்கள் என்றாலே அது தமிழர்கள் தொடர்பான ஏதோ அரசியலை காலி பண்ணத்தான். ஏனென்றால் இவர்கள் தலித் முரண்பாட்டை வைத்து ஈழப் போராட்டத்தை காயடிக்க முயன்ற வரலாற்றை நாம் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறோம். அந்த வகையில்தான் இவர்கள் இப்போது சின்மயி HIGH யங்காருக்காக களமிறங்கியிருக்கிறார்கள். ‘பார்ப்பனப் பெண்ணே என்றாலும்’ என்றுதான் விவாதத்தைத் துவங்குகிறார்கள். பார்ப்பனப் பெண்ணே என்றாலும் வயலில் இறங்கி களை பிடுங்குவதில்லை; தலையில் கீரைக்கட்டை சுமப்பதில்லை; கருவாட்டுக் கூடையை சுமப்பதில்லை. சமூக அந்தஸ்தில் இவர்களும் அவாளும் எப்போதும் ஒன்றும் அல்ல. அப்படியிருக்க அதென்ன ... ‘பார்ப்பனப் பெண்ணே யென்றாலும்....'

சின்மயிக்கு ஆபாசத் தொல்லை கொடுத்ததாகச் சொன்ன ராஜனும், சரவணகுமாரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவெளியில் பெண்கள் குறித்து அநாகரிகமாக உரையாடியதற்கான தண்டனையை அவர்கள் சிறையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சின்மயி மீது தொடுத்த ஆபாசத் தாக்குதலுக்கான துல்லியமான ஆதாரம் இதுதான் என்பதை லீனா மணிமேகலையோ, ஷோபாசக்தியோ கொடுத்தால் நன்றாக இருக்கும். அவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் மட்டுமல்ல சின்மயியால் கூட கொடுக்க முடியாது. இது போன்ற பல மொக்கை வழக்குகளை கொஞ்சம் நேர்த்தியோடு எதிர்கொண்டால் ஒரு வருடம் கூட தாங்காது.

மீனவனைக் கொல்வது சரியென்றும், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், தலித்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்து சொன்ன சின்மயிக்கு என்ன தண்டனை? குறைந்த பட்சம் அவர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவாரா? சின்மயி கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சின்மயி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரி அம்பேத்கர் பாசறை சார்பில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமா? இல்லை, சூத்திரர்களுக்கு ஒரு நீதி, பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி என்பதுதான் இங்கேயும் நிலைநிறுத்தப்படுமா?

- டி.அருள் எழிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

36 comments

36
பிடுங்கி
தோழர் அருள் எழிலனின் பதிவு பல உண்மைகளைத்தொடுகிறது.பல பொய் முகங்களை தோலுரிக்க முனைகின்றது.நன்றி

/பெண்ணிலை வாதக் கருத்தென்ற மாயையுள் ஒரு ஜனக் கூட்டத்தி ந் அழிவைச் சுருக்கி விடத்துடிகின்றார்கள் மெத்தன அரசியல்வாதிகள்.இந்து ராம் எப்போதோ சொன்ன கருத்தே பாடகி சின்மயியின் கருத்தாக மருவிப் போயுள்ளதாக கதைபண்ணி சின்மயிமேல் எந்த தவறுமேயில்லை.மீனைககொன்று தின்கின்றவர்களை கடற்படை கொல்வதில் தப்பேதுமில்லை என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அது அவரின் கருத்தாக இல்லையே அதை இந்து ராம் எப்போதோ சொல்லியாகிற்றே என்று வரிந்து கட்டிக் கொண்டு வாதாட ஆரம்பித்திருக்கின்றார்கள்.அரை வயிற்றுக்கு கஞ்சிக்கே நாளும் அல்லாடுகின்ற கடற்தொழிலாளர்களிடம் இத்துணை வஞ்சினமா என்று கேட்குமளவிற்கு பல ஜாம்பவான்களும் அந்தப்பாடகி சார்பில் வாதாடித் திளைக்கின்றார்கள். வார்த்தைகள் எப்போது ஆரம்பித்தன என்று எவருக்கும் தெரியாதாதல் எல்லாமே எப்போதும் இருந்தவைகளே ஆதலால் பூமிப்பந்தில் இருக்கின்ற விடயங்கள் யாவுமே மறுபடி மறுபடி உருமாருகின்றனவே அன்றி ஒருவருக்குச் சொந்தமாகாது ஆகையால் சின்மயி அந்தக் கருத்துக்குச் கொஞ்சமும் சொந்தமில்லாதவர் என கீதா உபதேசம் செய்யத் துணிந்து நிற்கின்றார்கள் பலான பேர்வழிகள். சின்மயியின் வார்த்தைகள் முன்பே இருந்ததைப்போலவே, பெண்ணைப் பழித்தவ்ரின் வார்த்தைகளும் முன்பே இருந்திருக்கும் என்கின்ற குறைந்த பட்ச அறிவின்றி குதர்க்கம் பேசி முகநூல் பக்கங்களை முழுகடித்து வைத்திருக்கின்றார்கள். முன்பே இருந்த வார்த்தை உபயோகித்த ராஜனுக்குத் தண்டனை சின்மயிக்கு முட்டுக்கொடுப்பா???? சாதிய இடஒதுக்கீடு, மீனவர்கள் பிரச்சினை, அருந்ததியர்க்கான உள் இட ஒதுக்கீடு என்பவை பெரிதா????? அல்லது பாலியல் வசை அல்லது வசவுகள் பெரிதா ?????என்று பலரும் மண்டையைப் பிய்த்து ஆராய்கின்றார்கள்.இதில் மிக முற்போக்குச் சிந்தையாளார் என்று முகம் போத்தியவர்களும் விழுந்து புரள்கின்றார்கள். பாதிக்கப்பட்டால் போலீஸுக்கு போகும் உரிமை சின்மயிக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான் இருக்கிறது. பெண், ஆண், திருநங்கைகள்,மீன்பிடியாட்கள் என்று எல்லோரும் போகலாம். ஆனால் முறைப்பாடு கொடுத்தவனையே கைதாக்கும் நிலைமையில் தான் தமிழக அரசு இருக்கிறது பிராமணப் பெண்ணென்பதால் சின்மயிக்கு விதிவிலக்கு என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.சின்மயி ஒரு சராசரி பெண்ணாயிருந்தால் இந்த நடவடிக்கை சாத்தியமா ???
இருளார் பெண்களை வன்புணர்வு செய்த போலிஸ் இன்னும் மிக சுதந்திரமாக நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் .
ஒரு சராசரி பெண்ணால் இது சாத்தியமா ??எனும் பலத்த குரல்களுக்கு எவரிடமும் பதில்லில்லை.இணையத்தில் பத்திரிகைகளில் புத்தகங்களில் எல்லாவித பெண்களின் வக்கிரங்களையும் கேவலமாக வர்ணித்த புனைந்து புனைந்து புணர்ந்து துப்பிய பலரும் சின்மயிக்கு முட்டுக் கொடுத்து நிற்பது மனதிற்கு பிராந்தியாய் உள்ளதாய் பலரும் பதிவிடுகின்றார்கள். பொதுத் தளத்தில் பெண்களை கேவலப்படுத்தப்படுவதை பொறுக்க முடியாதவர்கள் ஒரு இனத்தின் மீதான கொடுமையை விதைக்கலாமா??/
Chandar
Pulling out another caste blanket.. Nalla kulir kaayungappa!!!!!
Guest
எக்சலென்ட்
DR RAVI
She does not know how to behave in the public, in Tamil there is a proverb; do not throw stone on mirror house; it will damage both; that is what happened, she lost credibility and will take years to heal and come out of that.

First of all she does not even have the maturity as she is too young to comment on social issues as she does not have maturity or experience. We must find fault with ourselves because the issue of Tamil in Sri Lanka and world over ditching of Tamils reality did not reach all kind of Tamil people.

Sir leave the matter with this let us look forward
மண்குதிரை
தாழ்த்தப்பட்டவர் ஒட்டுண்ணிகளா ?? http://www.maamallan.com/2012/10/blog-post_26.html
thamizh
மிக மிக அற்புதமான கட்டுரை...எளிமையாய் ஆனால் ஆழமாய் சிந்திக்க தூண்டும் கட்டுரை இதை துண்டறிக்கையை போட்டு பொதுமக்களிடம் கொடுக்க வேண்டும்....அருள் எழிலன் தோழருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்...
சின்மயிடம் தவறாக பேசியதாக சொன்ன புகாருக்கு சிறையில் உள்ளனர்
சின்மயி ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக பேசியதற்காக வெளியே சுதந்திரமாய் உலாவருகிறார்.
இதுதான் பார்ப்பனீயம்...
இதுதான் மனு தர்மம்
பெண்ணை கொச்சைபடுத்திவிட்டனர் என கூப்பாடு போட்ட இலக்கிய வியாபாரிகளே
ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக பேசிய சின்மயியை சிறைக்கு தள்ள ஏன் கூக்குரல் இட மறுக்குறீர்?
பார்பனரை விட பார்பனிய(வியா)வாதி ஆபத்தானவன் தான் என அய்யா பெரியார் சும்மாவா சொன்னார்?!!!
அமைதி விரும்பி
கட்டுரையும் அதற்கு கொடுக்கும் கருத்துகளும் சுருக்கமாக இருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

இது என் வேண்டுகோள்.

அமைதி விரும்பி.
suresh
தமிழ் மற்றும் பொதுமக்கள் விரோதிகளை தோலுரிக்கும் போதே பொருப்புமிக்க ஒரு ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்தையும்..வெளிப்படுத்தியிருக்கிறார்...மகிழ்ச்சி
yarooruvan
சின்மயி அவ்வாறு சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம், குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக.வினவு தளத்தில் வெளியான நாடகத்தில் இந்து ராம் பேசுவதாக வரும் வசனததை அவர் இணையத்தில் எழுதியாக சொல்பவர்கள் ஆதாரம் தர வேண்டும்.அருள எழிலனுக்கும் அ.மார்க்ஸ்,லீனா, ஷோபா சக்திக்கும் உள்ள முரண்களின் அடிப்படையில் இதை அணுகியுள்ளார்.நீ ஆதரித்தால் நான் எதிர்ப்பேன் என்ற மொண்ணை பகுத்தறிவுதான் இதில் உள்ளது.சின்மயிக்கு 100% ஆதரவு என்ற நிலையை அவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. 'மனிதாபிமானி' அருள முதலில் பிரச்சினைகளை தனக்கும் பிரருக்கும் உள்ள முரண்களின் அடிப்படையில் அணுகுவதை கைவிடவேண்டும்.
சீனு
//மீனவனைக் கொல்வது சரியென்றும், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், தலித்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்து சொன்ன சின்மயிக்கு என்ன தண்டனை?//

திரும்ப திரும்ப சொன்னால் பொய் உண்மையாகிவிடும் என்கிறீர்கள். இதில் முஸ்லீம்களையும் கொம்பு சீவி விடுகின்றீர்கள். அவர்கள் எப்பொழுதுமே ஆதாரத்தை பார்க்காமலேயே சண்டை போடுபவர்கள் :-)

இதுக்கு...

https://www.facebook.com/photo.php?fbid=411289698926074&set=a.132041706850876.24685.100001351434350&type=1&theater&notif_t=photo_reply

பதில்...

https://www.facebook.com/photo.php?fbid=4275911708332&set=a.1735016867549.95475.1602415814&type=1&theater

//அவர் பாடலில் உள்ள ஆபாச வார்த்தைகள் நீங்கள் கேட்டதில்லையா?//

"சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?" - அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

இப்பொழுது கூட 'ராஜனின் ஆதரவு' தளத்தில், சின்மயியின் சாதியின் காரணமாகவே ராஜனுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இதில், ராஜனின் தாக்குதல்கள் மறைக்கப்படுகின்றன. இதற்காகவே ராஜனை ஆதரிக்கின்றனர்.

கருத்து சுதந்திரம் வேறு, அடுத்தவரை கேவலப்படுத்துவது / திட்டுவது என்பது வேறு.

மீனவர் பிரச்சினையில் சின்மயி தவறான கருத்து சொன்னதால் (அப்படி சொல்லவில்லை என்கிறார் சின்மயி), மீனவர்களுக்கு ஆதரவாக படம் எடுத்த லீனா சின்மயியை ஆதரிப்பது தவறு என்கிறார் இன்னொருவர்.
டி.அருள் எழிலன்
ஹலோ யாரோ ஒருவன் - உமக்கு என்ன தெரியும் குறைந்த பட்சம் சின்மயியை நேரில் நீங்களோ நீங்கள் சொல்லும் நபர்களோ கூட பார்த்திருப்பீர்க்ளா?

இருவர் கைது செய்யப்பட்ட உடனே அவசரப்பட்டு எழுதாமல் இரண்டு நாள் மௌனம் காத்தவன் நான். அதற்கு காரணம் உள்ளது அதை பெயரே இல்லாத உங்களைப் போன்றோரிடம் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. டிவிட்டர் பொறுக்கிகளிடம் இரக்கம் காட்டவே கூட்டாது என்று ஷோபாசக்தியும் லீனாவும் எழுதிய பின்னர்தான் நான் இதை எழுத ஆரம்பித்தேன். அந்த வெண்ணைகள் ஆதரித்தால் எதிர்ப்பது, அவர்கள் எதிர்த்தால் ஆதரிப்பது என்ற மொக்கை கோட்பாடு என்னிடம் கிடையாது.

உண்மையில் நாம் ஆதரிப்பவற்றை எல்லாம் எதிர்ப்பது ஒன்றுதான் அவர்களின் வாடிக்கை. ஒன்றை மட்டும் சொல்கிறேன் இருவரின் கைதைத் தடுக்க பல மணி நேரம் போராடியவர்கள் உண்டு.
அருள் எழிலன்.
மேலே உள்ள கட்டுரையில்
// // மீனவா மீனைக் கொல்றா மீனவனை இலங்கை இராணுவம் கொல்றா// என்று மீனவர் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். வினவு குழுமத்தின் நாடகப் பிரதியொன்றின் வசனம் என்கிறார்கள் சிலர். அது வினவு பிரதியாக இருந்தால் என்ன கனவுப் பிரதியாக இருந்தால் என்ன ? அங்கே சின்மயி அதை அவருடைய பதிலாகத்தான் பயன்படுத்துகிறார். ஆக மொத்தம் அவருடைய கருத்துதான் அது. இன்னொரு இழையில் தான் அப்படிச் சொன்னதை உறுதியும் படுத்துகிறார்.//

இந்த யாரோ ஒருவன் கட்டுரையை வாசிக்கவே மாட்டான் போலிருக்கு,.
Amaran
கருத்துச் சுதந்திரத்தை இணையவெளியில் பலர் தவறாக பயன்படுத்துவதைப்பற்றி பலர் கடந்தகாலங்களில் எழுதியுள்ளனர். குறிப்பாக சோபாசக்தி, தமிழச்சி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழச்சியைப்பற்றி சோபாசக்தி பாலியல் வக்கிரத்தோடு எழுதியநேரத்தில் இதுபற்றி சமூக உணர்வுகொண்ட பலரின் எழுத்துக்களை இதற்கு உதாரணம் காட்டலாம். அந்நேரத்தில் சோபாசக்தியின் பாலியல் வக்கிர எழுத்துக்களுக்கு முதுகுசொறிந்து ஆதரவு கொடுத்தவர்கள் பலர். குறிப்பாக அ.மார்க்ஸ் மணிமேகலை முக்கியமானவர்கள். இவர்கள் இன்று மீண்டும் சிம்மயி விடயத்தில் கூட்டுச் சேர்ந்திருப்பது ஆச்சரியப்படவேண்டியதல்ல. சோபாசக்தி மணிமேகலை அ.மார்க்ஸ் அணிசேர்க்கைக்கு அடிப்படையாக காரணமாக அமைவது எதுவென ஆராய்ந்தால் அதன் பின்னால் உள்ள சாதிய நுண் அரசியலை புரிந்துகொள்ளமுடியும். இவர்களை சிம்மயியோடு இணைப்பது இவர்கள் அடிமனதில் குடிகொண்டிருக்கும் இந்த சாதிய மனநிலைதான். கடந்தகாலத்தில் " தலித்திய " முகமூடி அணிந்து அரசியல் பிழைப்பு நடத்த முயன்று அம்பலப்பட்டுப் போனவர்கள் இன்று கூட்டணி அமைத்துள்ளர்கள். அன்று இவர்களை அம்பலப்படுத்தி யார் யார் தோற்கடித்தார்களோ அவர்களுக்கு எதிராக அணிசேர்வதற்கான சந்தர்ப்பம் சிம்மயி விடயத்தில் கிடைத்துள்ளது. சிம்மயி விவகாரத்தில் சிம்மயிக்கு முட்டுக்கொடுத்து ஆதரவு கொடுப்போரை பட்டியலிட்டு இவர்களின் சாதிய வர்க்க பின்னணியை அராய்ந்தால் இது சுலபமாக புரியும். இதற்கு மேல் ஒன்றுமில்லை.
Chandar
High Engal Chinmayyee, Good job well done. We BRAHMANALl are grateful to you and Gayathri( who won a small battle against 69% reservation). Kudos :-)
கூத்தாடி
தமிழனுக்கு என்றே ஒரு பழக்கம் உண்டு. ரோட்டில் எதாவது சண்டை, சச்சரவு சின்ன விபத்து என்றால் எட்டிப்பார்ப்பான்.

சுற்றி நிற்கும் எல்லாரிடமும் தனித்தனியாக விசாரிப்பான் "என்ன சண்டை..." . ஒரு அரை மணி நேரம் கழித்து புதிதாய் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு நாலு பிட்டு சேர்த்துப்போட்டு விவரிப்பான்.

அதில் ஒரு அல்ப சந்தோஷம்.

ஜெமோவையும், சாருவையும் ஷோபா சக்தி, லீனா போன்றோரையும் சின்மயி விவாகரத்தில் நோக்கும் போது கோபத்தை விட பரிதாப உணர்ச்சியே மேலோங்குகிறது.

வடிவேலு நகைச்சுவை ஒன்றில் அல்வா வாசு தற்கொலை செய்து கொள்வாரா மாட்டாரா என பெட் கட்டுவார்களே , அதைப்போல!!!!
ஷாலி
“ ஐயர் ஆத்துப் பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி”
என்ற பழைய சினிமா பாட்டை கேட்டிருக்கேன். அதுவும் அய்யங்கார் ஆத்து பொண்ணு சொல்லுறதை கேட்காவிட்டால்
“கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை,அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை” பாடவேண்டி வரும் என்று இன்று தெரிந்தது.

சின்மயின் தாய்,பொதுப்பிரச்சினைக்கு போன் போட்டு பேசவேண்டிய தேவை என்ன உள்ளது.எங்கோ வில்லங்கம் உள்ளது.எப்படியோ,தனிப்பட்ட பிரச்சினையை தமிழக பிரச்சினையாக மாற்றி விட்டார்கள். கொஞ்சம் மாத்தி யோசிங்க!
N.PARTHASARATHY
Excellent article, MANU aneedhi once again proved it's existence
HARIHARAN
ON BEHALF OF THE WHOLE TAMILAIANS BOTH OF THE CONTESTORS IN THE FRAY PL CONSOLE YOURSELF AND GET THE ISSUE CLOSED . IAM NEW TO THE NET FILED AND TRYING TO GET STILL BETTER KNOWLEDGE, AS FOR AS ANY ISSUE BRAHMINS ARE ILL TRATED EVERY WHERE . BUT THEY ARE VERY CALM I SUPPOSE , LET THIS ISSUE BE CLOSED . AND OH GOD PL CONSOLE EVERY ONE .
manimaran
ஷின்மயி அவருடைய வேலையை காட்டினா நாம நம்ம வேலையை காட்டுவோமாய்.
NAAN TAMIZHANALLA
சின்மாயி, லீனா,சோபா சட்டி,சாறூ,....குசுபு....இவர்கள் முதலில் குறள்:958 வாசிக்க வேண்டும் / நலத்தின்கண் நார் இன்மை தோன்றீன் அவனைக் குலத்தின்கண் அய்யப் படும்/ பொருள்: ஒருவன் வசதிவ ந்தவுடன்(பொருள், புகழ்,பதவி...) தன் இனத்தை,மொழியை,பண்பாட்டை,கலையை நேசிக்க மறப்பவன் பிறப்பிலேயே கோளாறூ உள்ளவன்./ இனிமேலாவது ஒழுங்காக நடக்க முயற்சிக்க வேண்டும். நம்மவர்கள் 29 ம் தேதிக்கான வேலையை செய்வதில் கவனம் செலுத்துங்கள்...
திவ்யன்
she is not innocent.... should be ignorent.....but the others who develop this issue are not ignorent aswell as innocent....
முனியாண்டி ஐயங்கார்
அருள் எழிலன் கோஷ்டிக்கு திராவிடாள் எதிரியோண்ணோ? அம்பியை எங்கவான்னா நினைச்சுண்ட்ருந்தேன்! கலிகாலம் யாரையும் நமப முடியலை போங்கோ!
Karthick
நான் ஒரு பார்ப்பனன். இக்கட்டுரையில் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். அருள் எழிலனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
dev
Nowadays many People trying to get cheap publicity by using the Popular Media. This is Highly unfair. when these people use the tool of cast on the social and political problems that makes the issue becomes so vulgarity. The fishermen issue is sensational issue for tamil ethnic, no doubt about it. Humanism is also mixed in it... But these people go beyond this and trying to use this issue for their personal gain..... So these people also culprits and should be punished before the Court of Law... the arrested people may be wrong for usage of their language before the public. But what kind of the punishment shall be given to the singer for making the people to use such derogatory words against her. So find the root cause and punish.
அகில்
மீனவர்களை கொல்வது சரியென்று சின்மயி சொல்லியிருந்தால் அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் எல்லைதாண்டிப் போவதைத் தடுக்கவேண்டும்.

நாம் எல்லோரும் ஒரு உண்மையை மறந்து விடுகிறோம். அதாவது இந்தியாவின் கடல் எல்லை எதுவரை என்பது தெரியாமல் தமிழக மீனவர்கள் சிலர் இலங்கைக் கடல் எல்லைக்குள் போய் மீன் பிடிப்பதது உண்டு. ஆனால் அதிகமானவர்கள் இந்தியாவின் கடல் எல்லை எதுவரையென்று தெரிந்திருந்தும் கூட எல்லை தாண்டி செல்கிறார்கள். காரணம் இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் வளம் அதிகமாக இருப்பதாகும். இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் பெரிய மீன்பிடி படகுகளில் அங்கு சென்று மீன் பிடிக்கிறார்கள். இவர்களால் இலங்கை கடல் வளம் சூரையாடப்படுகிறது. மீன் பிடிக்கவருபவர்கள் தமிழக மீனவர்கள் என்பதால் இலங்கைத் தமிழர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இப்படியாக தொடர்ந்து மீன் பிடிப்பார்கள் ஆனால் இலங்கையின் கடல்வளம் சில ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிடும் எப்பது உண்மை.

யுத்த காலங்களில் அகதிகளாகத் தமிழகம் சென்ற இலங்கைத் தமிழார்கள் நடுக்கடலில் தத்தளித்தபோது அவர்களைக் காப்பாற்றியது தமிழக மீனவர்கள் என்பதாலேயே ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

பிரியமுடன்,
அகில்.
ahamed
விசம் கக்கும் சீனு அவர்களே, உங்கள் கருத்துக்கு அதாரம் இருக்கா? பர்ப்பனர்களும், ஆதிக்க வர்க்கதினருமே ஆதாரம் இல்லாமல் புலம்பும் மாமேதைகள். உதரனமாக ராமர் பாலம் என்கிற வெத்து வேட்டு விசயத்தை வைத்துக் கொண்டு தமிழர்களான திராவிட சமுதயாம் நலம் பெறக் கூடாது என புலம்பித் தீர்க்கிரீர்கள்.
subramanian
I have read the whole twitter transcript,

Chinmayi never said anything about the killing of Fishermen.Rajan asks her,dont you eat fish? she replies that she is vegetarian.Some other twitter id replies that statement about meena kolravaala,konna enna thappu engira statement.

Second,Chimayi never said that she was a highyengar,she just replies casually that she is a brahmin,when someone asks he rthat she is.

Third,she says nothing about muslims.

Fourth,she talks about reservation saying that rich people amongst the reserved classes take advantage of the policy and take seats whereas deserving candidates with 99% marks also dont get medical seats and that is correct.Anyone talking against this should realise that the real deserving people amongst the reserved classes dont get any benefit from reservation and are still in poverty.She says creamy later should not get reservation,nothing wrong.

Basically,people are using every single excuse,lies,porattu possible to defend Rajan and others who clearly spoke badly about chinmayi and her mom,nothing wrong with them getting arrested.

unga veetu pengala oruthan ippadi pesi irunthan neenga ellam eppadi pesuveengannu paakalam?
Chandar
@Subramanian, ammanam saami oorula, komanam kattinavan paithiyakkaran. Keetru matrum idhan aasiriyargal ellam kudhiraigal, paarpana edhiruppu endra kadivaalam izhukkindra disaiyil yosikkamal oduvaargal. Idhuthaan ivargalin pagutharivu.
anandhi
hey cinmaye u dont have a humanity being a young lady ur thinking is too bad tamil peoples are great fan of ur voice u just concentrate in your carrier being a halfboil dont talk about tamils....what do u know about tamil history thaliths are brave peoples they made lot of great history....... go and read it first ...... also ur high angar...hi hi hi hi
now u lose our love.............
திராவிடன் வைகுண்டராமன்
அவாளின் high என்கிற கீழ் புத்தியை சரியாக சொன்ன தோழருக்கு நன்றி
p ilango subramanian
சமூக வலைத்தளங்களில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை கேட்பாரின்றி நடந்து கொன்டிருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில், தாமதமாகவேனும் மணி கட்டிய சின்மயி பாராட்டுக்கு உரியவர்.இது வரை புகார் கொடுக்காமல்,
கொடுக்க இயலாமல் பொருமிக் கொண்டு இருந்த பெண்கள்
இனி தைரியம் பெற்று வக்கிர புத்தி ஆண்களுக்கு பாடம் கற்பிக்கத் தலைப்படுவார்கள்.

பார்ப்பனப் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது
புரட்சிகரமானது என்கிற தொனியில் குற்றவாளிகளுக்கு
வக்காலத்து வாங்குவது மனப் பிறழ்ச்சி நோயின் வெளிப்பாடு;
மற்றும் கயமைத்தனமும் ஆகும்.

குட்டி முதலாளித்துவத்துவ அரிப்பையும் வக்கிரத்தையும்
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி சொரிந்து கொள்கிறவர்கள்--- தணிக்கை இல்லை என்ற தைரியத்தில்
வக்கிரத்தின் எல்லைக்கே செல்கிறவர்கள்--- இத்தியாதி கயவர்கள் எல்லாம் வயிறு கலங்கிப் போனார்கள்!

வாழ்க சின்மயி!
வக்கிரத்தை வெளிப்படுத்தி கயமை புரிந்து வசமாக மாட்டிக்
கொண்ட பிறகு போலியாகப் பேசும் பார்ப்பன எதிர்ப்பு செல்லுபடி ஆகாது. மக்கள் காறி உமிழ்வார்கள்!
abdulrahim kdnl
சின்மயி அவ்வாறு சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம், குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக.வினவு தளத்தில் வெளியான நாடகத்தில் இந்து ராம் பேசுவதாக வரும் வசனததை அவர் இணையத்தில் எழுதியாக சொல்பவர்கள் ஆதாரம் தர வேண்டு
subramanian
There is no evidence for chinmayi talking about fishermen/muslims.

The twitter transcript is there for everyone.
Boopathy
ஆச்சர்யம்! தோழி சின்மயிக்கு இவ்வளவு ஆதரவா? இந்த பாழாய் போனவர்களுக்கு எவ்வளவு படித்தாலும், எத்தனை பெரியார் வந்தாலும் அடிமையாய் இருப்பதே ஆனாந்தம். வெட்கக்கேடு.
subramanian
Boopathy,

Try to find the truth,idhukkum periyarukkum sambanthame kedayathu.
joseph
everybody know about shoba sakthi and rest of them they are over smart. so don't care about them. everybody know about chimmai. rajan is a good writer.true tamilians always rajans side

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.