தமிழினப் படுகொலையின்போது அனுபவித்த சொல்லவொண்ணா துயரத்திற்காக இலங்கை மீது ஐநாவின் மனித உரிமை கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த கூட்டம் 2011 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 2009ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் கழகத்திற்கு (யூஎன்எச்ஆர்சி) கொழும்பு/ இந்தியா அழுத்தம் கொடுத்ததைப்போல அல்லாமல் தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக ஏராளமான இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு விக்கிலீக்ஸ் இணையதளம் (போர்க்குற்றத்திற்கு உடந்தையாக ஏராளமான ஆவணங்களை வெளியிட்டு வருகிறது), ஐநா ‘நிபுணர் குழு‘ அறிக்கை, சேனல்4-ன் ‘கொலைக்களங்கள்‘ மற்றும் ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் சமநிலையான செய்திகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

இது சர்வதேச சமுதாய அமைப்புகளுடன் உலகின் மனச்சாட்சியை கிளர்ந்தெழச் செய்தது. இது இலங்கையின் இனப்படுகொலை அரசை தனிமைப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளிகளை நிறுத்த ஒரே குரலில் அறைகூவல் விடுத்தது. மனித உரிமைகளை மதிக்காத வரலாறு கொண்ட நாடுகள் மற்றும் யூஎன்எச்ஆர்சி-க்கு எதிரான புவிசார் அரசியல் கொள்கைகளை கொண்ட மற்ற நாடுகளின் இடையூறு இருந்தபோதிலும் இன்று ஐநா மனித உரிமைக் கழகம் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கக் கூடிய நிலையில் உள்ளது.

யூஎன்எச்ஆர்சி ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய உண்மையான நடவடிக்கை ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக அழிக்கப்படாமல் இருக்க மற்றும் மனித குலம் பெரும்பயன் அடைய வேண்டும் என்பதற்காக முக்கியமானதாகும். காட்டுமிராண்டித்தனமான அரசாங்கங்கள், அதிகார ஆசையில் கிளர்ச்சியை அடக்க மனித உரிமைகளை காற்றில் பறக்கவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். இறையாண்மைக்கு பங்கம் என்று ராஜபக்சே புலம்புவதால் நடைபெற்ற மனித உரிமை பிரச்சனைகளில் (காரணமில்லாமல் கைது செய்வது, சிறைவைப்பை நீட்டிப்பது, சட்டப்பூர்வமான கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல்வாதிகளை கொலை செய்வது) சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடுக்க முடியாது. முபாரக், கடாஃபி, அஸாத் போன்றோர் மனித உரிமை குற்றங்களால்தான் சர்வதேச தலையீட்டை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இதற்கு மாறாக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஆட்சியாளர்கள் இலங்கையின் சிறிய, பெரிய (40,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால்) படுகொலையை கண்டிப்பவர்களை மிரட்டுகின்றனர். இவர்கள் ராஜபக்சே இனப்படுகொலை விசாரணையிலிருந்து தப்பிக்க போதுமான செயல்முறை மற்றும் கால இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் சோனியாவின் கூட்டமான மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மீரா குமாரியை உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அறநெறி தவறாத வரலாறு கொண்ட இந்தியா மீது கறை படியச் செய்கின்றனர்.

யூதர்களை கொலை செய்ய கொடூரமான ருடால்ஃப் ஹோஸ் விஷவாயு அறையையும், ஹென்ரிச் ஹிம்லெர் சுட்டுக்கொல்லும் படையினரையும் வைத்திருந்தனர் என்பதை வாசகர்கள் அறிவர். ராஜபக்சே, ‘தாக்குதல் இல்லாத பகுதி‘ என்று கூறி அப்பாவி தமிழ் மக்களை அதற்குள் அழைத்து பின்னர் துப்பாக்கிகளாலும் விமானத்திலிருந்தும் சுட்டு ஹிட்லரின் இன அழிப்பை மீண்டும் அரங்கேற்றியுள்ளான். இந்த கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டியவர்கள் மேனன்/ நாராயணன் ஆவர். இன்னமும் இந்த சோனியா கூட்டத்தினர் அமைதி காத்து பொய்க்கு இசைபாடி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினர் ஒருகையில் துப்பாக்கியும் மறு கையில் மனித உரிமை சாசனத்தையும் கொண்டு, முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை என்று செல்லும் ராஜபக்சேயின் கருத்தை ஆமோதிப்பவர்களாக உள்ளனர். மேனன் மற்றும் நாராயணன் குழு அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்ல உதவியாக விமானங்களையும் ராவின் உளவுத் தகவல்களையும் கொடுத்தனர்.

வெற்றிக் களிப்பில் துடித்த இலங்கை ராணுவத்தினர் தங்களது புகைப்படம் ‘கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தில் வரும் என்று தெரியாமல் முள்ளிவாய்க்காலில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராஜபக்சேவின் வெற்றிக்கோப்பை பெருமிதம் அவரிடம் டிபியூ-கள் (ஆழமாக ஊடுறுவிச் செல்லும் பிரிவு) இருக்கின்றன என்பதை காட்டுவதாகவும். இவற்றை தமிழின் திரிபு மொழி பேசும் இந்தியர்கள் ‘தாக்குதல் இல்லாத பகுதியில்‘ இருந்தவாறு இந்த பிரிவை வழிநடத்தினர் என்பதை காட்டுகிறது. இது இலங்கை போர்க்குற்றத்திற்கு புதிய பரிமாணத்தை தருவதாக உள்ளது. சேனல் 4-ன் ஆய்வாளர்கள் இந்த டிபியூக்கள் எந்த அளவு தாக்குதல் இல்லாத பகுதியில் மக்கள் கொலை செய்யப்பட உதவியாக இருந்தனர் என்பதை நிரூபிக்கக் கூடும். ராஜபக்சேயின் ராணுவம் பொதுமக்களை கொல்ல யூஏவி-களையும் (ஆளில்லாத விமானம்) பயன்படுத்தியது. இது மனித கேடயமாக பிடித்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் (அந்த பகுதியில் இருந்த ஒரே ஆயுதக் குழு) கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொய் என நிரூபிக்கிறது. புலிகளின் மீது பலி போடுவதற்காகவே ராஜபக்சே கூட்டத்தினர் இந்த டிபியூக்களை வைத்து மக்களை மனித கேடயமாக பிடித்து கொலை செய்ததாக பெருமை பேசிக் கொள்கின்றனர். சேனல் 4-ன் ‘கொலைக்களங்கள்‘ குற்றச்சாட்டை மறுப்பதற்கான வீடியோக்களை இந்த டிபியூ மற்றும் யூஏவிகளே வீடியோக்களை வழங்கின. சேனல் 4 தற்போது இந்த டிபியூ மற்றும் யூஏவி வீடியோக்களை ஆராயலாம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாஸிகள் செய்த இனக்கொலைகளுக்கு இணையானது அல்லது அதற்கும் அதிகமானது. ராஜபக்சேயும் மற்றும் அவனைப் போன்றோரும் இனஅழிப்பில் ஈடுபட ஏதுவாக ராஜபக்சே, அவனது இனப்படுகொலை கூட்டாளி இந்தியாவால் ஐநா/ ஐநா மனித உரிமைக் கழக அமைப்புகள் சீர்குலைக்கப்படுமா? ராஜபக்சே மீது உலகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலை கடாஃபிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் ராஜபக்சேவைப் போல லிபியாவில் எதிர்ப்போரை அழிக்க திட்டமிட்டார். ஆனால் சர்வதேச நாடுகள் இதனை புரிந்துகொண்டு அந்நாட்டு மக்களை பாதுகாத்தன. இறையாண்மை ஒருமைப்பாடு என்ற கருத்தை புறந்தள்ளிய சர்வதேச சமூகம் மிலோஸ்விச்-க்கு (ராஜபக்சே போல இனப்படுகொலை செய்தவன்) எதிராக நடவடிக்கை எடுத்தன. ராஜபக்சேவின் ஏமாற்று வேலைகளும், குற்றப் பங்காளிகளும் சர்வதேச நடவடிக்கையை தவிர்க்க ராஜபக்சேவுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்க முடியுமா?

ஹிட்லரின் இனப்படுகொலை இஸ்ரேல் என்ற நாடு பிறக்க வழி செய்தது. ஆனால் ராஜபக்சேவும் இந்திய பாதுகாவலர்களும் தமிழீழத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடான சைப்ரஸில் துருக்கியர் அழிக்கப்படுவதை தடுக்க துருக்கி இறையாண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு துருக்கியர் கொண்ட சைப்ரஸை உருவாக்க செயல்பட்டது. அதேபோல கொடுங்கோல் ராணுவ ஆட்சியின் இன அழிப்பு கொள்கை மற்றும் கொடூரமான கொலைகளையும் தடுக்க ஆஸ்திரேலியா தலையிட்டு கிழக்கு திமோர் உருவாக உதவியது. கிழக்கு திமோர் இனப்படுகொலையில் 300 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் தமிழீழத்தில் ஒரு இடத்தில் (முள்ளிவாய்க்கால்) / ஒரு தாக்குதலில் மட்டுமே 40,000 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் டெல்லி சோனியா கூட்டத்திற்கு எந்த கொடுமையும் தெரியவில்லை. அதுபோன்ற கொடுமை இலங்கையில் நடைபெற்றதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை.

ஈழத் துயரத்திற்கான மையப்புள்ளி தமிழருக்கு எதிரான சிங்களவாதத்தின் தவறான புரிந்துணர்வு ஆகும். இது யூத எதிர்ப்பு நாஸியின் மனநிலையை மிஞ்சும் மனநிலையாகும். 1947ம் ஆண்டு தமிழர்களுக்கு 30 சதவீதம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதம் தற்போது அதனை 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக ஆக்கிவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே (1948) பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திற்கு (இந்தியா) அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தமிழர்களின் தலைவிதியை எண்ணி இந்தியா வருத்தப்படவில்லை. ஜேஆர் ஜெயவர்தனே பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது குடியுரிமையை பாதியை மட்டுமே அங்கீகரித்தார். அதுவும் தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காகவே செய்தார். இந்த தமிழர்களுக்கு இரண்டாம்பட்ச வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் புலம்பல் என்னவென்றால், “இந்த விஷயங்களை இந்தியா புரிந்துகொள்ளும்போது (வடக்கு இலங்கை உட்பட) இலங்கையில் சிங்கள ராணுவத்தினரின் வாரிசுகளைத் தவிர ஒரு தமிழரும் இருக்க மாட்டார்கள். இந்தியா காரணமாகவே தோட்டத் தொழிலாளர்கள் விலைபோனார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் நாஸிகளால் யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்ற முகாம்களில்தான் வாழ்ந்தனர். அவர்கள் அந்த பகுதியை விட்டுப் வெளியே போக முடியாது. குறைந்த சம்பளத்தில் 10 x 10 அளவுள்ள அறையில் வாழ்ந்து சாக வேண்டும். அவர்கள் அடிமைகளைப் போலவே வாழ்ந்தனர்.“ இது போன்ற மனநிலை படைத்த இலங்கை தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் அலட்சியம்தான்.

அதேபோல சிங்களவரின் இலங்கை தொழில்வளம் பெற்ற பகுதியாகவும், தமிழர்கள் வீடில்லாத பரதேசிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் தெற்கில் ஆரம்பித்து தற்போது வடக்கிலும் தனது கைக்கூலிகளை வைத்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி போலீஸ் வன்முறையையும் அரங்கேற்றி வருகிறது. தெற்கு பகுதியில் உள்ள தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டு தங்களுக்கு பாதுகாப்பான வடக்குப் பகுதிக்கு துரத்தப்படுகின்றனர். எஞ்சியுள்ளவர்கள் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். இதுவே தெற்கு இலங்கையின் நிலை. தார்ஸி விட்டாச்சியின் “எமர்ஜென்சி 1958" இந்த துயரத்தை படமாக சித்தரிக்கிறது.

1958ம் ஆண்டு அரசாங்கத்தால் வடக்கு இலங்கைக்கு துரத்தப்படுதல் அல்லது இனப்படுகொலை அரங்கேற்றப்படுகிறது. தெற்கு பகுதியிலிருந்து சரக்கு கப்பல்களில் வந்து சேர்ந்ததை இன்னமும் பல தமிழர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் தொடர்ந்து இந்த துயரத்தை சஹித்து வந்தனர். இலங்கையின் எந்த பகுதியிலும் எந்த இனத்தவரும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என்று ராஜபக்சே சொல்வது பச்சைப் பொய். 1983ம் ஆண்டு அரசாங்கம் தூண்டிவிட்ட கலவரத்தால் பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு இலங்கை எந்த செலவும் இல்லாமல் இருபது லட்சம் மக்களை துரத்தியடித்தது. இலங்கை செய்த ஒரே வேலை ஈழம் – சிங்களம் என்ற பிளவை ஆழப்படுத்தியதாகும். 30 ஆண்டுகளாக நடந்த அமைதிப் போராட்டம் மக்கள் மத்தியில் ஈழத்திற்கான பரவலான அர்ப்பணிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிங்களவர் மத்தியில் இன அழிப்பு ஆழமாக பதிந்துவிட்ட நிலையிலேயே தமிழர்களை கொல்லும் முறை மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் வடக்குப் பகுதியிலிருந்த தமிழ் மக்களை ஒன்று சேர்த்து பட்டினிபோட்டு கண்மூடித்தனமாக சுட்டு குண்டுவீசித் தாக்கினர். உயர் பாதுகாப்புப் பகுதி என்று கூறி தமிழர்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அவர்களை துரத்தினர். பின்னர் அவற்றை சிங்களவருக்கு வழங்கினர். அதேபோல தமிழர்களின் மீன்வளமும் பறிக்கப்பட்டது. சிங்கள கடற்படையின் பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தால் சிங்கள மீனவர் தமிழர்களின் பகுதியில் வந்து மீன் பிடிக்கின்றனர்.


இந்த சிங்கள மீனவர்கள்தான் தொடர்ந்து கப்பற்படையின் உதவியுடன் இந்திய தமிழர்களை தாக்குகின்றனர். இந்த செயல்கள் ஆக்கிரமிப்பை காட்டினாலும் கூட இந்திய கப்பற்படையினர் தங்களது நாட்டினருக்குப் பதிலாக சிங்களவருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். இது போன்ற கொடுமைகள் எல்டிடிஈ ஆட்சி செய்த காலத்தில் நடைபெறவில்லை. இது சோனியா கூட்டத்திற்கு தெரியாமல் இல்லை. இது போன்ற கொடுமைகளை இலங்கை பத்திரிகைகளே உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக வெளியிடுகின்றன. அச்சம் காரணமாக தெற்கில் உள்ள தமிழர்களின் நிலை 1983ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையில் உள்ளது, 2009 மே மாத தோல்விக்குப் பின்னர் அவர்களது நிலை மிக மோசமாகிவிட்டது என்பது சோனியா கூட்டம் அறிந்ததே.

ராஜபக்சேயின் பயங்கரவாதத்தின் நோக்கம் வாழ்க்கை நிலையை மாற்றி, வடக்கு இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான பகுதி என்ற எண்ணத்தை மாற்றுவதே ஆகும். இந்த எண்ணம் தாய்நாட்டிலிருந்து தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதற்கானதாகும். போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியை இனப்படுகொலை மனநிலை கொண்ட ராஜபக்சேயிடம் ஒப்படைப்பது ஈழத் தமிழர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமமானதாகும்.

இருந்தாலும் ராஜபக்சேவின் டெல்லி கூட்டாளிகள் (மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மேனன்கள்), வட இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள், ராஜபக்சே சொல்வதை போலவே, நீண்ட உள்நாட்டுப் போருக்கு முடிவுக்கு கொண்டு வந்து இலங்கை சாதாரண நிலை திரும்பி விட்டது, தமிழர்கள் வாழ்வில் அமைதி திரும்பி விட்டது என்று சொல்லி வருகின்றனர். இந்த யுத்தி முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் பொய் என்று ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படும் வெளிக்காட்டியது.

நரகத் தீவு என்று கூறுமளவு சித்ரவதை, கொலை, கற்பழிப்பு, கடத்தல், விசாரணையின்றி, சுட்டுக்கொள்ளுதல், தீவிரவாதம் (?) இல்லாத நிலையிலும் ராணுவ தளங்களின் விரிவாக்கம் என்று கூறி பலவந்தமான குடியேற்றங்களை செய்து வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த அரசாங்கத்திற்கு உதவியாக தான் செய்த திரைமறைவு வேலைகளை கோத்தபயா ராஜபக்சே வெளிக் கொண்டு வந்து தன்னையும் சிக்க வைத்துவிடுவாரோ என்ற அச்சமே இலங்கை படுகொலை விஷயத்தில் இந்தியாவின் நிலைக்கு காரணம். மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால் நல்லதோ அல்லது கெட்டதோ தீவிரவாதம் இருக்க கூடாது என்பதாகும். இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஜிஹாதி போன்ற ‘தீவிரவாதிகளே‘ அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவர்களே.

ராஜபக்சே பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ரெட் கிராஸ் மற்றும் இன்னும் பல மனிதாபிமான அமைப்புகள் மற்றும் ஒபாமா, டேவிட் மிலிபேண்ட், ஹிலாரி கிளின்டன் மற்றும் வேறு மேற்கத்திய தலைவர்கள் மற்றும் ஆர்2பி (பாதுகாப்பதற்கான பொறுப்பு) கருத்துக் கொண்டிருப்போர் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் ஆவர். டெல்லி இவ்வளவு பலவீனமான அறிநெறி கொண்ட தலைவர்களை கொண்டிருப்பது வருந்தத் தக்கதே. இனப்படுகொலையில் இப்போது டெல்லி சோனியா கூட்டத்திற்கு ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர வேறு வழியில்லை.

இன்னொரு கேரள மஃபியா உறுப்பினரான நம்பியார் ஐநாவின் ஆர்2பி விதிமுறைகளை பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலையை தடுக்க உலக பாதுகாவலனான ஐநாவுக்காக வேலை செய்யவேண்டியவர் ஆவார். ஆனால் இவர் தனது கேரள நண்பர்களான நாராயண் மற்றும் மேனனுடன் சேர்ந்து திரைமறைவு வேலை செய்து இனப்படுகொலையில் கோத்தபயாவுக்கு உதவினார். இதையே ஐநாவின் நிபுணர் குழுவே ‘அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன‘ என்று குறிப்பிட்டுள்ளது. நம்பியார் காரணமாகவே வெள்ளைக் கொடி கொண்டு வந்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஐநா அலுவலகங்களில் சிங்கள அதிகாரிகளுடன் இணைந்து நம்பியார் செயல்பட்டக்கொண்டே அவர் இன்னமும் ஐநாவில் முக்கிய பதவி வகித்துவருவது பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் அவர்களது கூக்குரலை கண்டுகொள்ளாமல் இருந்த பற்றிய மர்மங்களை சர்வதேச குற்றவியல் நிதிமன்றம் மட்டுமே வெளிக்கொணர முடியும் என்று ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நம்பியார் இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக உள்ள தனது சகோதரர் சதீஷ் நம்பியாரின் வேலை வாய்ப்பு பரிபோய்விடக் கூடாதே என்பதிலேயே அதிக கவலைப்பட்டார்.

யுஎஸ், நார்வே மற்றும் ஈயூ உறுப்பினர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கு காரணமும் இந்த கேரள மஃபியாவே காரணம். இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்குள் போரை தீவிரமாக நடத்தி முடிக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது நம்பியாரும்/ நாராயணனுமே. இதன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றது. காப்பாற்றப்பட்டதாக கூறப்படும் 3,20,000 மக்கள் திறந்தவெளி மனித பண்ணைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான கேரள மஃபியா, நாராயணன்/ மேனன்/ சோனியாவை பாதுகாக்கவே படுகொலை செய்திகள் வெளியேறாமல் தடுத்தது. ஏனெனில் கோத்தபயா ஐசிசி விசாரணையில் நிறுத்தப்பட்டால் அவர் உண்மைகளை வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் ஆகும். இனப்படுகொலை பற்றிய செய்திகள் வெளியானதும் சிங்கள இலங்கை கலக்கமடைந்து ‘பயங்கரவாதம் மீதான போர்‘ என்று கூறி ‘மனிதாபிமான நடவடிக்கை‘ என்று கூறத்தொடங்கியது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க மறுப்பதன் மூலம் இலங்கை, ஐநா ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவிறிவிட்டதோ என்ற கேள்வியை அமுக்க முயற்சிக்கிறது.

துருக்கி சைப்ரஸில் உள்ள தனது மக்களை காப்பாற்றியபோது, தமிழ் மக்களுக்கு ஆதரவு அளித்த இந்திரா காந்தியின் வழியிலிருந்து மாறி சோனியா கூட்டம் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தது. இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் சர்வதேச அமைப்பான ஐநாவை நோக்கி திரும்பியுள்ளனர். அவர்கள் ஐநா அமைப்புகளே தங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர்.

நிபுணர் குழுவின் அறிக்கை, விக்கிலீக்ஸின் வெளியீடுகள், சேனல் 4-ன் கொலைக்களங்கள் ஆவணம் மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே ஆவணங்கள் மற்றும் உலகம் முழுவதும் சமநிலையான செய்திகளை வழங்கும் ஊடகங்களுக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவர். சர்வதேச சமுதாயம் இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா இருக்கும் நிலையிலிருந்து விலகுமாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெற்றிகரமான போர்க்குற்ற நடவடிக்கைகள் இலங்கையின் தமிழின படுகொலைகளை குறிப்பாக மக்கள் கூட்டமாக கொல்லப்படுவதை தடுக்கும்.

இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றை பார்க்கும்போது, தமிழர்களிள் உயிர்களுக்கு கிடைக்கும் சிறந்த பாதுகாப்பு என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் ஐநா போர்க்குற்ற மன்றங்கள் எடுக்கும் நடவடிக்கையே ஆகும். ஆற்றல் மிக்க அதிகார பரவலாக ராஜீவ் காந்தியின் 13 வது திருத்தம் அல்லது இனப்படுகொலை சிங்களவருடனான கூட்டாட்சி அமைப்பு என்று கிடைத்தாலும் கூட சர்வதேச சமுதாயம் ஐநா அமைப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

எந்தவித அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், சர்வதேச அமைப்புகள் உயிர்ப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உத்தரவாதம் தரவேண்டும். இனியொரு முள்ளிவாய்க்கால் படுகொலையை தாங்க ஈழத்தமிழர்களிடம் மனவலிமையோ, திராணியோ இல்லை. சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள இலங்கை ஏற்கனவே உலக நாடுகளின் மத்தியில் ஒதுக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது. இது இன்னமும் தெளிவாக இலங்கைக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.

இதற்கு இங்கிலாந்து மற்றும் கனடாவின் எம்பிகள் பரவலாக புறக்கணிப்புக்களை நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரீன்கள் பெர்த்தில் நடக்கும் அரசாங்க சந்திப்பின் பொதுநலன் (காமன்வெல்த்) தலைவர்களின் அடுத்த மாநாட்டில் இலங்கையை தடை செய்ய கோரவேண்டும். 1987க்கு பிறகு ஃபிஜி நான்கு ஆட்சிக் கவிழ்ப்புகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் சர்வதேச தடை விதிக்கப்பட்டது. பொதுநலன் நாடுகள் அமைப்பிலிருந்து இருமுறை தடை செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அவசர நிலை அறிவித்ததால் பாகிஸ்தான் மீதும் தடை விதிக்கப்பட்டது. இரு விஷயங்களிலுமே இந்தியா தடைகளை முன்னெடுத்து விதித்தது. இலங்கையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட இனப்படுகொலையுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் நடைபெற்றவை பெருங்குற்றங்கள் கிடையாது. பொதுநலன் நாடுகள் இனப்படுகொலை செய்த இலங்கையை வெளியேற்றி தங்களது தார்மீக பொறுப்பை காட்ட வேண்டும்.

- விஎஸ் சுப்ரமணியம்
தமிழில் - தேவன்

நன்றி – கிரவுண்ட் ரிப்போர்ட்

http://www.groundreport.com/World/DELHI-s-COVERT-SUPPORT-FOR-SRI-LANKA-GENOCIDE-AGAI/2941588

Pin It