சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்சிகளும் மக்களது வாக்குகளைப் பெற கூட்டணிகளையும் கவர்ச்சிகரமான கூப்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த 60 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் ஆளப்பட்டு வரும் நமது நாட்டில் மக்களின் உண்மையான நிலை பற்றியும், அதற்கு காரணமான அரசியல் கட்சிகளின் கொள்கைகளைப் பற்றியும் ஆய்வு செய்வது மிகவும் அவசியம். இப்பணிக்காக கீழ்க்கண்ட ஆய்வரங்கம் கூடுகின்றது.

அரசியல் பொருளாதார ஆய்வரங்கம்

நாள் :18.03.2011 நேரம்: மாலை 3 முதல் 7 வரை.
இடம்: பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர் (பழைய பேருந்து நிலையம் அருகில்)

ஆய்வுக்கான பொருட்கள்:

1.கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்: கம்பெனிகளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் கையகப்படுத்தப்படும் வேளாண் நிலங்கள்.

2.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் ஆதாரங்கள்.

3.அரசுத் திட்டங்களால் ஏற்படும் நிலம் நீர் சுற்றுச்சூழல் சீரழிவு; நஞ்சாகிவரும் உணவு. மக்களின் வளரும் உடல்நலக்கேடுகள், மருத்துவச்செலவுகள்.

4.உழவர்களின் தொடரும் தற்கொலைகள்,  உலகமயம், விதை, இடுபொருள், விளைபொருள், மொத்த வர்த்தகம் முதல் சில்லரை வர்த்தகம் வரை கம்பெனிகள் ஆக்கிரமிக்கும் நிலை. நாட்டின் இறையாண்மைக்கும், உணவுப்பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து.

5.மீனவர்களின் மீது அன்னியப்படைகளின் தாக்குதல் மற்றும் பறிபோகும் மீன்பிடி உரிமை.

6.தமிழ், தமிழினத்திற்கு செய்யப்படும் துரோகங்கள்.

7. 18 வயது வரை அனைவருக்கும் ஒரே தரமான கல்வி.

8.பூதாகாரமாக வளரும் ஊழலும் மக்கள்மீது தொடுக்கப்படும் சர்வாதிகாரத் தாக்குதல்களும்.

9.புவி வெப்பமயமாதல், குடிநீர்,உணவு நெருக்கடி ஆகியவற்றிற்கு தீர்வு

10.தொழிலாளிகள்,உழவர்களுக்கு சட்டமன்றத்தில் தனி பிரதிநிதித்துவம்.

தங்களது மேலான வருகையையும் பங்களிப்பையும் வேண்டுகிறோம். ஆய்வரங்கத்தின் முடிவுகள் ஆவணமாக்கப்பட்டு மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படவேண்டும்.

இவண்
ஆய்வரங்க ஏற்பாட்டுக்குழுவினர், மக்கள் எழுச்சி இயக்கம்.

கோ.திருநாவுக்கரசு       அரங்க குணசேகரன்     அரிமாத்தோழர்       தில்லைக்கிழார்  

9380297522                    9047521117                  9443095727               9443114150   

Pin It