யாழ்ப்பாணத்தில் தம்மை குடியமர்த்துமாறு சுமார் 600 வரையிலான சிங்களக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்ப்பாணம் என்பது ஈழத்தமிழ் மக்களது தனித்துவனமான பிரதேசங்களில் ஒன்று.

விடுதலைப்புலிகள் போரியில் ரீதியாக கிறிலங் காவில் முடக்கப்பட்ட பின்னர் தெற்கே தஞ்சம் என்றுகிடந்த சிங்கள மக்களுக்கு வட கிழக்குக்குச் செல்லவும், குறிப்பாக சிங்கள பேரினவாதிகளின் சொப்பான பூமியான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று வடக்கிற்குள் கால் பதிக்கும் ஒவ்வொரு சிங்களவரும் "வெற்றிச் செருக்கு'டனேயே பிரவேசிக் கின்றனர்.

தள்ளி வீழ்த்தினாலும் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற கர்வம் அவர்களுக்கு.

திடீரென வண்டி கட்டிக் கொண்டு யாழ்ப்õபணத் துக்குள் நுழைந்த 100 சிங்களக் குடும்பங்கள் தம்மையும் யாழ்ப்பாணத்தில் குடியமர்த்த நடவடிக் கை எடுக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரைக் கேட்டுக் கொண்டதுடன்,

வட மாகாண ஆளுநர் சந்திர சிறியையும் சந்தித்து தமது மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தலாகக் கேட்டுக் கொண்டனர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர் எப்படியாவது யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருங்கள் உங்களுக்கு காணிகள் பெற்றுத் தர நான் ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து, மேலும் 500 குடும்பங்கள் யாழ்ப் பாணத்தில் குடியேறுவதற்கான தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்திலேயே முகாமிட் டுள்ளன.

இவர்கள் இப்பொழுது யாழ்ப்பாண புகையிரத நிலையம் மற்றும் சாவகச்சேரி, கிளிநொச்சி, ஏனைய இடங்களில் தங்கியிருக்கின்றனர்.

இது உண்மையிலேயே திட்டமிட்ட மேற்கொள் ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்ற நடவடிக்கை.

ஏனெனில், யாழ்ப்பாணத்துக்கு சிங்களவர்களைக் குடியமர்த்துவது என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

அதற்கு எப்படி காய் நகர்த்துவது என்றும் திட்ட மிட்டு வைத்திருந்தது.

காரணம், போரினால் இடம்பெயர்ந்த சில தமிழ்க் குடும்பங்கள் சுமார் 30 ஆண்டு காலமாக பாவனை யின்றிக் கிடக்கும் யாழ்ப்பாணம் தொடர்ந்து நிலையத்தில் தங்கியிருந்தன. இக் குடும்பங்களை சிங்களக் குடும்பங்கள் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக சிறிலங்கா இராணுவம் அப்பகுதியிலிருந்து வெளியேற்றியது.

அத்துடன், அப்பகுதியில்ஒரு தொகுதி மலசல கூடங்களை சிறிலங்கா இராணுவம் அமைத்தது சந்தேகத்தை தோற்றுவித்தபோதும் இப்படி நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இப்படியாக திட்டமிட்ட முறையில் இந்த சிங்களக் குடும்பங்கள் குடியேற்றத்துக்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர் என்பதுதான் உண்மை.

இவ்வாறாக யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களை யாரும், குறிப்பாக பத்திரிகையாளர்கள் கூட இலகுவில் நெருங்க முடியாதவாறு அவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளித்துள்ளது.

Pin It