பதினைந்து வயதுக்கும் முப்பத்தென்பது வயதுக்கும் இடைப்படடோர் இளையோர் ஆவர். எமது நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான சனத்தொகையில் முப்பத்தெழு சதவீதம் இளையோர். கிட்டத்தட்ட நாட்டின் சனத்தொகையில் எழுபத்தைந்து இலட்சத்தினர். இளையோரின் ஆக்க பூர்வமான சிந்தனையைச் சரியாக நிகழ் கால சமூகம் பிரயோகித்தால், எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம். இளையோரின் சிந்தனையுடன், சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிகழ் கால சமூகம் அவர்களின் ஆளுமைகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் முகம் கொடு;க்கும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான பிரச்சினைகள் பற்றி கவனத்தசை செலுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கு விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்ளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை நல்கக்கூடிய, பலம் பொருந்திய வளர்ச்சியடைந்த இளையோரின் சக்திகள் இன்று கவனிப்பார் அற்று வீண்விரயமாவதைக் காணலாம். எமது நாட்டுப் பாடசாலைகளில முதலாம் தரத்திற்;கு பிரவேசிக்கும் 360,000 இலட்ச பிள்ளைகளில் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கா இணையும் தொகை 200,000 இலட்சமாகும். அத் தொகையில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவேர் 30,000 ஆயிரமாகும். வருடமொன்றிற்குக் கல்வி தொடர்புகளிலிருந்து வெளியோரும் தொகை 330,000 இலட்சமாகும். இவ்வாறு வெளியேறுபவர்களை நாட்டின் பொருளாதாரத்தில் தொடர்புபடுத்துவதற்கு முறையான செயற்றிட்டமொன்று இல்லாததன் காரணமாக, குறிக்கோளின்றி எதிர்பார்ப்புக்கள் சிதைந்து வாழ்க்கையை நடத்தி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தற்போது அவர்களின் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. 

youthசமூகத்தின் சரியான வழி நடத்தல் இன்மையால், இன்றைய இளையோர்:- போதைப்பொருளுக்கு அடிமையாதல், சமூக குற்றச் செயல்களில் ஈடுபடல், தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லுதல், பாதுகாப்பற்ற தொழிலில் ஈடுபடுதல், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுதல், எதிர் கால சிந்தனை இன்மை, எதிர் கால சந்ததியினர் பற்றி சிந்திக்காமை, தன் நம்பிக்கை இன்மை, விரக்தி மன நிலையால் தற்கொலைக்கு முயற்சித்தல், கல்வியில் அக்கறை இன்மை, சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுதல், மத வாதத்தில் ஈடுபடுதல், இன வாதத்தில் ஈடுபடுதல், சாதியத்தைக் கடைப்பிடித்தல், பெற்றோரை மதியாமை, முதியோரை கனம் பண்ணாமை, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை, சூழல் பற்றி அக்கறை இன்மை, நேரத்தின் முக்கியத்துவத்தினை உணராமை, சமபாடிகளை மதிக்காமை, வயதுக்கு மீறிய ஆசைகள், குறுக்கு வழியில் முன்னேற முயற்சித்தல், பாலியல் பிறழ்வுகள், சமூக பிறழ்வுகள், பண்பாட்டுப் பிறழ்வுகள், கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் இன்றி வாழ்தல், போதிய ஓய்வு இன்மை, எந்நேரமும் கோபமான பதற்ற நிலை, நிலையாமையை உணராமை, வாழ்வதற்கான வாழ்க்கையை வாழாமை, பொழுபோக்கில் ஈடுபடாமை, இயந்திரமாக செயற்படுதல் முதலிய இன்னோரன்ன சிக்கல்களுக்கு உட்படுகின்றனர்.

 சமூகத்தில் அரசு, குடும்பம் என்னும் இரண்டு அலகுகளுடன் இணைந்து தனி நபர்களும் இளையோர் வாழ்வில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். சமூக பொருளாதார முறையை வழி நடத்தல், ஆட்சி புரிதல், சமதர்ம சமத்துவத்தை நிலை நாட்டல் என்பவற்றைத் தீர்மானிப்பது அரசு ஆகும். அரச துறையின் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தின் இருப்பும் சகல சமூக உறவுகளின் தன்மையும் தீர்மானிக்கப்படுகின்றன. சமூகத்தில் மக்கள் ஒன்றாய் சேர்ந்திருக்கும் சிறிய அலகு குடும்பம் ஆகும். சிறுபராயத்திலிருந்து வாலிப பருவம் வரையிலான நபரொருவரை உருவாக்கும் போது தீர்மானகரமான பணியினை அவர் அல்லது அவள் இருக்கும் குடும்ப அலகால் ஆற்ற முடியும். ஒருவர் வசமுள்ள கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், கலாசார ரீதியான சுபாவ பழக்கம் முதலியவை குடும்பத்தில் சம்பவ காரணமாக அமைகின்றது. தனி நபர்களின் ஆற்றல், தலையீடு, பங்களிப்பு இளையோரின் சிந்தனையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

 இளையோரிடையே உக்கிரமான வேலையில்லாப் பிரச்சினை, நலிவடைந்த சேவையைப் பெறல் முக்கியமான பிரச்சினைகளாகும். தமது தகைமைக்கு ஏற்ப தொழில் இன்மையால், அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அரச தொழிக்கு இணைத்தக் கொள்ளப்பட்ட இளம் பட்டதாரிகள் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் காலத்தை வீணாக்குவதற்குவதையும் அவர்கள் கிராமங்களில் வாழவோருக்குப் பல வகையான பொருத்தமற்ற பணிகளைச் செய்து வருகின்றனர். உதாரணமாக, விவசாயம் பற்றி கற்காத இளையோர் கிராமங்களில் விவசாய பண்களில் ஈடுபடல். சாதாரண தரம், உயர்தரம், பட்டப்படிப்பு, டிப்ளோமா – கல்வியைக் கற்று நிறைவு செய்து வெளியோரும் இளையோருக்கு கற்ற கல்விக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளன. கலைத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் முகாமைத்துறையிலும் முகாமைத்துவதுறையில் நிபுணத்துவம் பெற்றவர் சுகாதாரத்துறையிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால். இவர்களின் ஆளுமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. தொழில் தேடி வெளி நாடுகளுக்குச் செல்லும் இளையோரும் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். உதாரணமாக, இலங்கை இளையோர் கொரிய நாட்டில் தொழில் செய்வதாக கனவில் சஞ்சரித்து நீண்ட நாட்கள் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறு தொகையினருக்கு மட்டுமே அந்த தொழில் கிடைக்கின்றது. அவ்வாறு சென்றவர்கள் தொழல் பாதுகாப்பு இன்மையால், பல்வேறு நோய்களுக்கு இரையாகின்றனர். தொழில் கிடைக்காதோர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அவர்களின் தகைமைகள், தகுதிகள் என்பவற்றுக்கு ஏற்ப தாம் பிறந்த நாட்டிற்காக உழைப்பைச் சிந்துவதற்குப் பொருளாதாரத்தில் சந்தர்ப்பங்ளை ஏற்படுத்திக் கொடுத்தல், முறையான பயிற்சிகளுடன், பாடநெறியைக் கற்பித்ததன் பி;ன்னர் ஏதாவது ஒரு தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல், அரசினதும் சமூகத்தினதும் கடப்பாடாகும்.

 கல்வி, விஞ்ஞானம், கலை, மற்றும் தொழில் நுட்பமும் விசேட திறமைகள், தனிததுவ ஆற்றல்களும் மிக்க இளம் சமுதாயம் (இளைஞர், யுவதிகள்) குறைபாடுகள் மத்தியிலும், இலவசக் கல்வியினுள் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலான குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் படித்த பிரசையாக மாறக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. தற்போதைய நிலையில் இலவசக் கல்வியை இல்லாமலாக்கி, பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கும் நிலை தோன்றியுள்ளது. தொடர்ச்சியாக வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் உண்மையான நிதியானது நூற்றுக்கு 2 வீதம் கொண்டுள்ள நிலையில் அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு மேலதிகமான பணத்தைச் செலவழிக்க நேரிட்டிருப்பதால், பாரிய கஷ்டங்களுக்குப் பிள்ளைகளும் பெற்றோர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இளம் சமுதாயம் தமது கல்வித் தேவைகளை நிறைவேற்றக்கொள்ள பல சமூக பிறழ்வுகளில் ஈடுபடுகின்றது.

 நவீன உலகத்திற்கு ஏற்ப இலங்கையில் கல்வி கற்று வெளியேருபவர்களுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம், புதிய ஒளடதம், புதிய கிரகித்தல், புதிய எழுத்தாற்றல், புதிய ஆக்கங்கள் தொடர்பான அறிவு குறைவாக உள்ளது. இந்த சிக்கலை தவிர்ப்பதற்கு சகல இளையோருக்கும் கல்வி பெறும் உரிமையானது அடிப்படை மனித உரிமையாக ஏற்றுக்கொண்டு, வசிக்கும் பிரதேசம், இனம், சாதி, மதம், வர்க்கம் முதலிய பேதங்களின்றி சகலருக்கும் சமமாக கல்வியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வித்துறையை முழுமையாக அரசவுடைமையாக மாற்றுவதும் இளையோருக்கு அந்த அறிவை பெற்றுக்கொடுப்பதற்கும் சமூகத்தில் நிலவும் விஞ்ஞான ரீதியற்ற போலி கருத்தியலை இல்லாமலாக்குவது இலங்கை அரசினதும் நிபுணத்துவம் பெற்ற புத்திஜீவிகளினதும் தலையாய கடமையாகும்.

 இளையோர் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் இனவாதத்தை எதிர்த்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். உள்நாட்டு யுத்தத்தினால், பெருந்தொகையான இளையோரும் ஏனையோரும் இறந்தும் காயமுற்றும் இருப்பிடங்களை இழந்தும் உள்ளனர். முப்பத்தி மூன்று வருடங்களாக நடைபெற்ற இந்த யுத்தம் 2009 களில் நிறைவுற்றும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் திசையை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியாமையானது கவலைக்கிடமா விடயமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடiயே செயற்படும் இனவாதத்தைப் போல இனவாத கருத்தியல் விதைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தைப் போல ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும், உள் நாட்டு யுத்தத்தினால், பின்னடைவுக்கு உள்ளான சமூக, கலாசார விழுமியங்களை மீள நிலை நாட்டிக் கொள்ளவும், அரசும் ஒட்டுமொத்த சமூகமும் முன் நின்று உழைத்தால், இளையோரின் தீர்க்கமான சிந்தனையுடன், வருங்காலத்தில் நல்லதொரு சமூகம் உருவாகும். சகல மக்களுக்கும் ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தமது உரிமைகளை அளிக்கக் கூடிய அரசியல், பொருளாதார முறைகளை நிறுவுதல் வேண்டும். இன, மத, அடிப்படையில் பாடசாலைகள் நடத்துவதை நிறுத்தி, பாடசாலைகள் அனைத்தும் சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் உரிய மாணவர்ளை உள்வாங்க வேண்டும். எல்லா சந்தர்ப்பத்திலும் தேசிய கீதத்தை சிங்கள, தமிழ் மொழிகளில் பாடுவதைக் கட்டாயமாக்குதல். இவ்வாறான செற்பாடுகளை இளம் சமூகத்தின் மத்தியில் அமூலாக்குவதன் மூலம் ஆரம்பத்திலையே இனவாதத்தை இல்லாமலாக்க முடியும்.

 கலை, கலாசாரம், இரசனை, பொழுதுபோக்கு, உடற்பயிற்சி முதலியவற்றை இளம் சமூகத்தின் மத்தியில் வளர்ப்பதன் மூலம், சகபாடிகளை மதித்து நடக்கும் பண்பையும் எதிர் கால சமூகத்தை வழி நடத்தும் ஆளுமையையும் கட்டியெழுப்புவதோடு, அறிவுள்ள ஆக்கத்திறனுடைய நுண்ணறிவு மிக்க மனிதனையும் உருவாக்க முடியும். இன்று இளம் சமூகத்தின் மத்தியில் கலையும் இரசனையும் அருகி செல்வதைக் காணலாம். இளம் சமூகத்தின் சகல பிரிவினரதும் கலாசார, தேசிய, மத ரீதியான பிரதேச பண்புகளைப் பிரதிநிதித்துவம் படுத்தும் விதமாக ஊடகங்களில் இளம் சமூகத்தினரை வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தி மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்தல் வேண்டும்.

 திறமையான இளம் சமூகம் இன்று பொழுது போக்கிற்காக மதுபானங்ளைப் பாவித்து, அதற்கு அடிமையாக வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டத்துக்குள் உள்ளது. சாதாரண குடும்பங்ளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு பொழுது போக்கை பெறும் வழிகள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே, குறைந்த பட்சம் இவர்களின் பொழுது போக்கிற்காக திரையரங்கங்கள், நாடக மண்டபங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள், நூல் நிலையங்கள், சனமூக நிலையங்கள் சமூக முன்னேற்ற சங்கங்கள் முதலியவற்றை நிகழ் கால சமூகம் அமைப்பதன் மூலம், நேரிய சிந்தனை கொண்ட இளம் சமூகத்தைப் போதைப் பொருளுக்கு அடிமையாவதிலிருந்து தவிர்க்க முடியும். இளம் சமூகத்தினரிடையே தொடர்ச்சியாக கலாசார விழுமியங்ளை உயர்வாகவும், முன்னேறிய பழக்க வழக்கங்கள் ஆழமாக பதியும் விதமாக, அநுபவங்களைப் பெறுவதற்காக தேவையான கொள்கையை உரிய துறையில் அறிமுகப்படுத்துவதற்கு நிகழ் கால சமூகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும். பண்பாட்டுக்கு விரோதமான, அவலட்சணமான வர்த்தக விளம்பரங்கள் மற்றும் ஊடக நிகழ்ச்சிளை நிறுத்துவதற்கு தேவையான சட்டங்ளை வகுத்து துரிதமாக நடைமுறைப்படுத்தல் வேண்டும். இதன் மூலம் இளம் சமூகம் திசை மாறி போவதைத் தடுக்க முடியும். ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ – கலித்தொகையின் வரிக்கு ஏற்ப அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.

 இளம் சமூகம், புலனற்றோராதல், HIV/AIDE நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகுதல், விசப் போதைப் பொருளுக்கு அடிமையாதல், ஒழுங்கற்ற பாலுறவில் ஈடுபடுதல் இவ்வாறு சுகாதார ஒழுக்க சீர்கேடுகள் எற்படுவதால், அழிவை எதிர் கொள்கின்றது. உலக நாடுகளுடன் இலங்கையை ஒப்பீட்டுப் பார்க்கும்போது, 1950 கள், 1970 கள் காலப்பகுதிகளில் மிக உயர் மட்ட சுகாதார வசதிகள் எமது நாட்டில் காணப்பட்டன. அவை இலவச சேவையாகவும் மக்களுக்கு நெருங்கிய வகையில் செயற்பட்டதாலும் சுகாதார வளமிக்க நாடாக, சர்வதேச மட்டத்தில் செலவாக்கும் சிறப்பும் பெற்றிருந்தது. ஆனால், அவை 1970 களின் பின்னரான காலக்கட்டத்தில் ஏனைய துறைகளைப் போல சுகாதார துறையும் படிப்படியாக தனியார் மயப்படுத்தப்பட்டமையால், லாபத்தினை நோக்கமாகக் கொண்டு தனியார் துறை வைத்தியசாலைகள் உருவாகும் நிலை ஏற்பட்டது. எமது நாட்டில் சுகாதாரத்துறையின் முழுச் செலவில் அரசு ஒதுக்கும் நிதி 39 சதவீதமாகும். மிகுதி 61 சதவீதம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இளம் சமூகத்தினர் பாலுறவு தேவைகளைப் பூர்த்தி செய்து, கொள்வதற்குப் பாதுகாப்பற்ற முறைகளைப் பின்பற்றுவதால், ம் முதலிய தொற்று நோய்களுக்கு இரையாவது அதிகரித்து வருகின்றது. பல துறைஙகளில் அறிவு வளர்ச்சி பெற்ற இளம் சமூகத்தினரிடம் பாலுறவு தொடர்பாக குறைந்த அறிவு காணப்படுவதால், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. ஆளுமை மிக்க இளம் சமூகத்தினர் இலக்கு, குறிக்கோள் இன்றி பயணிப்பதால், விசப் போதைப் பொருளுக்கு அடிமையாகி இளமையை அழித்து வருகின்றனர். இலங்கையல் 50 குடும்பங்களில் ஒரு குடும்ப அங்கத்தவர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார் இது எதிர்கால இளம் சமூகத்தை படு குழியில் தள்ளிவிடும்.

               இவ்வாறான நிலையை இல்லாது ஒழிக்க சுகாதாரத்துறை லாபத்தின் அடிப்படையில் செயற்படும் நிலை மாறி, மொத்த தேசிய வருமானத்திலிருந்து நான்கு சதவீதத்தை ஒதுக்கி, முற்றாக இலவச சேவையாக வழங்குவதோடு, அதன் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். பாலுறவு கல்வியைப் பாடசாலைகளிலும் ஏனைய சமூக நிறுவனங்களிலும் இளம் சமூகத்தினருக்கு கற்பிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்ற, பாதிக்கப்பட்ட இளம் சமூகத்தினர் தக்க மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு உரிகையுள்ளதோடு, அவர்கள் பாடசாலை செல்லவும் தொழில் பயிற்சியைப் பெறவும் தொழில் செய்யும் உரிமையும் உண்டு. சிறுவர், சிறுமியர் பற்றிய அறிவை இளம் சமூகத்திற்கு ஏற்படுத்தல் சமூகத்தின் தலையாய பணியாகும்.

 ‘CYBER SPACE … IS A CLOSE FRIEND’ என்று அழைக்கப்படும் சைபர் அவகாசம் - நெருங்கிய நண்பனாக இருப்பவன் என்பது தற்போது எமது நாட்டில் பெருந்தொகையானவர்கள் இணையத்தளங்களைப் பயன்படத்துவதுடன், பல்வேறு அன்றாட விடயங்களுக்கான தகவல்கள், அறிவு, தொடர்பாடல் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொடுக்கவும் பிரதான வடிவங்களாக மாறியுள்ளன. அவ்வாறே தமது தனிப்பட்ட விடயங்களைத் தெரிவிப்பதற்குச் சுதந்திரமான சூழல் காணப்படுவதுடன், இளம் சமூகத்தினர் சைபர் இடப்பரப்பை தம் வசப்படுத்த முற்படுவதைக் காணலாம். எவ்வாறாயினும் எமது நாட்டில் குறிப்பிட்டளவு இளம் சமூகம் சைபர் இடப்பரப்பில் செயற்பட தெரியாதவர்களாகவும் போதிய அறிவில்லாதவர்களாகவும் உள்ளனர். எனவே, அவர்கள் மானசீகமாக சிரமத்துக்கும் வெட்கத்திற்கும் ஆளானவர்களாக உள்ளனர் சைபர் இடப்பரப்பின் கொள்கையைப் பற்றி சமூகத்தினர் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். நேரத்தை வீணாக்குதல், சமூக குற்றசெயல்களை தூண்டுதல், ஏமாற்று வித்தை, பாலியல இச்சையைத் தூண்டுதல் முதலிய சந்தர்ப்பங்கள் தப்பான கண்ணோட்டதிதிற்குக் காரணம்.

 சைபர் இடப்பரப்பானது இளம் சமூகத்தின் நெருங்கிய நண்பன், ஆத்மார்த்தமான அறிவியலாளன் என்பதால், அதை கல்விக்கும் தொழிலுக்கும் பொழுதுபோக்கிற்கும் சமூக உதவிகளுக்கும் சமூக தேவைகளுக்கும் சமூக ஆக்கத்திற்கும் பயன்படுத்தும் விதம் பற்றி இளம் சமூகத்தினரிடையே மென்மேலும் தெளிவுறுத்தி, சைபர் இடப்பரப்பின் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வதுடன், அது பற்றி சமூகத்திற்கு தெளிவுறுத்த வேண்டும். சமூகத்தால் இந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிமான பணி சைபர் அவகாசத்தின் பயன்பாட்டை இளம் சந்ததியினருகும் பெற்றோருக்கும் ஒன்றாக இணைத்து தெளிவுபடுத்தவேண்டும். இளம் சமூகத்தின் அடிப்படை தேவைகளை, கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள நிகழ் கால சமூகமானது sports> media> friends> jobs> tell everything> education> law> health> entertainments> join communication முதலியவற்றை உள்ளடக்கிய YOUTH APP-பை அறிமுகப்படுத்த வேண்டும் இதன் மூலமாக இளையோர் சிந்தனையைச் சீர்ப்படுத் த முடியும்

 நாட்டின் தலைமைத்துவத்தை நடத்தி செல்வதும் சமூக, அரசியல், நிர்வாக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இளம் சமூகதின் பொறுப்பாகவும் உரிமையாகவும் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் சிவில் சட்டத்தைப் பற்றி இளம் சமூகத்த்pடையே நிiவும் குறைவான புரிதல் காரணத்தால், பொலிஷாரின் முறையற்ற கைதுகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் நிதமும் அவர்கள் உள்ளாவதைக் காணலாம். பணபலம், அரசியல் பலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர். சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் இதிலிருந்து விலத்தியிருக்கின்றனர். இந்த நிலைமைகள் மாற்றம் அடைவதற்கு அரசியல், பொருளாதார செல்வாக்கு காரணிகளால், இளம் சமூகத்தினர் தலைவர்களாக வருவதற்கு உள்ள சந்தர்ப்பங்களை நீக்கி, உண்மையாகவும் பொது நலத்துடன் சமூகத்திற்குத் தலைமை தாங்க விருப்பமுள்ள இளம் சமூகத்தினருக்குக் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன், இன்று நடை முறையில் உள்ள சட்ட திட்டங்கள் பற்றிய அறிவை பாடசாலை மட்டத்திலிருந்து பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.

 தற்போது பாரிய பிரச்சினையாக இருப்பது இளைஞர், யுவதிகள் பொதுவான சமூக செயற்பாடுகளில் பங்கு பற்றாமையாகும். தலைமைத்துவ ஆளுமையுடன் செயற்படுவோர் குறைவாக இருப்பதாலும், கிராமங்களில் செயற்பாட்டு சங்கங்களில் கூட ஆண், பெண் சம மட்டத்திலான பரஸ்பர புரிந்துணர்வு செயற்பாடுகள் இல்லாததன் காரணமாகவும் மேற்கண்ட பிரசிசினைகள் நிலவுகின்றன. இனம் பலத்தை அடையும் போது நெருக்கமாக பழகுதல், சந்தேகம், குழு மன நிலை இல்லாத மன நிலை, இளம் சமூகத்தினரிடையே காணப்படுகின்றது. அதை தடுப்பதற்குப் பாடசாலைகளில் வருடாந்தம் சிறுவர் முன்னோடிகள் முகாம் (pழைநெநச உயஅpள) நடத்துவதற்கும் பிரதேச மட்டத்தில் சிறுவர் முன்னோடி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் நிகழ் கால சமூகமும் அரசும் முன்வர வேண்டும்.

 வாழ்க்கையின் பெறுமதியை இளம் சமூகத்திற்கு உணர்த்தி, தற்கொலை, விபத்து, கலவரம், வீட்டிலிருந்து வெளியேருதல் என்பன தொடர்பான அறிவை ஊட்டுதல் சமூகத்தின் பொறுப்பாகும். தற்கொலை செய்து கொள்ளும் மதிப்பீட்டில் எமது நாடு உலகில் மூன்றாம் இடத்தில உள்ளது. நாளொன்றுக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்வதுடன், 20 க்கு மேற்பட்டோர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இளையோராவர். எதிர் காலம் சிதைந்து போயுள்ளதன் காரணமாக நம்பிக்கையிளப்பிற்கு உட்படுகின்றனர். அவ்வாறே இளம் தற்கொலையில் எமது நாடு இரண்டு தசாப்தங்களாக உலகத்தில் ஐந்து நாடுகளுக்குள் அடங்கின்றது. பெண்கள் 10 – 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்வதில் உலக அரங்கில் எமது நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. எமது நாட்டில் 2015 ஆம் ஆண்டில் அவசர விபத்துக்கள் 2,771 இடம் பெற்றுள்ளதுடன், அதில் 5,200 பேர் இறந்துள்ளனர். அந்த மரணங்களில் சிலவற்றைத் தவிர மற்றைய அனைத்தும் வீதி விபததுக் காரணமாக ஏற்பட்டவைகளாகும். இவ்வாறு இறந்தவர்களில் அதிகமானோர் இளம் சமூகத்தினர். நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்ய வேண்டிய இவர்கள் இவ்வாறு தற்கொலையாலும் விபத்தாலும் மரணத்தைத் தழுவுவது வேதனைக்கும் கவலைக்கும் உரிய விடயமாகும்.

 இவற்றைத் தடுப்பதற்குச் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இளம் சந்ததியினருக்கும் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி, ஆட்சி முறைக்கு சேர்த்துக்கொள்வதற்காக செயற்றிடம் ஒன்றை சமூகமும் அரசாங்கமும் இணைந்து வகுக்க வேண்டும். விபத்துக்களைக் குறைப்பதற்கும் விழிப்புணர் கருத்தரங்குகளையும் செயற்றிட்டங்களையும் நடத்தவேண்டும்.

 சூழலையும் புவியையும் பாதுகாப்பது அனைத்து சமூகத்தினதும் கடைமையாகும். மனித வாழ்வுடன் நேரடித் தொடர்பு கொண்ட சூழல் இலாபத்தை தமது ஒரே குறிக்கோளாக கொண்ட பொருளாதார முறைகாரணமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது. மிருகங்கள், பறவைகள், காடுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றாடல் தொகுதியையும் அழித்தொழித்ததின் காரணமாக காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தம், நோய்கள் முதலியன சமூகத்தைப் பாதித்துள்ளன. எதிர் கால தலைமுறையினருக்குச் சுற்றாடலை பாதுகாப்பாக கையளிக்க வேண்டும். சூழல் பற்றி அன்பும் பரிவும் பிடிப்பும் ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விடய நெறிகளைப் பாடசாலை கல்வியிலும் உயர்க் கல்வியிலும் பாடமாக கற்பிப்பதன் மூலம் இளம் சமூகத்திற்கு விழிப்புணர்வை உண்டு பண்ண முடியும்.

 வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, ஆண் - பெண் சமத்துவத்தை இளம் சமூகத்திற்குத் தெளிவுப்படுத்தல் முக்கியமான விடயமாகும். பொருளாதாரம், அரசியல் அதிகாரங்கள் காரணமாக, உயாவான சலுகைகளைச் சிறிய குழுவினரே பெறுகின்றனர். எமது சமூகத்தில் பெரும்பான்மையினர் பெண்கள் என்னதால், பலவும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. தொழில் செய்யும் போது சமவுரிமை இன்மை, அதிகாரம் இன்மை, அங்கீகாரம. இன்மை, ஒடுக்குமுறை, சமூகத்தில் நிலவும் பிழையான கருத்தியல், திருமணத்தின் போது எதிர் கொள்ளும் சவால்கள் முதலிய சிக்கலகளில் இருந்து ஓரளவு பெண்கள் விடுபட்ட போதும் முழுமையாக விடுபடவில்லை. அதிகாரத்துடனான தந்தையிடமோ, கணவனிடமோ உருவான நிலையில் இளம் பெண்கள் அரசியல் பாத்திரங்களாக இருந்த போதிலும், சாதாரண பெண்களுக்கு அரசியலில் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. இவற்றுக்கு உடனடித் தீர்வாக சமூகத்தில் நிலவும் பின் தங்கிய எண்ணங்களை உடனடியாக மாற்ற வேண்டும். தனியார் துறையில் வேதனத்தை சமமாக வழங்குதல், அனைத்து தேர்தல்களிலும் 25 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் வழங்குதல், சாரதி அனுமதிபத்திர கட்டண பணத்தை 50 சதவீதத்தால் குறைத்தல் முதலியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேலும் இளம் பெண்களின் செயற்பாட்டைக் கூட்டலாம்.

 தொகுத்து நோக்கும் போது இன்றைய இளையோர் நல்ல சிந்தனைகளுடன், திகழ்ந்தாலும் சில சட்ட விரோத செயல்கள் அவர்களைத் திசை திருப்புகின்றன. எவ்வாறாயினும் அவர்களிடம் காணப்படும் நல்ல சிந்தனைகளை இன்றைய சமூகம் கட்டியெழுப்பி பாதுகாத்து எதிர்கால சமூக வளர்ச்சி, இளையோரின் சிந்தனையுடனும் நிகழ் கால சமூகத்தின் பங்கேற்பும் பரஸ்பரம் தொடர்பு கொண்டுள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தி ஆரோக்கியமன சமூகத்தை உருவாக்க முடியும். இலங்கையில் 1990 களில் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களில் 21 சதவீதத்தினர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க பட்ட போதிலும் தற்போது 17 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2020 களில் குறைந்த பட்சம் உள்வாங்கப்படும் தொகை சித்தியடைந்த தொகையில் 2ஃ3 ஆக அதிகரிப்பதன் மூலமும் தொழில் வாய்ப்பையும் தொழிற்சாலைகளையும் பெருக்குவதன் மூலமும் இளம் சமூகத்தின் சிக்கல்களைக் குறைக்கக் கூடிய நிலை தோன்றும். நவீன இளம் சமூகத்தினர் சமவுரிமை, சுற்றாடல் நேசிப்பு, நச்சுப்போதை எதிர்ப்பு, பெண்ணை மதித்தல, தாயகத்தை நேசித்தல, ஊடகங்களைச் சரியாக பயன்படுத்தல் முதலிய பண்புகளை உள்வாங்கி செயற்பட்டால், எதிர் காலத்தில் இளையோரின் நல்ல சிந்தையுடன், நல்ல சமூகத்தை நிகழ் கால சமூகத்தின் ஆதரவுடன், கட்டியெழுப்ப முடியும்.

- புயல் ஸ்ரீகந்தநேசன்

Pin It