“மதம் என்பது எப்படி உணர்ச்சி யற்ற நிலைகளின் உணர்ச்சியாக இருக்கிறதோ, அதே போன்று இதய மற்ற உலகின் இதயமாகவும், ஒடுக்கப் பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு வாய்த்த அபின்” என்றார் மார்க்ஸ்.

இது உலகில் நிலவும் எல்லா மதங்களுக்கும் பொருந்தும். என்றாலும் இப்பண்பு எல்லா மதங்களுக் கும் பொதுவானதாக உள்ள அதே வேளை, ஒவ்வொரு மதத்துக்கும் குறிப் பானதாகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியானதாகவும் ஆன தனித் துவமான பண்புகளையும் கொண் டிருக்கிறது.

தமிழகத்தில் இந்து, இசுலாம், கிறித்தவம், சமணம், பௌத்தம், சீக்கியம் எனப் பல மதங்கள் நில வினாலும், இவ்வரிசையில் பின் மூன்று மதங்களும் மிகச் சிறுபான்மையே நிலவும் சூழலில் முதல் மூன்று மதம் சார்ந்தவர்களே மிக அதிகம் எனலாம்.

இம்மூன்றிலும் இந்து பெரும் பான்மை மதம் என்பதால், இசுலாம், கிறித்தவம் ஆகியன சிறுபான்மை மதங்கள் எனப்படுகின்றன. எனவே இப்பெரும்பான்மை மற்றும் சிறு பான்மை ஆகிய இம்மூன்று மதங்களின் குறிப்பான பண்புகள் பற்றி மட்டும் சில வார்த்தைகள்.

இந்து மதம் மனிதனை பிறப்பு அடிப்படையிலேயே பாகுபடுத்தும் கொடுமையான சாதியக் கட்டமைப் பைக் கொண்டதாக இருக்கிறது. இந்த ஒரு கொடுமையையும், அது சார்ந்து நிலவும் பிற கொடுமைகளையும் தாண்டி, குறிப்பான கட்டுத் திட் டங்கள், மதக்கோட்பாடுகள் என்கிற எதுவும் இந்து மதத்திற்குக் கிடையாது.

இந்து மதத்தினருக்கு மையப் படுத்தப்பட்ட விதிமுறைகள், ஒழுக்க வியல் கோட்பாடுகளை வலியுறுத்தும் மத நூலோ, மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்போ கிடையாது.

கடவுள் உண்டு என்று சொல் லலாம். இல்லை என்றும் சொல்ல லாம். கோயிலுக்குப் போகலாம். போகாமலும் இருக்கலாம். பட்டை, நாமம் போட்டுக் கொள்ளலாம், போட்டுக் கொள்ளாமலும் இருக்க லாம். சாதி பார்க்கலாம், பார்க்கா மலும் இருக்கலாம். சொந்த சாதிக்குள் திருமணம் செய்யலாம், மாற்று சாதி யிலும் திருமணம் செய்யலாம். எந்த வேத நூலையும் படித்தறிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தெரிந்து இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். அப்படிப் படித்தறிய குறிப்பிட்ட நூல் என்றும் ஒன்று இல்லை. தமிழில் சைவ, வைணவ நூல் கள், பக்திப் பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. எதையும் படிப்பதோ, படிக்காமலிருப்பதோ அவரவர் விருப் பம். எதுவும் கட்டாயமில்லை. வடக் கிருந்து போதிக்கப்பட்ட நூலான கீதை யைப் படிக்கலாம், படிக்காமலும் இருக்கலாம்.

சொந்த வாழ்வில், பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில், குடும்பத்தில் நிலவும் நல் நிகழ்வு, கெடு நிகழ்வுகளில் சடங்காச்சாரங்களைப் பின்பற்றியும் செய்யலாம், எதையும் பின்பற்றா மலும் செய்யலாம்.

ஆக, இந்து மதம் ஒரு மனிதனை ஒரு சாதியில் பிறக்க நேரும் கட்டுப் பாட்டை வைத்து, அதன் பிறகு எப்படி யும் வாழ்ந்து போ என அவனை தண் ணீர் தெளித்து சுதந்திரமாக விட்டு விடுகிறது. சாதியாய்ப் பிறக்க வைக் கிற கட்டுப்பாட்டிலும் தற்போது அதன் இறுக்கம் தளர்ந்து சுதந்திரம் தலை தூக்கி வருகிறது. இது இந்து மதம்.

இசுலாம் : கடவுள் ஒருவரே. அவர் அல்லா மட்டுமே. முசுலீமாக உள்ள ஒவ்வொருவருக்கும் நாள் தோறும் தொழுகை முக்கியம். இசு லாமிய மத நூலான குரான் முக்கியம். அதை அறிந்திருக்க வேண்டியது முக் கியம்.

இசுலாமியராக உள்ள எவருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை, மதக் கண்காணிப்பு, கட்டுப்பாடு, பழக்கவழக்க விதிமுறைகள், பண் பாட்டு நடைமுறைகள் மத நூலின் விதிமுறைகள் படி நடைபெற வேண் டியது முக்கியம்.

அதேபோல எந்த ஒரு முசுலீமும், உதிரியாகத் திரியமுடியாது. ஒவ் வொரு முசுலீமும் உள்ளூர் ஜமாத் முதல் உயர்மட்ட நிலை வரை அதன் கட்டுப்பாட்டிற்குள்தான் இயங்க வேண்டும். அப்படியில்லாமல் முசு லீமாக இருக்கமுடியாது.

இசுலாத்தில் மதக் கோட்பாட் டின் வழி சாதிப் பிரிவுகள் இல்லை என்றாலும் மதப் பிரிவுகள் உண்டு. பெரும்பாலும் மண உறவுகள் என்பது இம்மதப்பிரிவினருக்குள்தான். இதைத் தாண்டி மதம் மாறிய இசுலாமியர்கள் மத்தியல் சாதியச் சாயலோடு கூடிய பாகுபாடுகள், தீண்டாமை, சில இடங் களில் நிலவுவதாக செய்திகள் உண்டு.

என்றாலும் இசுலாமியர் அனை வரும் ஒரு கடவுளுக்கு - அல்லாவுக்கும், ஒரு மத நூலுக்கு - குரானுக்கும் கட்டுப் பட்டு அதன்படி வாழக் கட்டமைக் கப்பட்டவர்கள், நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள். அதற்கு அப்பால் வாழ உரிமையற்றவர்கள்.

கிறித்தவம்: இசுலாம் போலவே ஒரே கடவுள் யேசு. ஒரே வேதநூல் விவிலியம் என நிர்ப்பந்திக்கப்பட் டவர்கள். யேசுவைத் தாண்டி, யேசுவை ஈன்ற அன்னை மேரியை வழி படலாம். அதற்கு அப்பால் யாரையும் வழிபடக் கூடாது.

மற்றபடி கிறித்துவர் எனப்படும் ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் கிறித்துவ மத விதிமுறைகளைக் கடைப் பிடிக்கக் கடமைப்பட்டவர்கள். அப்படிக் கடைப் பிடிக்காமல் அவர் கிறித்துவராக வாழ முடியாது.

இசுலாமியர்கள் போலவே இவர் களும் உதிரியாய் வாழமுடியாது. அமைப்பு ரீதியாய் கட்டமைக்கப் பட்டவர்கள். உள்ளூர் அமைப்பு, மாவட்ட அமைப்பு, மாநில அமைப்பு, இந்திய அமைப்பு, உலக அமைப்பு என கட்சி அமைப்பு போலக் கட்டுப் படுத்தப்பட்டவர்கள்.

கிறித்துவத்திலும், மதப் பிரிவுகள் - கத்தோலிக்கர்கள், ப்ராட்டஸ்டண் டுகள், பெந்தகோஸ்துகள் என பல உண்டு. தவிரவும் மத விதிப்படி சாதி யில்லை என்றாலும் மதம் மாறிய கிறித் துவர்கள் பலரும் இன்னமும் சாதி அடையாளத்தோடேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இதுவே இம்மூன்று மதங்களுக் குமான குறிப்பாக இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்குமான வேறுபாடு.

எனவே இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டும் இம்மதங்களை அதாவது மக்களுக்கான அபினியை அணுக ஆராய வேண்டியுள்ளது.

மதங்கள் பற்றி மேலே குறிப்பிட் டவாறான கூற்றைச் சொன்ன மார்க்ஸ் அதோடு நிறுத்தவில்லை. மனித குலத் தின் “யதார்த்தமான ஆனந்தத்திற்காக மாயையான ஆனந்தமாக உள்ள மதத்தை ஒழித்தாக வேண்டியிருக் கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, மனித குலத்தைப் பிடித்துள்ள கடுந்துன்பங்களிலிருந்து துயரங்களிலிருந்தும் மக்களை மீட் டெடுக்க வழி காட்டாமல், அவர் களது இடுக்கண்களைக் களைய வழி காட்டாமல், இவற்றை அப்படியே நிலைக்க, நீடிக்கவிட்டு மக்களுக்கு மாயையான ஆனந்தத்தை சுகத்தைத் தருவதாகவே மதங்கள் இருக்கின்றன. எனவேதான் மக்களுக்கு உண்மையான ஆனந்தத்தை அளிக்க, அதற்கான விழிப்பூட்டி, மாயையான ஆனந்தத் தைத் தரும் இம்மதங்களிலிருந்து மக் களை மீட்டாக வேண்டியிருக்கிறது என்பதே இக்கூற்றின் சாரம்.

காரணம், உலகின் எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அதன் தோற்ற காலத்தில் அது மக்களை இன் னல்களிலிருந்தும், இடுக்கண்களிலி ருந்தும் மீட்க முயல்வதான தத்துவங் களை முன் வைத்தாலும், இவை அனைத்துமே நிறுவனமயமாகி, வளர்ச்சி பெற்று இறுகிய பிறகு, ஆதிக்க நலன்களுக்குத் துணை புரிவதாய், பிற மதத்தினரையோ, சொந்த மதத்தின ரையோ கொன்று குவிப்பதை, அழித் தொழிப்பதையே தொழிலாய் நடை முறையாகக் கொண்டு வருகின்றன.

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனக் கொல்லாமையப் போதித்த பௌத்த மதம்தான் தமிழீழத் தமிழர்களையும், போராளிகளையும் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித் தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன கிறித்துவ மதம்தான், புனிதப் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கானோரை அழித்தொழித்தது. சக மனிதனையும் நேசிக்க போதித்த இசுலாமிய மதம் தான் இந்திய மண்ணில் இந்துக்களின் கோயில்களை இடித்துத் தகர்த்தது. சூரையாடி இந்துக்களைக் கொன்றது.

அன்பே சிவம் என்று போதித்த சைவம்தான் இந்து மதம்தான், தமிழகத் தில் பல்லாயிரம் சமணர்களைக் கழுவி லேற்றியது. ஒரே மதத்தைச் சேர்ந்த நாடுகளோ, ஆதிக்கப் போட்டிகளில் பல் வேறு மதம் சார்ந்த கூட்டணிகளை அமைத்து, மதப் பாகுபாடின்றி மனிதர் களைக் கொன்று குவித்தது.

கத்தோலிக்கர்களின் உலக தலைமை நிறுவனமான ரோமைத் தலைநகரமாகக் கொண்ட இத்தாலி, பாசிசத்தைத் தழுவி ஜெர்மானிய நாசி சத்துடன் தோள்நின்றதுடன், பௌத்த ஜப்பானையும் தங்களுடன் இணைத் துக் கொண்டது. கிறித்துவ மதம் சார்ந்த அமைப்புகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு சேர்ந்து, அதே கிறித்துவ ஜெர்மன், இத்தாலி, பௌத்த ஜப்பான் ஆகியவற்றுக்கு எதி ராக போர் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டி நேர்ந்தது.

ஆக, எந்த மதமானாலும், அவை எதைப் போதித்தாலும், அவை ஆதிக் கங்களுக்குத் துணை புரிவதாக சேவை செய்வதாக இருந்து வருகிறது. அதே வேளை தன் சாரத்தை மறைத்து, மக் களை உய்விக் வந்ததாக போலித் தோற் றம் தந்து மக்களை மாயையான ஆனந் தத்தில் ஆழ்த்துகிறது. எனவேதான் பொதுவில் மதம் என்கிற மாயையி லிருந்தே மக்கள் விடுபட வேண்டும் என்கிற கருத்தை - அது எவ்வளவுதான் கடினமானதானாலும் அது எவ்வளவு காலம் பிடிப்பதானாலும் அதை நோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற சிந்தனையை, மாந்த நேயப் பற்றாளர்களும் மனித உரிமை ஆர்வளர்களும் முன் வைக்கிறார்கள்.

ஆனால் கெடுவாய்ப்பாகத் தமி ழகச் சூழலில், இச்சிந்தனை அனைத்து மதங்களுக்கும் எதிரான சமநோக்குச் சிந்தனையாக முகிழ்க்காமல் இந்து, இசுலாம், கிறித்துவம் என்கிறப் பாகு பாட்டோடு, சிறுபான்மை என்கிற பெயரில், இசுலாம், கிறித்துவர்களுக்குச் சலுகை தந்தும், இந்து பெரும்பான்மை மதம் என்பதால் அதை மட்டுமே குறி வைத்துத் தாக்கியும், சமூக அறிவி யலுக்குப் பொருந்தாத, பொருத்தமற்ற கோட்பாடுகளையும் நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகின்றது.

இதன் நீட்சி ஒரு தமிழன் கிறித் துவனாகவோ, இசுலாமி யனாகவோ இருக்கலாம். ஆனால் இந்துவாக இருக்கக்கூடாது என்னும் நோக்கில், ‘தமிழர்களே இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்னும் முழக் கத்தை முன்வைத்து, இந்து மதத்திற்கு எதிராக மட்டுமே தங்கள் பிரச்சா ரத்தை முன்னிறுத்துகின்றன. இது எந்த வகையில் சரி. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏற் படுத்தியிருக்கிறது என்பன நமது ஆழ்ந்த அக்கறைக்கும், விமர்சனத் திற்கும் உரிய செய்திகள். எனவே அது பற்றி மட்டும் சில கருத்துகள்.

இம்மதங்களுக்கும் தமிழர்களுக் கும் உள்ள உறவு குறித்தும் தற் போதைய அவற்றின் நிலை குறித்தும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந் தியத் துணைக் கண்டத்துள் நிலவிய தொன்மைமிக்க நாகரிகமான சிந்து சமவெளி தமிழர் நாகரிகம் எனக் கொண்டால் தமிழர்கள் சிவ வழி பாட்டைக் கொண்டவர்களாக இருந் திருக்கிறார்கள் என்பது உறுதி.

இந்த சிந்துசமவெளி நாகரி கத்தைத் தகர்த்தோ வெற்றி கொண் டோ இந்தியத் துணைக் கண்டம் முழு வதும் பரவிய பார்ப்பனியம், பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழர் மத்தியில் பரவியிருந்த சமண, பௌத்த மதங் களை வெற்றி கொண்டு கோலோச் சியது. பின் அதுவே பேரரசுகள் காலத் தில் பெருவளம் பெற்று, பெருங் கோயில்கள், பெருந்தெய்வ வழி பாடாக மாறியது. பிற்காலத்தில் இதுவே இந்துமதம் எனப்பட்டது.

இவ்விந்து மதம் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதி யிலும் நிலவிய சூழலில்தான், இசு லாமியப் படையெடுப்பும் நிகழ்ந்து இசுலாம் மதம் பரவியது. இதற்கு அடுத்து ஐரோப்பியப் படை யெடுப்பை யட்டி கிறித்துவ மதம் பரவியது. பரவியது என்றால் தானாகப் பரவவில்லை. அதிகாரத்தில் இருந் தவர்கள் அச்சுறுத்தல் மூலமோ, சலுகை கள் அளிப்பதன் மூலமோ இந்திய மண்ணில் வாழ்ந்த மக்களை மத மாற்றம் செய்தார்கள்.

இசுலாமியர்கள் ஆட்சிக் காலத் தில் இது பெருமளவும் அச்சுறுத்தல் மூலமாகவும் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இது பெருமளவு சலுகைகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ந்தது எனலாம். இவை யல்லாமல் ஒரு சிறு பான்மை விகித அளவு தானாக மனமு வந்தும் மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

எனில் இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்தியா முழு வதும் பெருமளவும் பரவியிருந்த பார்ப் பனியம் - இந்து மதம் இந்த மண்ணின் சொந்த மதம் என்றால், இசுலாத்தும், கிறித்துவமும் வெளியேயிருந்து வந்த மதம் எனக் கொள்ளலாம். அதெல் லாம் இல்லை பார்ப்பனியமும் வெளி யிலிருந்து வந்ததுதான். ஆரியர் வருகை யால் நேர்ந்தது. எனவே அதுவும் அந் நிய மதமே எனக் கொள்வதானால், இந்து, இசுலாம், கிறித்துவம் இவை மூன்றையுமே அன்னிய மதம் என்றும் வாதிடலாம்.

ஆனால் இவற்றுள் நாம் புரிந்து கொள்ள வேண்டியது பார்ப்பனியம், இந்து மதம் இந்தியத் துணைக் கண் டத்தில் சொந்த மதம் போலவும், இசு லாத்தும் கிறித்துவமும் அந்நிய மதம் போலவும் நோக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

பார்ப்பனியமும் இந்து மதமும் இந்த மண்ணின் சொந்த மதம் போல தோற்றம் தருவதன் காரணம், பார்ப் பனியம், இந்த மண்ணின் எல்லா இறை வழிபாட்டையும், அதாவது எல்லாக் குலக்குழு தெய்வங்களையும், தன் னுள்ளே ஈர்த்து செறித்து, அனைத்தை யும் ஒன்றுதிரட்டிய பெருந் தெய்வங் களை நிறுவியது. இப் பெருந் தெய் வங்களையும் எல்லாம் வல்ல ஒன்றே, ஒரே தெய்வமே என்பதாக ஆக்காமல் அவற்றுள் தொழில் பிரிவினை செய்து துறைவாரிக் கடவுள்களைக் கட்ட மைத்தது. ஆண கடவுள்களை எடுத் துக்கொண்டால் பிரும்மா, சிவன், விஷ்ணு, முருகன், விநாயகன், ஆஞ்ச நேயன், பெண் தெய்வங்களை எடுத் துக் கொண்டால் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இப்படி எண்ணற்ற தெய்வங் கள் எண்ணற்ற சடங்குகள் எல்லா வற்றையும் இது ஏற்றுக்கொண்டு, அனைத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக உள்வாங்கிக் கொண்டது. இதிலும் சாதி வித்தயாசம் பார்ப்பது போல் சடங்கு வித்தியாசம் பார்த்து சில சடங்குகளை இந்துமதம் இழிவு படுத்தலாம். ஆனாலும் அது இந்துவுக் குள்தான் அடக்கம். எப்படி மனிதர் களுக்குள்ளே சாதியப் பாகுபாடு ஏற்றத் தாழ்வு இருந்தாலும் அனைத்து சாதி யினரும் இந்துக்களோ அதேபோல அனைத்து சாதி சடங்குகளும் இந்து சடங்குதான். இப்படி இது எல்லாவற் றையும் ஏற்றுக் கொண்டதால்தான் இது சொந்த மண்ணின் மதம் போல் தோற்றம் தருகிறது.

ஆனால் பிற மதங்கள் அப்படி யல்ல. இசுலாமும் கிறித்தவமும் இந் திய மண்ணில் நிலவிய எந்த கடவுளை யும் எந்த சடங்கையும் தங்கள் மதத் திற்குள் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அல்லா ஒருவரே கடவுள், யேசு ஒருவரே கட வுள். அவருக்கு அப்பால் அவருக்கு நிகராகவோ வேறு யாருமே கிடை யாது என்று மறுப்பதோடு மட்டு மல்ல, வாழ்முறையும் தங்கள் தங்களுக் கேயான தனித்தன்மையோடு கட் டமைத்துக் கொள்கிறார்கள்.

இசுலாமியர் என்றால் அதற்கான வாழ்முறை பழக்கவழக்கங்கள் தனி. கிறித்துவர் என்றால் அதற்கான வாழ் முறை, பழக்கவழக்கங்கள் தனி. இவற் றுள் எதுவுமே தமிழ் அடையாளத் தோடு ஒட்டுவதில்லை. சங்கமிப்பது மில்லை. இதனால்தான் இவர்கள் அந் நியர் போல், அந்நிய மதம் போல் தோற்றம் தந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கிறித்துவராக, இசுலாமியராக மதம் மாறுபவர்கள் அனைவரும் காலம் காலமாக இந்து கடவுள்களை அல்லது சிறு தெய்வங் களை வழிபட்டு வந்தவர்தான் என் றாலும் அவர் மதம் மாறிய உடனே அவர் குரானுக்கோ, பைபிளுக்கோ சொந்தக்காரர் ஆகி விடுகிறார். இது படிப்படியாக அவர்களைத் தமிழ் அடையாளத் திலிருந்து அந்நியப்படுத் திவிடுகிறது. தமிழராகப் பிறந்த ஒருவர் இசுலாமியராக மாறி அராபியை இறை வழிபாட்டு மொழியாக ஏற்றுக் கொள்கிறார். அதேபோல பலர் கிறித் துவராக மாறி, இறை வழிபாட்டை தமிழிலே நடத்தினாலும், பைபிளின் வாழ் முறையோடு தன்னை அடை யாளப்படுத்திக் கொள்கிறார்.

இதிலென்ன தவறு, அவரவரும் அவரவர் சார்ந்த மதத்துடன்தானே தங் களை அடையாளப் படுத்திக் கொள் வார்கள் என்று சிலர் கேட்கலாம். நியாயம். ஆனால் ஒரு இசுலாமியராக, ஒரு கிறித்துவராக மாறும் ஒருவரின் தனி அடையாளம் சார்ந்த உளவியல் கட்டமைப்பு வேறு. தன்னை இந்து வாக கருதிக் கொள்கிற அல்லது அழைக்கப்படுகிற ஒரு மனிதனில் தனித் துவம் சார்ந்து அமையும் உளவியல் கட்டமைப்பு வேறு.

ஒரு இந்து எல்லா மதத்தின ரோடும் சங்கமிக்கிறவராக இருப்பார். ஆனால் ஒரு இசுலாமியர், கிறித்துவர் அப்படி சங்கமிக்கிறவராக இல்லாமல், அப்படியே சங்கமித்தாலும் தன் தனித்துவ அடையாளம் சார்ந்த விழிப் புடனே அத்தனித்துவத்தைக் காப்ப வராகவே இருப்பார்.

மதப் பிரச்சாரத்திலும் இசு லாமிய கிறித்துவ மதப் பிரச்சாரங் களில் மறைமுகமாக ஒரு வன்முறை இழையோடும். இரண்டிலும், அவர் கள் வணங்குகிற வழிபடுகிற அந்த ஒரு வர் மட்டுமே கடவுள், அந்த ஒரு வரைத் தாண்டி வேறு எவரும் கடவுள் அல்ல. அப்படி ஒருவர் கிடையாது. உண்டு என்று எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற ஒரு அடாவடித்தனம் இருக்கும். ஆனால் இந்து மதத்தில் அப்படி கிடையாது. இதில் எல்லா உயிர்களும் கடவுள்தான். தவிர கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றால், உயிரற்ற பொருள்கள் கூட கடவுள் உறையும் இடம்தான். இத னால்தான் சாணியையும் பிடித்து வைத்து பிள்ளையார் என்று கும்பிடு கிற பழக்கம் ஒரு இந்துவுக்கு இருக் கிறது.

குழந்தைகளுக்கு உடம்பு சரி யில்லை என்றால் ஒரு இசுலாமியரிடம் போய் பாடம் அடித்துக் கொள்ள இந்துத் தாய் மார்கள் தங்கள் குழந் தையைத் தூக்கிக் கொண்டு போவ துண்டு. ஆனால் எந்த இந்து சாமி யாரிடமாவது - இவர்களில் பலர் யோக்கியமாய் இல்லை என்பது தனி - பிற மதத்தவர் வந்து மருத்துவ சிகிச் சைக்கோ, வழிபாட்டுக்கோ வந்து நிற் பதுண்டா. மாட்டார்கள். காரணம் அவர்களது மதம் தடுக்கும். அல் லாவை மீறி, யேசுவை மீறி இன் னொருவர் மீது நம்பிக்கை வைப்பது, அப்படிப்பட்டவரை நாடிப் போவது மதக்குற்றம். அதோடு மட்டுமல்ல, ஒரு இந்துவாக இருப்பவர் ஸ்டாலின், நெப் போலியன் என்று இந்து அடையாளம் இல்லாமல் வேறு அடையாளம் சார்ந்து எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம். கொள்ளமுடியும். ஆனால் ஒரு இசுலாமியர், கிறித்துவர் தம் மத அடையாளம் சாராத எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ள முடியாது. இப்படி நிறைய வேறுபாடு கள் சொல்லலாம்.

இப்படியெல்லாம் சொல்வதை வைத்து ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போல் இந்து மதத்துக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் கருதிக்கொள்ள கூடாது. ஒவ் வொரு மதத்திலும் உள்ள பழக்க வழக்கங்கள், கருத்தோட்டங்கள், பிற மதம் சார்ந்த அணுகுமுறைகள் எப்படி இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்வதற்காகவே இது. இதில் சொல்லப்படும் கருத்துகளின் வாத எதிர்வாதங்கள் பற்றித்தான் நோக்க வேண்டுமேயல்லாது, இது இன்னார் குரல் போல் இருக்கிறதே என்பது வாயடைக்கும் முயற்சியே தவிர வாத மாகாது. வாதம் என்றால் இதற்கு முறையான பதிலைச் சொல்ல வேண் டும். இதுபோன்ற கருத்துகளைச் சொன்னால் ஏற்கெனவே சிலர் நீங்கள் என்ன ஆர்.எஸ்.எஸ். வகையறாவா என்று கேட்கின்றனர்.

நாம் சொல்வது என்னவென்றால் பிரச்சினை அதுவல்ல. நமக்குப் பிரச் சினை எல்லா மதங்களுமே கொள்கை வழியில் மாந்த நேயத்தை வலியுறுத்து வது போல் தோன்றினாலும், நடை முறையில் அவை மக்களுக்கு எதிராக ஆதிக்கச் சக்திகளுக்கு சேவை செய்வ தாகவே இருக்கின்றன.

இப்படி இருக்க, இதில் என்ன இந்து, இசுலாம், கிறித்துவம் என்று வேறுபாடு, பழைமைவாதம், அடிப் படைவாதம், மூடத்தனம், பிற் போக் குத்தனம் எல்லா மதத்திலும்தான் நிலவு கிறது. எனவே இவை எந்த மதத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து நில்லுங் கள். அதில் ஒரு மதத்துக்கு சலுகை, இன்னொரு மதத்துக்கு எதிர்ப்பு என்றால் இதுதான் நியாயமற்ற அணுகு முறை என்கிறோம்.

அதாவது ஒரு தமிழன் இசுலாமி யராக இருக்கலாம், கிறித்துவராக இருக்கலாம். ஆனால் இந்துவாக மட்டும் இருக்கக்கூடாது என்கிறது தமி ழகத்தில் உள்ள ‘பகுத்தறிவுச்’ சிந்தனை. இதனடிப்படையில்தான் இந்து மதத் தைவிட்டு வெளியேறு என்கிற முழக் கம் ஒரு சனநாயக, சீர்திருத்த முழக்கம் போல் இங்கு முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என்பதுதான் நம் விவாதத்துக்கு உரியது.

மேலே குறிப்பிட்டவை அனைத் தும் ஒவ்வொரு மதம் சார்ந்தும் நிலவும் போக்குகளில் ஒருசில துளிகள். இவை அனைத்தும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப் படவேண்டும் என்றாலும் அதற்கான தொடக்கப் புள்ளியாக வலியுறுத்தப் படுபவையே இக்கருத் துகள். இது பற்றி சனநாயக உணர்வா ளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.

காரணம், நாளும் பல இந்துக்கள் மத மாற்றத்துக்கு, குறிப்பாக கிறித்துவ மத மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட் டுதான் வருகிறார்கள். இவர்கள் எப்படி மாற்றப்படுகிறார்கள். ஏன் மாற்றப் படுகிறார்கள், இதன் பின்புலன் என்ன? இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், இதுபற்றி நம்மால் என்ன செய்ய முடியும், செய்யலாம் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

Pin It