அமைதி காத்த முஸ்லிம்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் அம்மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயலாளராக இருக்கிறார். கடந்த 6ம் தேதி செவ்வாய் கிழமை சமூக விரோதிகள் சிலரால் தாக்கப்பட்ட ஆனந்த் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வேலை முடித்து டூ வீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டி ருந்த ஆனந்தை வழி மறித்த சமூக விரோதிகள் சிலர் அவர் மீது தாக் குதல் நடத்தி விட்டு ஓடி விட்ட னர்.

இச்சம்பவம் நடந்தபோது அப் பகுதியில் மின்தடை ஏற்பட்டிருந் ததால் தாக்கியவர்கள் யார் என் பதை ஆனந்தால் அடையாளம் காண முடியவில்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரமுகராக ஆனந்த் இருப்பதால் இப்பிரச்சினையை வகுப்பு பதட்ட மாக மாற்றும் முயற்சியில் ஈடு பட்ட கோவை மாவட்டத்திலிருக் கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந் துத்துவா அமைப்புகள், முஸ்லிம் இளைஞர்கள்தான் ஆனந்தை தாக்கி விட்டனர் என்று வதந்திக ளைப் பரப்ப ஆரம்பித்தனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் கடைகளை அடைக்கச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட இந்துத்து வாவினர், அரசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தினர். பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ் ஒன்றுக்கு இந்த வன் முறைக் கும்பல் தீ வைத்ததில் அது முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தொடர்ந்து, கோவை மாவட் டத்தின் பெரிய நாயக்கன்பாளை யம், துடியலூர் ஆகிய பகுதிகளில் சாலை மறியல் செய்து பொது மக் களுக்கு இடையூறு ஏற்படுத்திய இந்துத்துவாவினரை கரித்துக் கொட்டினர் அப்பகுதி மக்கள்.

இப்பகுதியில் உடனடியாக மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமை யில் போலீஸ் படை குவிக்கப் பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.

போலீஸாரின் அலர்ட் நடவ டிக்கைகளால் கோவை மாவட்டத் தில் தாங்கள் எதிர்பார்த்த விளை வுகள் ஏற்படவில்லை என்பதால் அருகாமை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப் பினர். ஆனால் அப்பகுதிகளில் ஏறக்குறைய அனைத்து கடைக ளும் திறந்திருந்ததால் அப்செட் டான இந்துத்துவாவினர் சில முஸ் லிம் கடைகாரர்களிடம் சென்று கடையை மூடுமாறு மிரட்டினர்.

இந்த முயற்சியும் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாததால் 8ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு அவை அழைப்பு விடுத்தி ருந்தன. கடைசியாக கோவை மாவட்ட ஐ.ஜி. சுந்தர மூர்த்தியை யும் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் உமாவிடமும் புகார் கொடுத்த இந் துத்துவா அமைப்பினர், முஸ்லிம் கள்தான் ஆனந்த் மீது தாக்குதல் நடத்தினர் என்று சொல்லி விட்டு வந்துள்ள னர்.

இந்த சம்பவத்தை சமயோசித மாக கையாண்ட கோவை போலீஸ் இது தொடர்பாக அவச ரப்பட்டு யாரையும் (11ம் தேதி இரவு நிலவரப்படி) கைது செய்யவில்லை. இதற்கி டையில் பாஜக தலை வர் பொன். ராதா கிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பா ளர் ராம கோபாலன் போன்றோர் இந்த சம்ப வத்தில் காவல்துறை சரி யான திசையில் விசார ணையை துவக்கவில்லை என தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகின்ற னர்.

காவல்துறை தரப்பில் விசாரித் தால், இது தனி நபர்கள் சம்மந்தப் பட்ட பிரச்சினை; இதை ஒரு தரப்பினர் - இரு சமூகங்களுக் கிடையேயான வகுப்பு பதட்ட மாக உருவாக்கப் பார்க்கின்றனர்.

கடந்த நவம்பர் 5ம் தேதி, இஸ் லாமிய இளைஞர் ஒருவரை இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் இரு தரப்பிலும் புகார் பெறப் பட்டு இந்து முன்னணியைச் சேர் ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட னர். இந்த சம்பவத்தின் எதிரொலி யாகக் கூட ஆனந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகி றோம் என்கிறது போலீஸ்.

ஆனால் மாவட்ட உளவுத்து றையோ, தாக்கப்பட்ட ஆனந்த் மேட்டுப்பாளையம் பாஜக நக ராட்சித் தலைவர் சதீஷ் குமாரின் சித்தப்பா மகன். சதீஷ் குமாருக்கு அரசியல் ரீதியாக சில மிரட்டல் கள் வருவதாக ஏற்கெனவே புகார் இருக்கிறது. ஆனந்த் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளில் ஆக்டிவாக செயல்படுபவர். இந்த வகையில் அரசியல் ரீதியான பின் னணி கூட இந்த தாக்குதல் முயற்சி இருக்கலாம் என்கின்றனர்.

எப்படி பார்த்தாலும், ஆனந்த் மீதான தாக்குதலில் யார் ஈடுபட் டிருந்தாலும் அது கண்டனத்திற் குரியது; தண்டனைக்குரியது என் பதில் மாற்றுக் கருத்து இல்லை. வன்முறையை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த இரண்டு மாத காலமா கவே தொழில் நகரமான கோவை யில் மீண்டும் கலவரத்தை உரு வாக்கி முஸ்லிம்களின் பொருளா தாரத்தை சீர்குலைக்கும் முயற்சிக ளில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் வணிக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத் துவதுமாக அவ்வப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை மேற் கொண்டே வந்திருக்கின்றன இந் துத்துவா அமைப்புகள்.

விநாயகர் சதுர்த்தி விழாக் களை அமைதியான முறையில் பக்திப் பரவசத்துடன் நடத்துவதை விட்டு விட்டு இந்த விழாக்களை முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விழாக்களாகவும், மத துவே ஷத்தை விதைக்கும் விழாக்களாகவுமே தமிழகமெங்கும் நடத்தி வருகின்றன.

1997ல் கோவையில் நடந்த கலவரத்தின் போது போலீஸார் இரண்டு நாட்கள் ஒத்து ழைப்பு தந்தார்கள். அதேபோல ஒரேயொரு நாள் போலீஸ் ஒத்துழைப்பு தந்தால் கோவையை குஜராத்தைப் போன்று ஆக்குவோம் என வெளிப்படையாகவே இந்துத்துவாவினர் பேசி வருகின்றனர்.

இதற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் இது வரை எடுக்கப்படவில்லை. இதே மேட்டுப்பா ளையத்தில் கடந்த 5ம் தேதி முஸ்லிம் பெண் கள் மீது இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தி னர். ஆயினும் இச்சம்பவத்தையொட்டி காவல் துறையில் முஸ்லிம் தரப்பு புகார் அளித்து விட்டு அமைதி காத்ததே தவிர, வகுப்புப் பதட் டத்தை ஏற்படுத்தும் வகையில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆயினும், சமூக விரோதிகள் சிலர் ஆனந்தை தாக்கியதை வைத்து, தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் தெரியாத நிலையி லேயே முஸ்லிம்களின் கடைகளை எரித்துள்ள னர் இந்துத்துவாவினர். முஸ்லிம் மதகுரு ஒருவ ரையும் தாக்கியுள்ளனர். ஆயினும் அப்பகுதி முஸ்லிம்கள் இன்னும் அமைதி காத்தே வரு கின்றனர்.

1997 கலவரம் கோவை மாவட்ட முஸ்லிம்க ளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதால் இதுபோன்ற அசாதாரண சூழல்களின்போது அவர்கள் அமைதி காத்தே வருகின்றனர்.

1997க்குப் பின் இன்றுவரை கோவை மாவட்டம் அமைதி காற்றை சுவாசிக்கிறதென்றால் அது காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடு களோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ அல்ல. முஸ்லிம்கள் கடைபிடிக்கும் அமைதி யும், நிதானமும் இதற்கு பிரதான காரணங்க ளாகும். இந்த சூழலை சீர் குலைக்கும் நடவடிக் கையில்தான் இந்துத்துவா இறங்கியிருக்கிறது.

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை அசைத்துப் பார்க்கிறது என்பதுபோல முஸ் லிம்களைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றன இந்துத்துவா அமைப்புகள்.

இந்துத்துவா அமைப்புகளின் நடவடிக்கை களை நுணுக்கமாக கவனிக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு என்று சுட்டிக் காட்டும் அதே சமயம், ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் பாராட்டும்படியாகவே இருக்கின்றன என்ப தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

- அபு

Pin It