அரசியல் என்பது ஜனநாயகத்தில் மிக முக் கியமான அம்சம். அந்த அரசியல் தளத் திற்கு வருபவர்கள் நேர்மையாளர்க ளாக, மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்க ளாக, சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்றைய அரசியல் சூழல் சர்வதேச அளவில் கெட்டுத்தான் கிடக்கிறது. அதிலும் இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் அரசியலுக்கு வருபவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

இந்திய அரசியலில் நாணயமுள் ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கெட்டுப்போன அரசி யல்வாதிகள் தான் இங்கே மிகைத் திருக்கிறார்கள். அதிலும் குறைந்த பட்ச அரசியல் நாகரீகம் கூட பேணாதவர்கள் அரசியல் தளத்தை அலங்கரிக்கும்போது மக்கள் முகம் சுழிக்கவே செய்கின்றனர்.

எதிர்கட்சி, எதிர் முகாம் மீது கருத்து மாறுபாடுகள், விமர்சனங் கள், எதிர்ப்புகள் இருந்தாலும் நாக ரீகமான நடவடிக்கைகளில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட அற்றவர்களாகத்தான் இன்றைய இந்திய அரசியல்வாதிகளின் நிலை உள்ளது.

தனி நபர் தாக்குதல்களும், அவ தூறுகளும் மலிந்து போயுள்ளன. அரசியல் நாகரீகம் அறவே அற்றுப் போயிருக்கும் இன்றைய சூழலில் நல்ல முன்மாதிரியை உலக அரசி யல்வாதிகளுக்கு - குறிப்பாக இந் திய அரசியல்வாதிகளுக்கு காட்டித் தந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்த மிட் ரோம்னி.

அமெரிக்காவின் முக்கிய மாகா ணங்களான மிக்கிசன், பென்சில் வேனியா, மசா சூசெட்ஸ், நியூ யார்க், கனெக்டிக்ட், மாய்னே, ரோடே ஐலேண்ட், நியூ ஜெர்ஸி, மேரி லேண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருப்பதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வரும் ஒபாமா மீது கோபமோ, வெறுப்போ அடையாத மிட் ரோம்னி, ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி வாழ்த்து சொல்லியி ருக்கிறார்.

இப்படி, தனது போட்டியாளர் வெற்றி பெற்றால் வாழ்த்து தெரி விப்பதில் தயக்கமும், வெறுப்பு மனநிலையும் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இன்னும் ஒருபடி மேலே சென்று தனது ஆதரவாளர்களிடத்தில் பேசிய மிட் ரோம்னி,

“ஒபாமாவிற்கும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பிரச்சாரத் தில் தேவையான எல்லாவற்றையும் செய்தோம். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று மக்களி டத்தில் உறுதியளித்தேன். மக்கள் இன்னொரு தலைவரை தேர்வு செய்துள்ளனர். அவரை வாழ்த்துகி றேன். இந்த நாட்டுக்காகவும், அவ ருக்காவும் நேர்மையுடன் கடவுளை பிரார்த்திக்கிறேன். அமெரிக்கா பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு சிறந்த இடத்தைப் பெறும் என்று நம்புகிறேன்...'' என்றெல்லாம் ஆத்மார்த்தமாகவே பேசியிருக்கி றார்.

எவ்வளவு அழகான பேச்சு இது? எவ்வளவு நாகரீகமான வார்த்தை கள்? இதுதானே அரசியல் நேர்மை, நாகரீகம்! நம் அரசியல்வாதிக ளுக்கு இந்தப் பண்பு வருமா? எதிர் முகாம் தலைவர் வெற்றி பெற்று விட்டால்... "கள்ள ஓட்டுக்கள் போட்டு ஜெயித்து விட்டார்; தேர் தலில் முறைகேடு நடந்துள்ளது; வீடு வீடாகச் சென்று ஓட்டுக்காக பணம் கொடுத்து ஜெயித்து விட் டார்...' இப்படி எத்தனை வசை மொழிகள், அவதூறுகள்!

எதிர் முகாம் தலைவர் ஜெயித்து விட்டார் என்பதை சகித்துக் கொள்ள முடியாமல் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என நீதி மன்றம், வழக்கு என்று எத்தனை அமளிதுமளி செய்கிறார் நம் அரசியல்வாதிகள்!

ஆரோக்கியமான அரசியலுக்கு சகிப்புத்தன்மை அவசியமான பண்பு அல்லவா? இது இருக்கிறதா நமது அரசியல்வாதிகளிடத்தில்?

“அமெரிக்கா பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு சிறந்த இடத்தை பிடிக்கும் என நம்புகி றேன்'' என்கிற மிட் ரோம்னியின் வார்த்தைகள் வெறும் வாய் வார்த் தைகளா?

ஒபாமா நிர்வாகத்தின் மீது அவரது போட்டி வேட்பாளரான இவருக்கு நம்பிக்கை இருக்கிறது என்றல்லவா சொல்கிறார்! இந்த பக்குவமும், அரசியல் முதிர்ச்சியும் நமது முதுபெரும் தலைவர்களிடத் தில் கூட காண முடியவில்லையே!

இரட்டை அர்த்த விமர்சனங்க ளும், தனிப்பட்ட அந்தரங்க விஷ யங்களும்தானே இங்கே அரசியல் அரிச்சுவடியாக மாற்றப்பட்டிருக் கிறது.

உள்ளபடியே பாராட்டப்பட வேண்டியவர் மிட் ரோம்னி. இவ ருக்கு வாக்களிக்காதவர்கள் கூட இவரது இந்தப் பேச்சை ரசிக்கவே செய்வர்.

அமெரிக்காவிடமிருந்து எல்லா வற்றையும் இறக்குமதி செய்யும் இந்தியா இந்த அரசியல் நாகரீகத் தையும் இறக்குமதி செய்யலாமே... அமெரிக்காவின் தாராளமயக் கொள்கையை இரு கை நீட்டி அழைக்கும் இந்தியா அமெரிக்கா வின் தாராள மனக் கொள்கையை யும் இரு கரம் நீட்டி அனைத்துக் கொண்டால்தான் என்ன?

- ஃபைஸல்

Pin It