ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கலவரத்தை உருவாக்க இந்துத்துவா அமைப்பினர் திட்டமிட்டு வரு வதையும், ஹைதராபாத் சிட்டி போலீஸ் வகுப்புப் பதட்டம் ஏற்படாமல் தடுக்கும் முஸ்தீபுகளை மேற் கொண்டு வருவதையும் அக்டோபர் 19-25, 2012 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

போலீஸின் கடும் பாதுகாப்புகளையும் மீறி ஹைதராபாத்தி லுள்ள முஷீராபாத் பகுதியில் கல வரம் நிகழ்த்தியுள்ளனர் இந்துத்துவாவினர்.

கடந்த 24ம் தேதி குர்பானிக் காக கொண்டு வரப்பட்ட கால்நடைகள் கவாடிகுடா என்ற பகுதி யில் காணாமல் போனது. கால்ந டைகளை கொண்டு வந்த முஸ்லிம்கள் காணாமல் போன கால்ந டைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த வாய்ப்பை தனக்கு சாத கமாக பயன்படுத்திக் கொண்ட ஹிந்து வாஹினி குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆபாச கோஷமிட்டபடி பிரச்சினைக்கு வித்திட்டனர்.

இந்த நேரத்தில் அவ்வழியாகக் கடந்து சென்ற ஆரிஃப் என்ற முஸ் லிம் இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது இந் துத்துவா கும்பல். தாக்கப்பட்ட ஆரிஃப் உடனடியாக காந்தி நகர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆரிஃபைத் தொடர்ந்து மேஉம் 4 முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்துவா குண்டர்களால் இரும்பு ராடுகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இப்படித் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்து அப்ப குதியில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங் கள் மீது கல் வீசி சேதப்படுத்தி யுள்ளதோடு, முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் இக்கலவரத்தில் காயமடைந்திருப் பதாக கூறப்படுகிறது.

காணாமல் போன மூன்று கால் நடைகள் பஸ்தி என்ற பகுதிக்குள் புகுந்து அங்குள்ள குடியிருப்புவா சிகளின் பொருட்களை சேதப்ப டுத்தியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கால்நடை உரிமையா ளர்கள் மீது தாக்குதல் நடத்தியதா கவும், இதற்கு பதில் நடவடிக்கை யாக முஸ்லிம்கள் தாக்குதல் நடத் தியதாகவும் காவல்துறை கூறுகி றது.

இக்கலவரத்தின் காரணமாக அப்பகுதியை கடந்து சென்ற பாத சாரிகள் கடுமையான கல்வீச்சுக்கு ஆளாகியுள்ளனர். கலவரத் தடுப் புப் படை கலவர இடங்களுக்கு அனுப்பப்பட்டு நிலைமை கட்டுக் குள் கொண்டு வரப்பட்ட நிலையி லும் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

முஷீராபாத்திற்கு உட்பட்ட போலாத்பூர் பகுதியில் புகுந்த சமூக விரோத கும்பலான இந்துத்துவாவினர் முஸ்லிம்களுக்கு எதி ராக ஆபாச கோஷமிட்டும், இஸ் லாத்தை இழிவுபடுத்தியும், முஸ் லிம்களின் கோபத்தை தூண்டி விட மீண்டும் வன்முறை வெடித் தது.

இதேபோன்ற வன்முறைச் சம்ப வங்கள் நல்ல குண்ட்டா, மங்கள் ஹட் பகுதிகளிலும் நிகழ்ந்துள் ளன. இந்த மங்கள்ஹட் பகுதியில் தான் முன்பு கோவிலுக்குள் மாட்டு இறைச்சியை வீசி விட்டு, கலவரத்தை உருவாக்கினர் இந்துத் துவாவினர் என்பது குறிப்பிடத் தக்கது.

நல குண்ட்டா பகுதியிலிருந்த ஒரு வழிபாட்டுத் தலம் தாக்கப்பட் டிருக்கிறது. இது இன்னொரு வன் முறைச் சம்பவத்தைத் தோற்று விக்க... இதனை எதிர்த்து திடீரென எதிர் தரப்பிலிருந்து கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இது பெரும் கலவரத்திற்கு வழி வகுத்த நிலையில், நிலைமை கட் டுப்பாட்டிற்கு வெளியே செல் வதை உணர்ந்த மாநகர கமிஷ்னர் அனுராக் ஷர்மா, சம்பவ இடத் திற்கு பெரும் போலீஸ் படையு டன் விரைந்து மற்ற பகுதிகளுக்கு வன்முறை பரவுவதற்கு முன் கட்டுக் குள் கொண் டுவர பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டி வந்தது.

இந்த வன்முறைக்கு காரணம் முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியம்தான் என்கின்றன ஆந் திர மீடியாக்கள். இதே கமிஷ்னர் அனுராக் ஷர்மாதான் இரண்டு வாரங்களுக்கு முன் பத்திரிகையா ளர்கள் சந்திப்பில், “பக்ரீத் பெரு நாளை முன்னிட்டு சில அமைப்பு கள் ஹைதராபாத்தில் வன்முறை நிகழ்த்த தயாராகி வருகின்றன. போலீஸ் அதிகாரிகள் இது குறித்து உஷார் படுத்தபடுத்தப்பட் டனர். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது; எதுவாக இருந் தாலும் அருகிலுள்ள காவல் நிலை யத்தில் புகார் அளிக்க வேண்டும்...'' என்றெல்லாம் கூறியிருந்தார்.

பக்ரீத் திருநாளையொட்டி ஹைதராபாத் மாநகரில் அதிக பட்ச பாதுகாப்பு போடப்பட்டி ருந்த நிலையிலும், ஹைதராபாத் தின் மத்தியிலுள்ள வர்த்தக பகுதி யான முஷீராபாத்தில் இந்துத்து வாவினர் கலவரம் நிகழ்த்த முடிகி றதென்றால்... இதற்கு காவல்துறை யில் புகுந்துள்ள காவி சிந்தனை கொண்டவர்களின் மறைமுக ஆசி இருந்திருக்கிறது என்பதும், ஹைத ராபாத்தில் மதவெறி சக்திகள் வேரூன்றி இருப்பதையும் வெளிப் படுத்துவதாய் உள்ளது.

- ஃபைஸல்

Pin It