சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யும் எனத் தெரிவித்திருக்கிறார் சிறுபான்மை விவகாரத்திற்கான மத்திய இணை அமைச்சர் ரஹ்மான் கான்.

மத்திய அரசால் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்க ளுக்காக தேசிய அளவில் பல் வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் இவை சிறுபான்மையினருக்கு பயனளிக்கும் வகையில் அம்மக்க ளுக்கு சென்றடையவில்லை என்பதைத்தான் அமைச்சரின் அறி விப்பு புலப்படுத்துகிறது

சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் சமூக மக்க ளுக்கு அரசின் எந்த திட்டத்தா லும் பயன் இல்லை என்பது போன்ற புகார்கள் மத்திய அர சுக்கு ஏராளமாக வந்திருப்பதாக வும், இவற்றை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப டும் என்றும் அவர் தெரிவித்துள் ளார்.

ரஹ்மான் கான் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபலமான பாராளுமன்றவாதி. கர்நாடக மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர். நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரும் அரசியல் அரங் கில் தக்க வைத்துக் கொண்டிருப் பவர் ரஹ்மான் கான். புதிதாக சிறுபான்மை விவகாரத்திற்கான மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் இவர், மாநிலங்களவை துணை தலைவ ராகவும் சிறப்பாக பணியாற்றி யுள்ளார்.

இதுவரை பேசப்படாத அனைத்து சிறுபான்மை மக்க ளின் பிரச்சினைகளையும் பேச முயற்சிகளை மேற்கொள்வேன் எனக் கூறும் ரஹ்மான் கான், பயங்கரவாத வழக்குகளில் முஸ் லிம் இளைஞர்கள் குற்றவாளிக ளாக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை. தவிர, இது மத்திய உள்துறை அமைச்சகத்துடன் சம் மந்தப்பட்டது என்றாலும், அப் பாவி இளைஞர்கள் குற்றவாளிக ளாக்கப்படக் கூடாது என்று விரும்புகிறேன்...'' என்று பதில ளித்த கான், வகுப்புவாத வன்மு றைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா போன்றவை நடைமுறைப்படுத்தும் முயற்சிக ளுக்கு முன்னுரிமை கொடுக்க விருப்பதாகவும் தெரிவித்திருக்கி றார்.

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டிருந்தாலும், மாநிலங்கள் அவையின் தேர்வுக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி வழங்கிய ஆலோசனைக ளையும், மத்திய அமைச்சகம் ஏற்றுக் கொண்டு வக்ஃபு திருத்த மசோதாவில் இணைத்துள்ளது.

ஹஜ் விஷயத்தில் மலேஷியா வில் செயல்படும் மானியம் இல் லாத "டபங் ஹாஜி' போன்ற ஹஜ் பயணிகளுக்கான மேலாண்மை நிறுவனத்தைப் என்கிற இந்தி யாவிலும் நிறுவும் முயற்சியில் இந்திய முஸ்லிம்களுக்கு மத்தி யில் ஒருமித்த கருத்தை உருவாக் கும் முயற்சியிலும் தான் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார் கான்.

அத்தோடு, சிறுபான்மை சமூ கம் மேம்பாடு அடையும் வகை யில் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கட்ட மைப்புகளில் சிறுபான்மை மக்களை ஊக்கப்படுத்தும் முயற்சி யில் சிறுபான்மை அமைச்சகம் செயல்படும் என்றும் கூறியுள்ள கான்,

சிறுபான்மை நலன் சார்ந்த பிரதமரின் 15 அம்சத் திட்டங் களை வெற்றிகரமாக செயல்ப டுத்த 15 வெவ்வேறு துறைகளு டன் இணைந்து சிறுபான்மை அமைச்சகம் செயல்படும் என்று கூறியிருப்பதுடன், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மாநில சிறுபான்மை ஆணையம் இல்லை. அதனால் விரைந்து மாநில சிறுபான்மை கமிஷனை அமைக்குமாறு இரு மாநில அரசையும் வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை, பிரதமரின் 15 அம்சத் திட்டங்கள் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சிறுபான்மையி னர் நலன் சார்ந்த திட்டங்களும் முறையாகக செயல்படுத்தப்பட்ட தில்லை.

ரஹ்மான் கான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் சிறு பான்மை நலத் திட்டங்கள் சரி யாக செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை சமுதாய மக்களிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கையை ரஹ்மான் கான் புரிந்து செயல் பட வேண்டும்.

- ஃபாரூக்

Pin It