பிரான்ஸ் நாட்டில் தினமும் குளிக்காதவர்கள் ஐந்து பேரில் ஒருவர் வீதம் இருப்பதாகவும், வாரத்தில் ஒரு முறை குளிப்பவர்கள் 29 பேரில் ஒருவர் வீதம் இருப்பதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது. கைகளைச் சுத்தம் செய்வது முக்கியம் என்ற பண்புகூட பிரெஞ்சுக்காரர்களிடம் இல்லையாம்.

இந்த ஆய்வை பிரான்ஸ் நாட்டின் போல்ஸ்டர் பி.விஏ. என்கிற சுகாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்டதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருபுறம் குளிக்காதவர்கள் இருக்கும் நிலையிலும் 11.5 சதவிகித பிரெஞ்சு ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு பலமுறை குளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

கழிவறைக்கு சென்று வந்தபின் கைகளை சுத்தம் செய்வது பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று 8ல் ஒருவர் வீதம் பதில் தருகிறார்கள் என்று கூறும் இந்த ஆய்வு, 4.5 சதவீதத்தினர் பொது வாகனங்க ளில், பேருந்துகளில் பயணம் செய்து விட்டு வீட்டிற்கு வந்து மேலோட்டமாகவும் கூட துடைத்துக் கொள்வதில்லை எனத் தெரிவிக்கிறது.

இவ்வளவுக்கும் 54 சதவீத மக்கள், தினசரி வாழ்க்கையில் அழுக்குகள் சேர அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்களில் காரண மாகின்றன என்கின்றனர்.

இன்னும், உணவு உண்பதற்கு முன் கைக ளைக் கழுவுவதை நாங்கள் பொருட்டாகக் கருதவில்லை என்று 5ல் ஒன்றுக்கும் மேற் பட்டவர்கள் கூறுகிறார்களாம். வாரத்தில் ஒருமுறை குளிக்கும் பிரெஞ்சுக்காரர்களில் 18 சதவீதத்தினர் குளிக்க வேண்டியது அவசியம் எனக் கருதவில்லை என கூறியுள்ளனராம்.

அப்படியே குளிக்கும் இவர்களில் 61 சதவீ தத்தினர் முழுமையாக (அழுக்கு போக) குளிப்பதில்லையாம். ஆனால் சமையல் செய் யும்போது மட்டும் பிரெஞ்சுக்காரர்களில் பெரும்பாலானவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

86.61 சதவீதத்தினர் சமையல் செய்வதற்கு முன் அல்லது உணவு தயாரிப்பதற்கு முன் கைகளை சுத்தம் செய்வதாகக் கூறுகிறார்கள்.

பிரான்சின் இளைய தலைமுறையினரைப் பார்த்தால் பெரியவர்களைக் காட்டிலும் குறைந்த அளவே கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின் றனர். 18லிருந்து 34 வயதுவரை உள்ளவர்கள் மத்தியில் 18.9 சதவீதத்தினர்தான் கழிவறை களை சுத்தமாக வைத்துக் கொள்கின்றனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரை பிரிட்டீஷ் இளசுகளில் பாதி பேர்தான் கழிவறைக்குச் சென்று வந்தபின் சோப்பை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்பவர்களாக இருக்கிறார் கள் என்றும் கூறும் இந்த ஆய்வு, 74 சதவிகித பிரிட்டன் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 97 சதவீத பிரெஞ்சு மக்கள் குளிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுவதை இலகுவாக உணர்வதாகவும் கூறுகிறது.

ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சு ஆண்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் ஒரு நாளில் 35 நிமிடமும், பிரெஞ்சுப் பெண்கள் அதிகபட்சம் 46 நிமிடங்களும் செலவிடு வதாக தெரிய வந்துள்ளது.

உலக இரத்த தான தினம், உழைப்பாளிகள் தினம், காதலர் தினம் என பல தினங்கள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுவதைப் போல குளோபல் ஹேண்ட் வாஷிங் என்கிற கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தும் தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ்களும், பாக்டீரியாக்களும் பரவு வதை தடுக்கும் நோக்கில் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. எத்தனை பிரச்சாரங்கள் செய்யப்பட்டா லும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாகத்தான் பிரெஞ்சு இளசுகளின் தினசரி வாழ்க்கை கழிகிறது.

- அபு

Pin It