பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தாய்ப் பாலை விற்பனை செய்யும் முயற்சியில் ஜரூராக ஈடுபட்டுள்ளனர் இரு நாடுகளின் தாய்மார்களும். இது ஆன்லைன் மூலம் செய்யப்ப டும் வியாபாரமாகும். ஆயினும் இப்படி தாய்ப்பால் விற்பனை செய்வது குழந்தைகளுக்கு பாதிப்பை உண் டாக்கும் என்று பிரிட்டன் மீடியாக்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களைப் பயன்படுத்தி தாய்ப் பால் வியாபாரம் செய்ய இந்தத் தாய்மார்கள் முன் வந்தி ருக்கின்றனர்.

உடனடியாக பணத் தேவையை நிறைவேற்ற தங்களுக்கு சுரக்கும் கூடுதலான பாலை தாய்மார்கள் விற்பனை செய்கின்றனர் என்று கூறும் டெய்லி மெயில் பத்திரிகை, குழந்தை பெற்று தாய்ப்பால் சுரக்காத நிலையில் உள்ள பெண்கள் ஆன்லைன் மூலம் வெளியிலிருந்து தாய்ப் பாலை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம், இப்படி பெறும் தாய்ப்பால் குழந்தைகளை நோய் நொடியிலிருந்து பாது காக்குமா என்று அவர்கள் நினைப்பதுதான்.

ஒன்லி தி பிரஸ்ட் என்ற இணைய தளம் இது தொடர்பான தேவைக ளுக்கு பதில் சொல்லும் வகை யில் செயல்படுகிறது என டெய்லி பத்திரிகை கூறுகிறது.

நாங்கள் தாய்ப் பால் விற்பதை யும், வாங்குவ தையும் சாத் தியமாக்குகி றோம் என்று கூறும் இந்த வலை தளம், தாய்ப்பாலை சுத்தமா கவும், பிரத்யோக மான வழியிலும் விற்பனையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறது.

ஃபிரஷ்ஷாகவும், குளிரூட் டப்பட்ட நிலையில் பதப்ப டுத்தப்பட்டும் விற்கப்படும் தாய்ப்பால் ஒரு அவுன்ஸ் ஒரு (பிரிட்டன்) பவுண்ட் என்று பிரிட்டனிலும், அமெரிக் காவில் ஒரு அவுன்ஸ் 2 டாலர்கள் என்றும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த தாய்ப்பால் விற்பனை தனியார் மூலம் நடைபெற்று வந் தபோதிலும், பால் வங்கிகள் மூல மாக இலவசமாக தாய்ப்பாலை தானமாக கொடுக்கவும், பெறவும் சட்ட ரீதியான வசதிகளும் இங்கு உள்ளன.

பால் சுரக்காத தாய் மார்க்களுக்கு உதவி யாக செயல்படும் இந்தப் பால் வங்கிகள் அல்லது பால் மையங்கள் தாய்ப் பாலை சேமித்து வைக்கின்றன. இதற்கென ஏற்கெனவே குழந்தை பெற்று ஆறு மாதங்க ளுக்கு உட்பட்ட குழந்தைகளு க்கு பாலூட்டும் தாய்மார்க ளுக்கு சுரக்கும் அதிகப்படியான பாலை சேகரிக்கும் பணியை இந்த பால் மையங்கள் செய்து வருகின்றன என்கிறது டெய்லி மெயில்.

அதே சமயம், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விற்பனைக்கு கடை விரிக் கும் தாய்மார்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் தங்கள் குழந்தைகளுக்கான ஆகாரத்தை பெறக் கூடாது என்று புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத் துவர்கள்.

உலகிலேயே கலப்படமில் லாத ஒரே பொருள் தாய்ப்பால் தான். அதுவும் வியாபாரப் பொரு ளாகி விட்டால் அது தனது தூய் மையை இழந்து விடும் என்பது கவலையளிக்கும் விஷயம்தானே?

- ஹிதாயா

Pin It