தென்அமெரிக்காவின் வடமேற்கில், நிலநடுக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஈக்வடார்.

தென் வடக்கு - வடகிழக்கில் கொலம்பியாவும், தெற்கு-தென் கிழக்கில் பெரு நாடும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

பரப்பளவில் இது அமெரிக்காவின் ஒரு மாகா ணத்திற்கே ஒப்பானது.

இங்கு முப்பதுக்கும் மேலான எரிமலைகள் உண்டு. அதே சமயம், அடர்ந்த காடுகளும், வானளாவிய அருவிகளும், எண்ணற்ற பறவை இனங்களும், அரிய வன விலங்குகளும் இங்கு உண்டு. உள்ளத் தைக் கொள்ளைகொள்ளும் இயற்கைப் பேரெழில் இந்நாட்டின் செல்வம். சுபானிய ((Spain) மொழி பேசும் மக்களும், பல்வேறு பழங்குடியின மக்களும் இங்கு வாழ்கிறார்கள். எளிமையும், களங்கமற்றும், தன்னி றைவோடும் திகழ்ந்த இந்நாடு 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங் களால் நாசமாக்கப்பட்டது.

1968ஆம் ஆண்டில், டெக்சகோ என்னும் நிறுவனம் ஈக்குவடாரின் அமேசான் பகுதியில் பெட்ரோலியத் தைக் கண்டுபிடித்தது. அதன்பின்பு பல நிறுவனங்கள் எண்ணெய்க் குழாய்த் தொடர்களை அமைத்தன. எண்ணெய் ஏற்றுமதி முதலிடம் பிடித்தது. 300 மைல் நீளமுள்ள ஒரு குழாய்த் தொடர் மூலம் அமெரிக் காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.

ஆனால், ‘டிரான்ஸ் ஆண்டியன்’ எண்ணெய்க் குழாய்த் தொடரில் கசிந்து வெளியேறிய எண்ணெய் மட்டும் ஐந்து இலட்சம் பீப்பாய்களாகும். எக்சோன் வால்டெஸ் என்ற நிறுவனம் பதித்த குழாய்களிலும் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் பீப்பாய் எண்ணெய் கசிந்து வெளியேறியது.

இந்த எண்ணெய்க் கசிவால் பரந்து விரிந்த மழைக்காடுகள் முற்றும் நாசமாகிவிட்டன. “ஐந்து வண்ணக் கிளிகள்” முதலான எண்ணற்ற பறவை இனங்களும், சிறுத்தை முதலான வனவிலங்குகளும் இந்த எண்ணெய்க் கசிவால் அழிந்துபோய்விட்டன. ஈக்வெடாரின் பழம்பெரும் ஆறுகள், எப்போதும் புகை யை உமிழ்ந்து தள்ளும் சாக்கடைகளாக மாறிப் போயின. மூன்று பழங்குடி இனங்கள் அழிவின் விளிமிப்புக்குத் தள்ளப்பட்டன.

மேலும், இந்த எண்ணெய் நிறுவனங்கள் 1971 மற்றும் 1972 ஆண்டுகளில் மட்டும், நாள் ஒன்றுக்கு நாற்பது இலட்சம் கேலன் அமிலக் கழிவுநீரை ஆறு களிலும் திறந்தவெளிக் குளம் குட்டைகளிலும் குழி களிலும் கொட்டிச் சென்றன. கசடு எண்ணெய், கன வகை உலோகங்கள், புற்றுநோயை உண்டாக்கும் வேதிக் கழிவுகள் நிறைந்த இந்த அமிலக் கழிவுநீர் மண்ணையும் நிலத்தடி நீரையும், புல், மரம், செடி, கொடி முதலான இயற்கையையும் நாசமாக்கியது. ஊர்வன, பறப்பான, நடப்பன, நீந்துவன என எல்லா வகை உயிரினங்களையும் அழிவுக்கு உட்படுத்தியது. மக்கள் கடுமையான தோல் நோய்களுக்கும், உள்ளுறுப்பு களின் சிதைவுகளுக்கும் ஆட்பட்டனர்.

இந்த எண்ணெய் வளத்தால் மிகப்பெரும் பொருளி யல் வளர்ச்சி ஏற்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், வறுமை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்ந்தது. வேலையற்றோர் எண்ணிக்கை 15 விழுக்காடாக இருந்தது, 70 விழுக்காடாக மாறியது. பொதுக் கடன்கள் நூற்றின் மடங்குகளில் அதிகரித்தன. ஆனால் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 20 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாகக் குறைந்தது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நடு அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளை நாசமாக்கிய அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களைத்தான் இந்தி யாவை ஆளும் மோ(ச)டிக் கும்பல், இந்த இருபத் தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஓடி ஓடி அழைத்துவந்து களம் இறக்குகிறது. பாதகம் செய்பவர் கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என்கிறார்கள். இந்தியத் தேசங்களின் மக்கள் எப்பொழுது கண் திறப்பார்களோ? தெரியவில்லை. கண்கள் திறக்கக் கலகம் பிறக்கும்! இது உறுதி.

(செய்திக்கு அடிப்படை : “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” - ஜான் பெர்க்கின்ஸ், விடியல் பதிப்பகம், கோவை)

Pin It