பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா அவர்கள் மத்திய செய்தி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக, 2007 மே 16ஆம் நாள் பொறுப்பேற்றார்.

அவரால் அலைவரிசை உரிமம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வகையில் 2007ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு 1.76  இலட்சம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, சி.பி.ஐ. குற்றஞ்சாட்டி வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 2011 பிப்பிரவரி 2இல் முன்னாள் அமைச்சர் ஆ. இராசா கைது செய்யப்பட்டார். 15 மாதங்கள் அவர் தில்லி திகார் சிறையில் இருந்தபின் 15.5.2012இல் பிணையில் விடுவிக் கப்பட்டு வெளியில் வந்தார்.

2ஜி ஒதுக்கீடு காரணமாக, டாக்டர் கலைஞர் பேரால் இயங்கும் “கலைஞர் தொலைக்காட்சி”க்கு அவருடைய மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வழியாக 200 கோடி ரூபா பெற்றுள்ளதற்கு, கனிமொழி கூட்டுச் சதிகாரராகச் செயல்பட்டார்என்று குற்றஞ்சாட்டப்பட்டு, 2011 மே 20ஆம் நாள் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆ. இராசா, கனிமொழி ஆகிய இருவர் பேரிலும் நடைபெற்ற ஊழல் வழக்கில் சோழவந்தான் சுப்பிரமணிய சுவாமியும் தன்னை இணைத்துக் கொண்டார்.

anaimuthu 2G raja 600எந்தப் பகுதியில் ஊழல் வழக்கு நடந்தாலும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இந்து பார்ப்பனரல்லாதாராக இருந்தால், பார்ப்பன ஊடகங்கள் அந்த ஊழல் வழக்கு களைப் பெரிய அளவில் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

அதிலும், தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார் 1918 முதலும், 1927 முதலும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஆதிதிரா விடருக்கும் அரசு வேலைகளில் - அரசுப் பதவிகளில் இடஒதுக் கீடு தரப்பெற்றதால்-அந்த ஒரே காரணத்தால் பார்ப்பனரல் லாதாரைத் தவறான கோணத்தில் படம் பிடிப்பதையே பார்ப்பன அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகமும், திரைப்பட ஊடகமும் 1918 முதல், அந்தந்த மாகாண அரசின் பேரில் பார்ப்பனர் எரிச்சலையும் அவதூறுகளையும் உமிழ்வதை மேற்கொண்டனர்.

முதலாவதாக, மைசூர் சுதேச மன்னர் ஆட்சியில் ஆறாவது கிருஷ்ணராஜ உடையார் என்கிற மன்னர், 1918இல் தன்னுடைய ஆட்சியின்கீழ் இடஒதுக்கீட்டை முதன்முதலாக அமல்படுத்தினார். அப்போது மைசூர் அரசில் திவானாக இருந்த - தலைசிறந்த பொறியாளராக விளங்கிய எம். விசுவேசரய்யா என்கிற பார்ப்பனர் மன்னரின் இடஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து திவாண் பதவியிலிருந்து விலகினார். அப்போது, ஆறாவது கிருஷ்ணராஜ உடையார், மேலும் ஒரு தப்படி மேலே போய், நீதிபதி மில்லர் குழுவின் பரிந்துரைப் படி, “எந்த உள்சாதியில் நூற்றுக்கு 5  பேருக்கு ஆங்கிலம் தெரியாதோ, அப்படிப்பட்ட உள்சாதிகள் எல்லாம் பிற்படுத்தப் பட்ட உள்சாதிகள்” என்று புதிய ஆணை பிறப்பித்தார்.

அடுத்து, சென்னை மாகாணத்தில், 17.12.1920இல் பார்ப்பனரல்லாதார் கட்சி என்கிற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பதவி ஏற்றது. 1921இல் சென்னை மாகாணத்தின் முதலாவது அமைச்சரான பனகல் அரசர், 1921இல் சென்னை மாகாண அரசு வேலையில் உள்ள 100 விழுக்காடு இடங் களையும் 5 வகுப்புகளுக்கும் பங்கிட்டு, அதன் வழியாக, இந்து பார்ப்பனரல்லாதாருக்கு 44 விழுக்காடும், ஆதித்திரா விடருக்கு 8 விழுக்காடும் இடஒதுக்கீடு கிடைக்கும்படி ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டை எதிர்த்த “சுதேசமித்திரன்”, “இந்து” பார்ப்பன நாளேடுகள், “உலகமே அழிந்துவிடப் போகிறது” என்று கூக்குரலிட்டன.

அந்தக் காலத்தில்தான் மதுரை சோழவந்தான் சுப்பிர மணியசாமி என்கிற பார்ப்பனரின் முன்னோர்களும், மயிலாடுதுறை மணிசங்கர் அய்யரின் முன்னோர்களும் தமிழ்நாட்டை விட்டே வெளியேறினார்கள். பார்ப்பனர் கொண்டுள்ள இந்த வகுப்பு வெறி உணர்ச்சி வரலாற்றை நாம் மறத்தல் கூடாது.

மேலே சொன்ன 1921ஆம் ஆண்டின் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணை, டாக்டர் வி. சுப்பராயன் ஆட்சியில், பெரியார் ஈ.வெ.ரா.வின் ஆதரவுடன், எஸ். முத்தையா முதலியாரால் 1927இல்தான் செயல்படுத்தப்பட்டது, நிற்க.

இனி ஆ. இராசா அவர்களும், மு.க. கனிமொழி அவர் களும் 21.12.2017 காலை 10.30 மணிக்கு, 2ஜி அலைக் கற்றை ஊழல் வழக்கிலிருந்து, மேற்கண்ட இருவர் உட்பட எல்லோரும் முற்றிலுமாக விடுதலை செய்யப்பட்டது பற்றி நாம் பார்ப்போம்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ. நீதிமன்றச் சிறப்பு நீதிபதி மதிப்புமிகு ஒ.பி. சைனி அவர்கள் மிகவும் தெளிவாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அ)   இந்த வழக்கிற்காக காலை 9 மணிக்கே நீதிமன்றத் துக்கு வந்துவிடுவேன்; மாலை 5 மணிவரை இருப்பேன். கோடை விடுமுறையின்போது கூட நீதிமன்றத்துக்கு வந்தேன்.

ஆ) சரியான-வலுவான ஆதாரங்கள் மற்றும் ஆவணங் களுடன் எவரேனும் வருவர் என, இந்த வழக்கிற்காக நானும் ஏழு ஆண்டுகளாகக் காத்திருந்தேன். கடைசிவரை அது நடக்கவில்லை.

இ)   ஆ. இராசா இவ்வழக்கில் சதி செய்தார்; ஊழல் செய்தார்; குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை.

ஈ)   இந்த வழக்கில் பிரதான சதிகாரர் ஆ. இராசா என்னும் குற்றச்சாட்டு, முற்றிலும் நீதிமன்றத்தால் நிராகரிக் கப்படுகிறது.

உ)   வழக்கின் தொடக்கத்தில் உற்சாகம் காட்டிய சி.பி.ஐ. - போகப்போக எச்சரிக்கை உணர்வு தலைதூக்கி, எதை நிரூபிக்கப் போகிறோம் என்பதே தெரியாமல் தடுமாறியது.

ஊ) வாதங்கள் அனைத்துமே சீர்குலைந்து திக்குத்திசை தெரியாமல் தவிக்கும் நிலைக்கு சி.பி.ஐ. ஆளானது.

எ) இறுதியாக தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இயன்ற அளவுகூட நிரூபிக்க முடியாமல், பரிதாபகரமான வகையில் சி.பி.ஐ. தோல்வி அடைந்துள்ளது.

ஏ) ஆ. இராசாவோ அவருடைய உறவினர்களோ முறைகேடான வழியில் சொத்து சேகரிக்கவில்லை என, இந்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

அடுத்து, இவ்வழக்கில் பிணைக்கப்பட்டு, கைது செய்யப் பட்டு, ஐந்து மாதங்கள் தில்லி திகார் சிறையிலிருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு பெண் என்ற அடிப்படையில் பிணையில் விடுதலை கேட்டபோது, கண்டிப்பாகப் பிணை கிடைத்துவிடும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், “கனிமொழி அரசியல் அதிகாரம் உள்ளவர் என்பதால், கனிமொழி சாட்சிகளைக் கலைத்துவிடுவார்” என்று கூறி, பிணையில் விடுதலை செய்ய இதே நீதிபதி சைனி மறுத்தார். அதேபோல் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் மனுச் செய்தபோதும் அதை ஏற்க மறுத்து, நேரில் நீதிமன்றத்துக்கு வர ஆணை யிட்டார். இவை நிற்க.

2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையின் சார்பிலும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீட்டு மாநாடுகளைப் புதுதில்லியில் தமிழ்ச்சங்கத்தில் நடத்தினோம்.

2015இல் புதுதில்லியில், அம்மாநாட்டு அழைப்பை நேரில் கொடுக்க வேண்டி, புதுதில்லியில் “குல்மொகார் பார்க்” என்ற பகுதியில், ஆ. இராசா அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு நேரில் நான் போனேன். அரை மணிநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது, “2ஜி வழக்கின் நிலைமை எப்படி இருக்கிறது என அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தேன்.

உடனே அவர், ஊக்கமாக, “நானோ, என் குடும்பத்தினரோ, உறவினர்களோ முறைகேடான வகையில் சொத்து சேர்த்ததாக-மயிரிழை அளவுக்குக்கூட சி.பி.ஐ. நிரூபிக்க வில்லை என நானே நீதிபதியிடம் பதிவு செய்துள்ளேன். எனவே நான் விடுதலை ஆவது உறுதி” என்று திடமாகச் சொன்னார்.

அவருடைய விடுதலையை முன்னிட்டு, எங்கள் கட்சி அடைந்த மகிழ்ச்சியை நேரில் தெரிவிக்க வேண்டி, 25.12.2017 காலை 9.30 மணிக்கு இராதாகிருட்டிணன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு நானும், கலச. இராமலிங்கம், முனைவர் ஆ.முத்தமிழ்ச்செல்வன், பொறியாளர் பகுத்தறி வாளன் ஆகியோர் சென்றோம்.

சென்னை அலுவலக உதவியாளர் விவேகானந்தன் எங்களை வரவேற்றார்.

மதிப்புமிகு ஆ. இராசா அவர்களிடம் மேலே கண்ட எல்லா விவரங்களையும் அப்போதும் நினைவூட்டினேன்.

வளர்க ஆண்டிமுத்து இராசாவின் தொண்டு!

Pin It