சொக்க மேளருக்கு கோயில்

1928 சனவரி மாதத்தில் நாசிக் அருகில் உள்ள இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான திரைம்பாக்கில் அம்பேத்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தீண்டப் படாதவகுப்பினரைச் சார்ந்த பெருந்துறவி சொக்க மேளருக்கு கோயில் கட்ட ஆலோ சிக்கப்பட்டது. இதனை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை.. கோயில் கட்டி சிலையை வழிபடுவதைவிட தீண்டாமையை ஒழித்து மக்கள் வாழ்வினை உயர்த்திட உழைப்பதே அவருக்கு நாம் எழுப்பும் பொருத்தமான நினைவுச் சின்னம் என்று அறிவுறுத்தினார். சிலை வழிபாட்டினை அம்பேத்கர் எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்ட வகுப்புகள் கல்விக் கழகம்

அம்பேத்கர், 1928 சூன் மாதம் 14 ஆம் நாள் ஒடுக் கப்பட்ட வகுப்புகள் கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். வலுவான அடித்தளத்தின் மீது அவரு டைய மக்களுக்குப் பள்ளிக் கல்வியை வழங்கவேண் டும் என்பது அக்கழகத்தின் குறிக்கோள். ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான 2 விடுதிகளை ஏற்படுத்தினார்:.  பம்பாய் அரசின் சொற்ப நிதி உதவி யையும் பெற்றார், பொருளாதார நெருக்கடி தீரவில்லை. ஆதலால் சாதி மத வேறுபாடின்றி எல்லா நிறுவனங் களிடமும் நிதி உதவி கோரினார். ஆனால் எந்த நிறுவனமும் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்க்க வில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த அம்பேத்கர் எடுத்த முயற்சிகளுக்கு அளவே இல்லை; பட்ட இன்னல்களுக்கும் எல்லையே இல்லை.

1929 ஏப்ரலில் சிப்ளனில் நடைபெற்ற இரத்தினகிரி மாவட்ட மாநாட்டில் அம்பேத்கர் தலைமையேற்றார். உங்களுடைய அடிமைத் தளையை நீங்களேதான் அறுத்தெறிய வேண்டும். தன்மானத்துடன். தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்படும் தடைகளைத் தீரத் துடன் எதிர்த்துப் போரிடவேண்டும்.. கடுமையாக அயராது போராடுவதன் மூலமே நாம் நமது உரிமை களைப் பெறமுடியும். நாம் அடிமைகளல்லர்; வீரஞ் செறிந்த பரம்பரையினர். சுயமரியாதையின்றி நாட்டுப் பற்று இன்றி வாழ்வதைக் காட்டிலும் இழிவானது வேறொன்றுமில்லை என்று உணர்வூட்டினார்.

சிப்ளன் மாநாட்டின் முடிவில் அனைவர்க்கும் பூணூல் கொடுக்கப்பட்டது. அம்பேத்கரின் நண்பர் தியோராவ் நாயக் என்ற பிராமணர், புரோகிதராக இருந்து 6000 தீண்டப்படாத பிரதிநிதிகளுக்கு வேத மந்திரங்களுடன் பூணூல் அணிவித்தார்..

1929 மே 29 ஆம் நாளில் ஜல்கான் நகரில் நடை பெற்ற மாநாட்டில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்க ளைப் பற்றி சாதி இந்துக்கள் கவலைப்படவில்லை என்ற நிலை நீடித்தால், தாழ்த்தப்பட்டமக்கள் அனை வரும் வேறு எந்த மதத்திலாவது இணைவதில் தவறேதும் இல்லை என்று ஆணித்தரமாக எடுத்துரைத் தார். மாநாடு முழுமையாக இதனை ஏற்றுக்கொண்டது.

நாசிக் அறவழிப் போர்

அம்பேத்கர் நாசிக்கில் அமைந்துள்ள காலாராம் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்குவதற் கான முன்னேற்பாடுகளை மூன்று மாதங்களாகக் கவனித்தார்.

இந்திய வரலாற்றில் 1930 ஆம் ஆண்டு போராட்ட ஆண்டாகும். 1930 மார்ச் 12 ஆம் நாள் மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் (தண்டி யாத்திரையைத்) தொடங்கினார். அதற்கு 10 நாள்கள் முன்னதாக-மார்ச் 2ஆம் நாள்  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்துக்கு அம்பேத்கர் தலை மையேற்றார். சுமார் 15,000 தொண்டர்கள் காலாராம் கோயில் சத்தியாகிரகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் மாலை 3 மணிக்கு தொண்டர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் நாசிக்கில் நடை பெற்ற மிகப்பெரிய  ஊர்வலம் ஆகும். இந்த ஊர்வலம் ஒரு இராணுவ இசைக்குழு தலைமையின் கீழ் நடை பெற்றது.

சாரணர்களும்,பெண்களும், ஆண்களும் கட்டுப்பாட்டுடன் ஊர்வலத்தில் நடந்து சென்றனர் அவர்கள் முதல் முறையாகக் கடவுளைக் காணப்போகி றோம் என்று ஒழுக்கத்துடனும் உறுதியுடனும் நடந்து கெண்டிருந்தனர் அவர்கள் கோயிலின் நுழைவாயி லுக்கு வந்தபேது, அதிகாரிகளால் கோயில் வாயில்கள் மூடப்பட்டன. அதனால் ஊர்வலத்தினர் கோதாவரி ஆற்றுப் படித்துறை நோக்கிச் சென்றனர். அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அன்று இரவு தலைவர்கள் கூடி அறவழியில் கோயில் வாயிலில் அமைதி யாகப் போராட முடிவு செய்தனர். தொடர்ந்து  ஒரு மாதம் அமைதியாக அறப்போர் நடைபெற்றது. கோயில் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. காவலர்கள் கோயிலைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் தன் அலுவலகத்தைக் கோயில் முன் மாற்றிக் கொண்டிருந்தார்.

கடவுள் இராமனே நேரில் வந்து கதவுகளைத் திறக்கும்படிச் சொல்லியிருந்தாலும் சனாதன இந்துக் கள் அந்த இராமனையே தூக்கி எறிந்திருப்பார்கள். ஏப்ரல் 9ஆம் நாள் இராமன் சிலையைத் தேரில் வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நாள். இருசாராரும் இணைந்து தேரினை இழுப்பது என்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தபோதிலும், தேரினை இழுக்கும் நேரத்தில் கூடியிருந்த இந்துக்கள் தீண்டப்படாத மக்க ளைத் தடிகளாலும் கற்களாலும் தாக்கினர், அம்பேத் கரும் காயமடைந்தார்.. இதனால் கோயில் ஓராண்டுக் காலம் மூடிக்கிடந்தது. மாவட்ட ஆட்சியர் உயர் சாதி யினருக்கு ஆதராகவே செயல்பட்டார். இந்தப் போராட்டத்தில் இந்து மேல் சாதியினருக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையேற்றிருந்தார்.

இப் போராட்டத்திற்குப் பின் மாவட்டம் முழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர். பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு இடம் கிடையாது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்திற்கு எல்லையே இல்லை.  இந்நிலையில் 1930 மே மாதத் தில் சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின், 1930 ஆகஸ்டு 8,9 நாள்களில் நாகபுரியில் அம்பேத்கர் தலைமையில் அனைத்திந்தியத் தீண்டப் படாத வகுப்பினரின் மாநாடு நடை பெற்றது. அம்மா நாட்டில் அம்பேத்கர் தலைமை உரையாற்றினார்: இந்தியாவில் மத்திய மாநில சட்ட அவைகளில் தீண்டப் படாத வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசுப் பணிகளில் போதிய இட ஒதிக்கீடு வழங்கவேண்டும் என்றும், நாட்டின் அரசியல் சிக்கலைத் தீர்ப்பதற்கு வட்டமேசை மாநாடு நடத்தப்படவேண்டும்  என்றும் அம்பேத்கர் தன் தலைமை உரையில் வலியுறுத்தினார்.  

முதல் வட்ட மேசை மாநாடு

முன்னரே அறிவித்திருந்தவாறு பிரிட்டிஷ் அரசு இலண்டனில் வட்டமேசைமாநாட்டைக்  கூட்டியது.

வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொள்ள வேண்டும் என்று வைஸ்ராய் 1930 செப்டம்பர் 6 ஆம் நாளன்று  அழைப்பு விடுத்தார். இதன் மூலம் காலம் காலமாக ஒதுக்கப்பட்ட தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்று ஒலிக்கத் தொடங்கியது.

வட்டமேசை மாநாட்டில் 89 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அவர்களில்.16 பேர் மூன்று பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள். 53 பேர் இந்தியப் பிரதிநிதிகள்-இந்துமகாசபையினர், இந்தியக் கிறித்த வர்கள், முஸ்லிம் தலைவர்கள், சீக்கியர்கள், இந்திய சிற்றரசின் பிரதிநிதிகள் முதலானோர் கலந்து கொண் டனர். இவர்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக டாக்டர். அம்பேத்கரும், இராவ்பகதூர். இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள்.

இந்தியத் தேசிய காங்கிரஸ் இந்த மாநாட்டை புறக்கணித்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே தேசப்பக்தர்கள் என்று நம்பியும் பேசியும் வந்த காலம் அது. எனவே, வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் கருத்துடையவர்கள் பிரிட்டிஷ் அடிமைகள் என்று குற்றம் சாட்டினர்

ஆனால், இந்து மகா சபையைச் சார்ந்த டாக்டர் பி.எஸ். மூஞ்சே குறித்து விமர்சனம் செய்யவில்லை. மிதவாதக் கட்சியைச் சேர்ந்த சர்.டேஜ் பகதூர் சாப்ரு, எம். ஆர் ஜெயகர், ஆகியோர் குறித்து விமர்சனங்கள் கிடையாது. ஆனால் அவர்கள் அம்பேத்கருக்கு எதிராக விமர்சனங்கள் செய்தனர்.

பிரிட்டிஷாருக்கு எதிரி என்பதால் ஜெர்மனியோடு இணைந்து போராடுவேன் என்ற சுபாஷ் சந்திர போஸ் கூட, தேசியத் தலைவர்களைச் சிறுமைப் படுத்துவதற் காக அம்பேத்கர் தலைவராக்கப் பட்டுள்ளார், என்று விமர்சித்தனர், எனில் அம்பேத்கர் இந்த நாட்டைச் சேர்ந்தவரில்லையா? புரியவில்லை!

இதே தொனி இன்றைய இந்திய அரசியலிலும் உள்ளதே!!  அவர்களின் காழ்ப்புணர்வுக்குக் காரணம் என்ன?

முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட வர்களில் பிரதமர் ராம்சே மக்டொனால்டையும், என். எம். ஜோசியையும் தவிர்த்து மற்ற அனைவரையும் விட அதிகக் கல்வித் தகுதியைப் பெற்றிருந்தவர் அம் பேத்கர். எனினும் அவர் விமர்சனக் கணையால் தாக்கப்பட்டார். காரணம் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர் என்பதால்! இந்துத்வா குரல் அன்றும் ஓங்கி ஒலித்தது. இன்றும் பெரியாரின் காலத்திற்குப் பின் தமிழகத்தில் இந்துத்வா குரல் ஒங்கி ஒலிக்கிறது.

1930 அக்டோபர் 4ஆம் நாள் டாக்டர் அம்பேத்கர் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். 1930 அக்டோபர் 2 ஆம் நாள் அன்று அம்பேத்கருக்கு, தாழ்த்தப்பட்டோர் மிகச் சிறப்பான வழியனுப்புவிழாவினை நடத்தினர். அதில் உரையாற்றிய அம்பேத்கர் தான் பெற்ற சிறிய வெற்றிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட தொண்டுள்ளம் கொண்ட தொண்டர்களின் ஒத்துழைப்பால் ஈட்டப்பட்ட வையாகும் என்று கூறி அவர்களுக்குத் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். பம்பாய் மாநில சட்டமன்றத் தில் சிறப்பாகப் பணியாற்றினார் என்று டாக்டர் சோலங்கி யைப் பாராட்டினார். தான் இந்தியாவில் இல்லாத நிலையில்,  தனது வலது கையாக வலம் வந்த தியோராவ் நாயக் அவர்கள், இயக்கத்தை வழி நடத்திச் செல்வார் என்றும் கூறினார் .தனது திங்கள் இருமுறை வெளி வந்த பகிஷ்கிரித் பாரத் என்ற இதழுக்குப் பதிலாக விரைவில் ஜனதா என்ற மாதமிருமுறை இதழ் வர விருக்கிறது என்றறிவித்தார். இந்த இதழ்கள் வெளிவர நிதி உதவி செய்த சங்கர் ராவ் எஸ். பர்ஷாவிற்கு நன்றி கூறினார்.

வட்டமேசை மாநாடு தீண்டப்படாத மக்களுக்கு அரசியலில் ஆக்கம் தரும் நடவடிக்கை என்று குறிப் பிட்டார். இறுதியாக, என் மக்களுக்கு என்ன நியாய மாகக் கிடைக்கவேண்டுமோ அதற்காகப் போராடு வேன். ஆனால் அதே நேரத்தில் விடுதலை கோரிக் கையை ஆழ்ந்த உணர்வுடன் ஆதரிப்பேன் என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

வட்டமேசை மாநாடு 1930 நவம்பர் 12 ஆம் நாள் தொடங்கியது. மேன்மைமிகு பிரிட்டிஷ் பேரரசர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்:  இந்தியாவின் எதிர்கால அரசமைப்பு முறை குறித்து விவாதிப்பதும், உடன்பாடு காண்பதும் இம்மாநாட்டின் நோக்கம். நீங்கள் எடுக்கின்ற முடிவு எனது நாடாளுமன்றத்திற்கு வழிகாட்டியாக அமையும்: இந்திய அரசு அமைப்புச் சட்டம் உருவாக்குதற்கு அடித்தளமாக அமையும் என்றார். பேரரசர் அவையிலிருந்து சென்ற பின், பிரிட்டிஷ் பிரதமர் இராம்சே மாக்டொனால்டு மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியா வின் பிரச்சினையைத் தீர்த்திட பிரிட்டன் உறுதி பூண்டுள்ளது என்று கூறினார்.

பின் பல் வேறு கட்சியின் தலைவர்கள் பேசினர். இறுதியாக டாக்டர் அம்பேத்கர் உரையாற்றினார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினராக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதி நிதியாகப் பேசுகிறேன் என அறிவித்தார். இந்தியாவிலுள்ள தீண்டப்படாத மக்கள் இப்போது இருக்கின்ற அரசை மாற்றி, அதற்குப் பதிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக  நடத்தப் படுகின்ற., மக்களால் ஆளப்படுகின்ற அரசு அமையவேண்டும் என்று விரும்புகின்றனர். என அறிவித்தார். மேலும், இப்போதுள்ள எங்கள் நிலை யையும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்தைய எங்களின் அவல நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எங்கள் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை என்பதை அறியமுடிகிறது.

தீண்டமை காரணமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கி றோம்.. இந்த நிலையை அகற்றிட இந்த ஆட்சி ஏதேனும் செய்ததா? பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கமுடி யாது. கோயிலுக்குள் நுழையமுடியாது. இந்நிலை களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா இந்த ஆட்சியால்? இதற்கு முன் நாங்கள் காவல் துறையில் பணிசெய்திட வும், இராணுவத்தில் பணிபுரிந்திடவும் தடைகள் இருந்தன. அத்தடைகள் நீக்கப்பட்டனவா? இல்லையே! ஆறாத புண்ணாகவே எங்கள் நிலை நீடிக்கிறது.

ஆனால் 150 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி  உருண் டோடிவிட்டது. இந்த ஆட்சியால் யாருக்கு என்ன நன்மை என்று அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டி னரை நோக்கிக் கேட்டார். இந்தியாவில் உயர் சாதி யினரே அரசியலியக்கத்தை நடத்திக்கொண்டிருக்கின் றனர். அவர்கள்  குறுகிய சாதிக் கண்ணோட்டத்தைக் கைவிடவில்லை. ஆகவே எங்களுடைய துன்பங் களை எங்களைப் போன்று செம்மையாக எவராலும் துடைத்திட முடியாது. அரசியல் அதிகாரம் எங்களுக்கு வராத வரையில் அவற்றை எங்களால் அகற்றிட முடியாது

அம்பேத்கரின் உரை நாடாளுமன்றத்தில் அதிர்வலை களை எழுப்பியது; பிரதமர் இராம்செ மாக்டொனால்டு, அவர்களையும். பரோடா மன்னரையும் வெகுவாகக் கவர்ந்தது. பரோடா மன்னர் அம்பேத்கருக்கு சிறப்பான விருந்து தந்து சிறப்பித்தார். மாநாட்டு உரைகளி லேயே மிகவும் சிறப்பான உரை அம்பேத்கரின் உரை என்று இந்தியன் டெய்லி மெயில் ஏடு எழுதியது. ஆனால் இந்திய ஏடுகள் பாராட்டவில்லை.

வட்டமேசை மாநாட்டில் பொதுவிவாதம் முடிந்தபின் 9 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 8 துணைக் குழுக்களில் அம்பேத்கர் இடம்பெற்றார்..

அம்பேத்கர் அவருடைய குறிக்கோளை அடைவதற் காக ஒரு முக்கியப் பணியைச் செய்தார். தீண்டப்படாத மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கான ஓர் அரசியல் காப்புத் திட்டத்தினை கடும் உழைப்பினை நல்கித் தேர்ந்த மதி நுட்பத்துடன் தயாரித்து இந்தியாவின் எதிர்கால அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதற்காகச் சிறுபான்மைக் குழுவிடம் சமர்ப்பித்தார். அந்தத் திட்டத்தில் மற்ற மக்களுக்கு வழங்கியதைப் போன்றே தீண்டப்படாத மக்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்;  தீண்டாமை, அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சட்டசபை களில் தீண்டப்படாதவர்களுக்குப் போதிய பிரதி நிதித்துவம் வழங்கப்படவேண்டும். தனி வாக்காளர் தொகுதி மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அரசு ஊழியத்தில் மக்கள் தொகைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.. அரசுத் தேர்வாணைக் குழுவில் போதிய பிரதி நிதித்துவம் வழங்கவேண்டும் என்றும்  கோரி யிருந்தார்.

அம்பேத்கர் தீண்டப்படாதார் பிரச்சினைகள் குறித்து அரசியல் பிரமுகர்களிடம் விளக்கினார் பத்திரிக்கை களில் எழுதினார்; கூட்டங்களில் பேசினார், தன் கோரிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்டினார். அதன் விளை வாகப் பிரிட்டிஷ் நாடாளுமான்றத்தில் அம்பேத்கரின் கோரிக்கைகளுக்கு நிறைய ஆதரவுக் குரல்கள் எழுந்தன..

அமைக்கப்படவுள்ள சட்டசபைகளில் பல்வேறு வகுப்பினரும் கோரிய இடஒதுக்கீடு தேர்தல் முறை யில் தனிவாக்காளர் தொகுதியை அளிப்பதா அல்லது கூட்டு வாக்காளர்கள் தொகுதி அடிப்படையில் இட ஒதுக்கிடு அளிப்பதா என்பவற்றில் எழுந்த கருத்து வேற்றுமை காரணமாக வட்டமேசை மாநாடு ஓத்தி வைக்கப்பட முடிவானது. பின் பல்வேறு துணைக்குழுக் களின் அறிக்கையை பதிவு செய்தபின் வட்டமேசை மாநாடு 1931 சனவரி 31 ஆம் நாள் ஒத்திவைக்கப் பட்டது.

லண்டனில் இருந்தபோது, மகத் துணை நீதிமன்றத் தில் நடைபெற்ற சௌதார் குள உரிமைப் போராட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வைதிகர்களுக்கு எதிராக அமைந்தது என்ற செய்தியை அம்பேத்கர் அறிந்தார். பம்பாய் மாநிலச் சட்டசபை உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார் என்ற செய்தியையும் அறிந்தார். 1931 பிப்ரவரி 13 ஆம் நாள் அம்பேத்கர் இந்தியாவிற் குப் பயணமானார். பிப்ரவரி 27 ஆம் நாள் பம்பாய் வந்து சேர்ந்தார். அம்பேத்கருக்கு, பம்பாயில் அம்பேத் கர் சேவாதளத் தொண்டர்கள், சங்கர்ராவ் வத்வல்கர் தலைமையில் உற்சாகமான வரவேற்பளித்தனர்.  அந்த வரவேற்பில், அம்பேத்கர், தீண்டப்படாதவர்கள் உரிமை களைப் பொறுத்தவரையில் வட்டமேசை மாநாடு மாபெரும் வெற்றிதான் என்று கூறினார்.

மகாத்மா காந்தி முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. காந்தி 1930 மார்ச் 12 அன்று உப்புமீது சுமத்தியவரியை எதிர்த்து தண்டி யாத்திரையைத் தொடங்கினார் 1930 ஏப்ரல் 6 அன்று தண்டியில் உப்பு காய்ச்சி எடுத்தார். ஆயிரக்கணக்கில் மக்கள் இந்தச் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை புகுந்தனர். காந்தியை 5, மே 1930 இல் கைது செய்தனர். அதனால் முதல் வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸின் பிரதிநிதிகளாக எவரும் பங்கேற்கவில்லை..

1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட ஒப்புதல் அளித்த பின்னரே காந்தியும் மற்ற வன் முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டாவது வட்டமேசை மாநாட் டில் காந்தி பங்கேற்கவும் இசைந்தார்.

- தொடரும்

Pin It