இந்திய அரசு என்பது, 1977க்குப் பிறகு, காங்கிரசு ஆளுவதா? பாரதியா சனதா ஆளுவதா? என்கிற போட்டியில் சிக்கிவிட்டது.

இவ்விரண்டு கட்சிகளும் இந்தியா ஒரே அரசின் கீழ் இருக்கவேண்டும்; ஒரே நிருவாக இயந்திரம்-ஒரே உச்சநீதிமன்றம் இருக்கவேண்டும்-இந்தியா விலுள்ள 122 கோடி மக்களும், 30 மாநிலங்களும் இவற்றை அப்படியே ஏற்றே இருக்கவேண்டம் என்பதை அரசியல் குறிக்கோளாகக் கொண்டவை.

தமிழ்நாட்டை ஆண்ட தி.மு.க., 1969 ஆகஸ்டு முதல் காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்கத் தொடங் கியது; இடையில் பாரதி சனதாவுக்கும் முட்டுக் கொடுத்தது. அதே பாதையில் 1977, 1980, 1984 எல்லாத் தேர்தகளிலும் வெற்றிபெற்ற அ.தி.மு.க, பயணித்தது.

இச்சூழல்களில் 1990 சூனில் அமைக்கப்பட்ட காவிரி நீர்த்தகராறு குழுமம் அளித்த தீர்ப்பு;  1988இல் அமைக்கப்பட்ட - பிரதமரைத் தலைவராகக் கொண்ட காவிரிநீர் ஆணையம் அளித்த இரண்டு ஆணைகள், உச்சநீதிமன்றம் 2012இல் மூன்று தடவைகள் பிறப்பித்த கட்டளைகள் இவற்றைக் கருநாடக எல்லாக் கட்சித் தலைவர்களும் மக்களும், கர்நாடக மாநில அரசும் தூக்கி எறிந்துவிட்டன.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - காங்கிர சைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர். அவர் கட்சி ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு, தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, திரிணாமுல் காங்கிரசு, உதிரிகள் துணைபோகின்றனர். எனவே காங்கிரசு அரசுக்கு, இன்று எந்த அச்சமும் இல்லை; நேர்மையும் இல்லை; துணிச்சலும் இல்லை.

காவிரி ஆணையத்தின் தீர்ப்பையும் உச்சநீதி மன்றத்தின் ஆணைகளையும் மீறிய கருநாட கத்தை வழிக்குக் கொண்ட வருகிற தன்மையில், மாநில ஆட்சியைக் கலைக்காமலேயே, இந்திய இராணுவத்தை அனுப்பி, தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர்ப்பங்கு நீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று, தமிழக மக்கள் கோரவேண்டும்; தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., மற்றுமுள்ள கட்சிகள் கோரவேண்டும். இங்குள்ள எல்லாக் கட்சிகளும்; தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேரும்-ஒன்றுபட்டு, இப்படி இந்திய அரசை வற்புறுத்த வேண்டும். இதில் கட்சி நலன் பார்ப்பது-தமிழக வேளாண் மக்களைக் காற்றில் பறக்கவிடுவதே ஆகும். இது அடாதது

- மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It