(உலகிலேயே இந்தியாவில் மிக உயரமான சிலை. ஆனால் நாடு வளருவதாகச் சொல்லப்படும் இந்தியாவின் பிற துயரக் கதைகள்)
மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்கா, சீனா நாடுகளில் உள்ளவற்றைக் காட்டிலும் உலகிலேயே மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். பாவம் சர்தார் பட்டேல் - பள்ளிக் குழந்தைகள் நினைவுகூர்வதைப் போன்று வழிபடப்படுகிறார். ஆனால் வளரும் இந்தியாவின் உருமுரணான இரும்பு உரம் மிக்க, அவருக்கே உரிய உறுதியும், வலுக்குறைந்த சின்னமாக எண்ணத்தக்க மாபெரும் தலைவர்.
உலகில் மிக உயரமான இச்சிலையைப் பற்றி எண்ணும் அதே நேரத்தில், உலக நாடுகளுள் பல்வேறு மனிதவள மேம்பாடு குறியீடு (Human Development Indexes-HDI) களில் என்ன தரவரிசையில் உள்ளோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாட்டு மக்களின் மருத்துவ நிலை பற்றிய சில நிழற்படங்களைப் பார்க்கலாம். மக்களின் சராசரி வாழ் நாள் காலம் தொடர்பான கணக்கெடுப்பில் இந்தியா மிகவும் தாழ்ந்த கீழ்நிலையில் 224 நாடுகளுள் 164ஆம் இடத்தில் உள்ளது. பாக்கித்தான் இன்னும் கீழ்நிலை யில் என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். 2016-இல் எலும்புறுக்கி நோய் இந்தியாவைப் பெருமளவுக்குப் பாதித்துள்ளது என்பதுடன் இந்நோய்வாய்ப்பட்ட பெரும் திரளான மக்களுக்கு அந்நோய்க்கான பல்நோக்கு மருந்துகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சென்ற மூன்றாண்டுகளில், காலராவினால் பாதிக்கப்பட்டு அய்ந்து அகவைக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு அளவு இந்தியாவிலும் சிரியாவிலும் 40 விழுக்காடாக இருந்தது. இன்னும் கூடுதலாக 60 விழுக்காடு தொழுதுநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்.
சென்ற இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விண் ணளவு வளர்ந்து வரும் பொருளாதாரம் என இந்தியா பீற்றிக் கொண்டாலும், உலகப் பசிக் கொடுமை குறி யீட்டில் இந்தியா 119 நாடுகளுள் 103ஆம் இடத்தில் தான் உள்ளது. 2017-இல் நாம்தான் மிகவும் சத்துணவுக் குறைபாடுடைய மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட வர்களாக இருக்கிறோம். உலகில் மிகப்பெரிய எண்ணிக் கையிலான நலிந்து நறுங்கிப் போன குழந்தைகளைக் கொண்டதாகவும் இந்தியா உள்ளது. 2016-இல் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்திய மக்கள்தான் மிகக் குறைந்த அளவு வளர்ச்சி நிலை உள்ளவர்களாக 101 நாடுகளுள் 90ஆம் இடத்தில் உள்ளோம்.
இந்தியா ஒரு சுற்றுப்புறச்சூழல் பேரழிவுக்கு உள்ளாகும் நாடாக உள்ளது. உலகில் கடும் மாசடைந்த 15 நகரங் களுள் 14 நகரங்கள் நம் இந்தியாவில்தான் உள்ளன. 2016இல் மாசுக்கேட்டால் உலகின் முதிராச் சாவுகளுள் கால் பங்கு அளவில் 20 இலட்சம் இந்திய மக்கள் முதிராச்சாவடைந்துள்ளனர். மிகுதியான மாசுக்கேட்டின் விளைவால் இந்தியாவில்தான் மிகப்பெரும் எண்ணிக் கையில் அய்ந்து அகவைக்குட்பட்ட குழந்தைகள் இறக் கின்றனர். சுற்றுப்புறச்சூழல் செயல்பாடு குறியீட்டளவில், இந்தியா 180 நாடுகளுள் 177ஆம் இடத்தில் தான் உள்ளது.
நம் நாட்டில் நீர் இருப்பு நிலைமை இரங்கத்தக்க இழிநிலையில் உள்ளது. உலகில் நாம்தான் மிகப் பெருமளவில் பயன்படுத்திவிட்டோம். 2050-க்குள் ஒருவருக்கான சராசரி நீர் இருப்பு அளவு அச்சுறுத்தும் வகையில் 1140 கன மீட்டர் அளவுதான் இருக்கும். அதாவது நீர் நெருக்கடி விளிம்பு அளவான 1000 க.மீ. அளவுக்குச் சற்றுக் கூடுதல் என்ற நிலையில்தான் இருப்போம். ஆனால் 1950-இல் இந்தியாவில் ஒருவருக்கான நீர் இருப்பு அளவு 5000 க.மீ. அளவில் இருந்தது.
ஒரு சிறப்பான-பொறுப்பான கல்வி முறையை இந்தியா கடைப்பிடிக்குமெனில் அதன் மொத்த நல்விளை வாக நாடு இழிநிலைக்குச் செல்லாது காப்பாற்றிவிட லாம். ஆனால் 2018-இல் நல்வாய்ப்பின்றி இந்தியா மனித மூலதனக் குறியீட்டளவில் 115 நாடுகளுள் 105ஆம் இடத்தில் உள்ளது (இந்தக் கணிப்பை நிலை தடுமாற்றத்திலுள்ள அரசு உடனே மறுதலிக்குமென எதிர்பார்க்கலாம்).
2017இல் 103ஆம் இடத்தில் இருந்த நாம் ஓராண்டில் 12 இடங்கள் சரிவடைந்து நேப்பாளம், இலங்கை நாடுகளுக்கும் கீழ் வந்துவிட்டோம். இருப்பினும் பாக்கித் தான், ஆப்கானித்தான் நாடுகளுக்கு மேலே உள்ளோம் என சற்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.
நாம், நம் நாட்டுக் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் துறைகள் குறித்து மீண்டும், மீண்டும் தம்பட்ட மடித்துக் கொள்கிறோம். ஆனால் தகவல் தொடர்பு (Communication) தொழில்நுட்பம் வளர்ச்சிக் குறியீட்டில் அண்மையில் 176 நாடுகளுள் 134ஆம் இடத்தில்தான் உள்ளோம் என்பதுதான் உண்மை நிலை.
இன்னும் இரு அரசியல் தரவரிசையில் நாட்டின் நிலைமை என்ன என்பதைக் குறிப்பிட்டுவிட்டு இந்த ஓலக் கதையை முடிப்போம். ஊடகவியலாளர்கள் இன்னலுக்குள்ளாக்கப்படுவதை அளவிட்டு வெளியிடும் காப்புறுதிக் குறியீடு உலகின் மிக இழிநிலையிலுள்ள 14 நாடுகளில் மிகவும் மோசமான பதிவுகளுடன் கடை நிலையில்தான் இந்தியா உள்ளது எனச் சுட்டுகின்றது. போர் நிலவும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராக், ஆப்கானித்தான், பாக்கித்தான் ஆகிய நாடுகளை ஒத்த கீழ்நிலையில் தான் இந்தியா உள்ளது.
சட்டத்தின் ஆட்சிக் குறியீட்டு அளவில் இன்னும் சிறுமையான நிலையில் சனநாயக இந்தியா 132 நாடுகளுள் 62ஆம் இடத்தில் புத்துருப்பெற்ற சனநாயக நேப்பாளம் நாட்டிற்கும் கீழ் நிலையில்தான் உள்ளது.
ஒரு சராசரி இந்தியனின் தரமான வாழ்நிலையை அளவிட சில பொருண்மையான அளவீடுகள் உள்ளன. உண்மை நிலை மிகவும் இழிவாக உள்ளது. பொதுவாக மக்கள் உண்மையாக என்ன நிலையில் உள்ளனர் என்பதை அடுத்த முறை மக்களுக்கான வானொலி உரையில் முதன்மை அமைச்சர் சொல்வதுதான் மெய்யான நல் ஆட்சி முறையையும், அரசியல் நயத்திறத்தையும் வெளிப்படுத்தும் செயலாக அமையும்.
இந்த அரசும், முந்தைய அரசுகளும் ஆண்டுக்கு ஆண்டு பொது மக்களை ஏமாற்றிவிட்டனர். நம்மை ஆண்டவர்கள், நம்மிடம் நம் உண்மையான நிலை குறித்துச் சொல்லாமல் விட்டதுடன், வெற்றுச் சட்டங்களை இயற்றியும், சபரிமலைகள் போன்றவற்றினால் நம்மைத் திசை திருப்பி விட்டனர்.
நம்மைத் துயரமான, கேடான நிலையில் வைத்துக் கொண்டு, இந்தியா வளருகிறது என மனமறிய பொய் யுரைப்பது மிகவும் நகைப்புக்குரியதாகும். நாட்டின் தற்போதைய நிலைகண்டு நாட்டை ஒருங்கிணைப்பதற்கு அரும்பாடுபட்ட சர்தார் பட்டேல் இப்போது மகிழ்ச்சியுறமாட்டார். அவர் மறைந்து 68 ஆண்டு காலத்திற்குப் பின் உள்ள இன்றைய இந்தியா அவரைத் திகைக்க வைத்துவிடும்.
நன்றி : Times of India
தமிழில் : இரா. பச்சமலை