kassa-flats 6002003 மார்ச்சு மாதம் அமெரிக்கா, ஈராக் நாட்டின் மீது படையெடுத்து மூன்று கிழமைகளுக்குள் தலைநகர் பாக்தாத்தை வீழ்த்தி ஈராக் முழுவதையும் கைப்பற்றியது. ஈராக் மீதான வெற்றியை அப்போது அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் அறிவித்தபோது, “ஈராக்கில் சனநாயகம் வெல்லும்; இந்தச் சனநாயகம் சிரியா, ஈரான் நாடுகளுக்கும் பரவும்; எந்தவொரு நாடும் சனநாயகத்தைத் தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டே தீரும்” என்று கூறினார்.

“ஈராக்கில் சதாம் உசேன் பேரழிவு ஆயு தங்களைக் குவித்து வைத்துள்ளார்; அவை அமெரிக்காவுக்கும் உலக நாடு களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே உலக மக்களின் நலனையும் அமைதியையும் காப்பதற்காகவே அமெரிக் கா ஈராக் மீது படையெடுக்க நேரிட்டது” என்று ஜார்ஜ் புஷ் சொன்னார். ஆனால் ஈராக்கைக் கைப்பற்றிய பிறகு, அமெரிக்கப் படையினர் ஒரேயொரு பேரழிவு ஆயுதத் தைக்கூட அங்கே கண்டெடுக்கவில்லை. ஆயினும் சதாம் உசேன் தூக்கி லிடப்பட்டார்.

2009 தேர்தலில் பராக் ஒபாமா ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி 2011இல் 1,40,000 அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து தாய்நாடு திரும்பின. அப்போது ஒபாமா, “இறையாண்மை யுள்ள, நிலையான, தற்சார்பு கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசை ஈராக்கில் உருவாக்கி விட்டுச் செல்கிறோம்” என்று உண்மைநிலைக்கு முற்றிலும் மாறான பொய்யையே சொன்னார்.

ஈராக் போரில் 4500 அமெரிக்கப் படையினரும், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக் மக்களும் கொல்லப்பட்டனர், இப்போருக்காக அமெரிக்கா 240 இலட்சம் கோடி ரூபாய் செலவிட்டது. ஈராக் போரினால் ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் 35,000 டாலர் வரிச்சுமையை ஏற்க நேரிட்டது.

புஷ் கூறியவாறு ஈராக்கில் சனநாயகம் ஏற்பட் டுள்ளதா? அல்லது ஒபாமா அறிவித்தவாறு இறை யாண்மையுள்ள நிலையான ஆட்சி அங்கு நிறுவப் பட்டுள்ளதா? இல்லை! மாறாக. ஈராக்கின் வடமேற்குப் பகுதியும், ஈராக்கையொட்டி உள்ள சிரியாவில் சன்னி முசுலீம்கள் வாழும் நிலப்பகுதியும் கொண்ட ஈராக்-சிரியா இசுலாமிய அரசு (Islamic State of Iraq and Syria - ISIS) நிறுவப்பட்டிருப்பதாக, 2014 சூன் 29 அன்று அறிவிக்கப்பட்டது, இது, வெறும் இசுலாமிய அரசாக மட்டுமின்றி, கலிஃபா ஆட்சி முறையிலான ((Caliphate) அரசாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகவுள்ள-48 அகவைக்காரரான அபுபாக்கீர் அல் - பக்தாதி கலிஃபாவாக (Caliph) முடி சூட்டிக் கொண்டிருக்கிறார். காலிஃப் என்கிற பதவி முழுமையான மதத் தலைமை - அரசியல் தலைமை அதிகாரங்களைக் கொண்டதாகும்.

முகமது நபி (570-632) இறந்தபின் முதல் கலிஃபாவாக அபுபக்கர் பொறுப்பேற்றார், ‘காலிஃப்’ என்பது அரபுமொழிச் சொல், ‘வாரிசு’ என்பது அதற்குப் பொருள், ‘இஸ்லாம்’ என்ற சொல்லுக்குக் ‘கீழ்ப்படிதல்’ (Submission) என்று பொருள். அபுபக்கர், முகமது நபியின் சீடர், முதல் நான்கு கலிஃபாக்கள் இசுலாமியக் கொள்கைகளைக் கற்றறிந்த மேதைகளாக இருந்த வர்கள். முகமது நபியின் கோட்பாடுகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே கி.பி.625இல் நூலாகத் தொகுக்கப் பட்டது. அதுவே குரான் ஆகும்.

நான்காவது கலிஃபாக அலி என்பவர் பொறுப் பேற்ற போது இசுலாமியர்களில் ஒரு பிரிவினர் இசுலாமிய மெய்யியலாளர்களுக்குப் பதிலாக முகமது நபியின் குருதி வாரிசுகளே கலிஃபாவாகப் பதவிக்கு வர வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர், இவர்கள்தான் ‘ஷியா முசுலீம்கள்’ எனப்படுகின்றனர். மெய்யியலா ளர்களே கலிஃபாவாக வரவேண்டும் என்று கூறிய வர்கள் சன்னி பிரிவினர். இக்கிளர்ச்சியில் நான்காவது கலிஃபா அலி கி.பி.661இல் கொல்லப்பட்டார். ஆயினும் கி.பி.661-750 வரையிலான உமாயத் வம்ச கலிஃபா ஆட்சியிலும், கி.பி.750-1258 வரையிலான அபிசீனி யர்களின் 38 கலிஃபாக்களின் ஆட்சியிலும் இசுலாமிய மதம் அரேபியா முழுவதும், வடஆப்பிரிக்கா மற்றும் அய்ரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவியது, பல இசுலாமிய அரசுகள் ஏற்பட்டன.

கி.பி.661இல் கலிஃபாவின் தலைமையிடம் தற் போது சிரியாவின் தலைநகரமாக உள்ள டமாஸ்கஸ் நகருக்கு மாறியது. கி.பி.786இல் டமாஸ்கசிலிருந்து பாக்தாத்துக்கு மாறியது. மங்கோலியர்கள் கி.பி.1528 இல் அபிசீனியப் பேரரசைத் தோற்கடித்த பிறகு கலிஃபா ஆட்சி முறை என்பது முடிவுக்கு வந்தது, ஆயினும் கி.பி.1300 முதல், முதல் உலகப் போர் வரையில் (1914-1918) அரேபியாவில் இசுலாமியரின் ஒட்டாமன் பேரரசு வலிமை வாய்ந்ததாகத் திகழ்ந்தது.

இன்று உலகின் மக்கள் தொகை 750 கோடி. இவர் களில் கிறித்தவர் 250 கோடி. இவர்களில் கத்தோலிக் கர், புராட்டஸ்டெண்ட் என்ற இருபெரும் பிரிவினர் உள்ளனர். இசுலாமியர்கள் 150 கோடி மக்கள் இருக் கின்றனர். இவர்கள் சன்னி, ஷியா எனும் இரு பிரிவு களாக உள்ளனர். சன்னி பிரிவினர் 80 விழுக்காட் டிற்குமேல் உள்ளனர்.

செருமானியக் கிறித்துவ இளம் பாதிரியான மார்டின் லூதர், 1517இல் மதத்தின் பெயரால் ரோம் நகரின் போப் உள்ளிட்ட பாதிரிகள் செய்யும் அட்டூழியங்களை யும், ஆடம்பர வாழ்க்கை முறையையும், ‘பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை’ என்ற பெயரில் மக்களிடம் பணம் கொள் ளையடிப்பதையும் கண்டித்துக் கிளர்ச்சி செய்தார்.

ISIS- 350மேலும் அதுவரை ரோம் நகரிலிருந்த கிறித்துவ மதத் தலைமை மதகுருவான போப் அய்ரோப்பிய நாடுகளின் அரசியலையே ஆட்டிப்படைத்துக் கொண்டி ருந்தார். மார்டின் லூதரின் கருத்துகளைப் பின்பற்றியவர்கள் புராட்டஸ்டென்ட் பிரிவினராயினர். அய்ரோப்பாவில் கத்தோலிக்க நாடுகள், புராட்டஸ்டென்ட் நாடுகள் எனப் பிரிந்து போரிட்டுக் கொண்டன.

‘எதையும் கேள்விக்கு உட்படுத்து; ஆராய்ந்து பார்’ என்கிற அறிவொளி இயக்கம் அய்ரோப்பா முழுவதும் பரவி மதம், கடவுள் மீதான பல வினாக்களைத் தொடுத்தது. அதேகாலத்தில் முதலாளியம் தன் ஆதிக்க நலனுக்கு ஏற்ற அரசை அமைப்பதற்காக, அதுவரை அரசின் மீது கிறித்துவ மதம் செலுத்திவந்த ஆதிக்கத்தை ஒழித்தது. மதம் தனிப்பட்டவர்களின் நம்பிக்கை என்ற நிலை உரு வானது, அரசு, கல்வி ஆகியவற்றிலிருந்து மதம் முற்றிலும் விலக்கப்பட்ட ‘மதச்சார்பின்மை’ என்ற கோட்பாடு செல்வாக்குப் பெற்றது. இது, இன்ற ளவும் அய்ரோப்பிய நாடுகளில் மேலோங்கி யுள்ளது.

ஆனால் இஸ்லாமிய மதத்தில் அரசு, மதம் குறித்த தெளிவான வரையறைகள் உருவாகவில்லை. இஸ் லாமிய மதமும் அரசும் இரண்டறக் கலந்திருப்பதே-குறிப்பாக மத்தியக் கிழக்காசியாவில் உள்ள நாடுகளில் தொடர்ந்து கொந்தளிப்பான நிலை நீடிப்பதற்குக் காரண மாகும். இந்தப் போக்கைப் பயன்படுத்தி, அமெரிக்க பிரித்தானிய ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்காக மத்தியக் கிழக்காசிய நாடுகளை மோதவிட்டு, அந்நாடு களின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிப் பதுடன், இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்து-பார்ப்பன-பனியா மேல்சாதி ஆதிக்க வர்க்கம் இந்துத் துவ அரசியலையும், இந்து-முசுலீம் பகையையும் வளர்த்துத் தன் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் நிலைக்கச் செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஒட்டாமன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக்கை 1914இல் பிரித்தானியப் படைகள் கைப்பற்றின. ஈராக் நாட்டில் தன் கைப்பாவை யான மன்னராட்சியை இங்கிலாந்து ஏற்படுத்தி யது. முதல் உலகப் போருக்குப்பின், மத்திய ஆசியாவில் பிரிட்டனும் பிரான்சும் தம் நலன் களுக்கேற்ப நாடுகளையும் அவற்றின் எல்லை களையும் உருவாக்கின. பாலஸ்தீனப் பகுதியில் யூதர்கள் குடியேறிட - வழிவகை செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் ஈராக்கை மீண்டும் தனதாக்கிக் கொண்டது. போரின் முடிவுக்குப் பின் மீண்டும் ஈராக்கில் மன்னராட்சியைப் பிரிட்டன் ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டன் உலகில் முதல்நிலை ஏகாதிபத்திய நாடு என்ற நிலையை இழந்தது. அமெரிக்காவும் சோவியத் நாடும் இருபெரும் வல்லரசுகளாக உருவாயின.

யூதர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியின்படி, பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான நாடான இசுரேல் நாட்டை அமெரிக்காவும் பிரிட்டனும் உருவாக்கின. மத்தியக் கிழக்காசியாவில் உள்ள 60 விழுக்காடு எண் ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக் கவும், இசுலாமிய நாடுகளை மிரட்டிப் பணிய வைக்கவும் அமெரிக்கா 1948 முதல் இசுரேல் நாட்டைப் பயன்படுத்தி வருகிறது.

இசுரேல் 1967 உடன்பாட்டுக்கு எதிராகப் பாலஸ் தீனத்தின் பெரும் பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. யாசர் அராபத் தலைமையில் பேரெழுச்சியுடன் உருவான பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இசுரேல் நாட்டின் துணையுடன் தன் ஆயுத வலிமையால் அமெரிக்கா ஒடுக்கியது. அதற்காக, சவூதி அரேபியா, ஜோர்டான், எகிப்து முதலான முசுலீம் நாடுகளை அமெரிக்கா தன் கைப்பாவையாக வைத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் எஞ்சியுள்ள பாலஸ்தீனப் பகுதிகள் மீது இசுரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாலஸ்தீனம் காஸா, மேற்குக்கரை, கோலன் குன்று கள் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாகும். 368 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்ட நீளமான நிலப் பரப்பில் 18 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். காஸா பகுதியைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் ஆட்சி செய்கிறது. மூன்று இசுரேலிய இளை ஞர்களை ஹமாஸ் இயக்கம் கடத்திக் கொன்றுவிட்டது என்று இசுரேல் குற்றம் சாட்டி, காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் இசுலாமியப் போராளிக் குழுக்கள் இசுரேல் மீது திருப்பித் தாக்கி வருகின்றன. இசுரேல் தாக்குதலால் சூலை மாதத்தில் காஸா பகுதியில் பச்சிளங்குழந்தைகள் உட்பட 1000 இசுலாமியர் கொல் லப்பட்டனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந் தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் எந்தவொரு மூன்றாம் உலக நாட்டில் ஏற்படும் சிக்கலுக்கும், சண் டைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே மூலகாரணமாக இருந்து வருகிறது, 1950களில் வடகொரியா-தென் கொரியா போர், 1965-75களில் வியத்நாம் போர், 1960களில் இந்தோனேசியாவில் 10 இலட்சம் கம் யூனிஸ்டுகளை சி.அய்.ஏ. சதித்திட்டத்தின் மூலம் படுகொலை செய்தது. 1973இல் சிலியில் அலண்டே வின் படுகொலையும் - சோசலிச ஆட்சிக் கவிழ்ப்பும், இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப் போர்கள் என இப் பட்டியல் நீள்கிறது.

ஈராக்கில் 1958இல் மன்னராட்சியில் படைத்தளபதி யாக இருந்த அப்துல்கரீம் காசிம் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் மன்னராட்சியை வீழ்த்தி ஆட்சி யில் அமர்ந்தார். காசிம் மதச் சார்பற்றவர்; சோசலிச வாதி. எனவே ஈராக் எண்ணெய் வயல்களை நாட்டுடை மையாக்கினார். 1968இல் சதாம் உசேனின் பாத் கட்சி இராணுவத்தின் ஒரு பிரிவினரின் துணையுடன் ஈராக்கின் ஆட்சியைக் கைப்பற்றியது. சதாம் உசேன் தன் மாமா ஹாசல் அல்-பாகர் என்பவரை அதிபராக்கி னார்.

ஆனால் முழு அதிகாரமும் சதாம் உசேனிடமே இருந்தது. 1968 முதல் 1978 வரையில்-போர் எதுவும் நிகழாத சூழலில், ஈராக் மக்களுக்குக் கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், வீடு முதலான அடிப்படைத் தேவை கள் பெருமளவில் அளிக்கப்பட்டன. 1978இல் சதாம் உசேனே ஈராக்கின் அதிபரானார். சதாம் உசேன் சன்னி முசுலீம். ஆனால் ஈராக்கில் ஷியா முசுலீம்கள் 65 விழுக்காடு, சன்னி பிரிவினர் 15 விழுக்காடு, குர்து இன முசுலீம்கள் 15 விழுக்காடு. சிறுபான்மையின ரான சன்னி பிரிவினரே நெடுங்காலமாக ஆட்சியாளர் களாக இருந்து வந்தனர்.

சதாம் உசேன் முறைப்படி ஈராக்கின் ஆட்சித் தலைவரான போது, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஷியா மக்களைக் கொண்ட ஈரானில் அமெரிக் காவின் அடியாளாக ஆட்சியிலிருந்த மன்னர் ஷா அயத்துல்லா கொமேனியின் இசுலாமிய மதப்புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டார். 1979இல் ஆப்கானிஸ் தானில் சோவியத் நாட்டின் ஆதரவு பெற்ற ஆட்சி அமைந்தது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டன.

எனவே அமெரிக்கா ஈரானிலும், ஆப்கானிலும் தன் எதிரிகளை வீழ்த்தத் திட்டம் தீட்டியது. சன்னி பிரிவினரான சதாம் உசேனுக்கு ஆயுதங்களை அளித்து 1980இல் ஷியா மக்களைக் கொண்ட ஈரான் மீது போர் தொடுக்கச் செய்தது. எட்டு ஆண்டுகள் நடந்த ஈராக்-ஈரான் போர் எத்தரப்பினருக்கும் வெற்றி தோல்வி யின்றி முடிவுற்றது. ஆனால் இப்போரில் அய்ந்து இலட்சம் ஈராக்கியர் கொல்லப்பட்டனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து முசுலீம் நாடான ஆப்கானை விடுதலை செய்ய வேண்டும்; அதற்காகப் ‘புனிதப் போர்’ தொடுக்க வேண்டும் என்று பல நாடுகளின் இசுலாமிய இளை ஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த, அமெரிக்கா, ஆப்கான் அரசுக்கு எதிராக அவர்களை ஏவியது. அவர்கள் ‘புனிதப் போராளிகள்’, ‘ஜிகாதிகள்’ எனப்பட்டனர்.

1989இல் சோவியத் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறின. இந்தப் புனிதப் போருக்கு சவூதி அரேபியா மன்னர் பல இலட்சம் டாலர் கொடுத்தார். சவூதி அரேபியாவில் 5 இலட்சம் அமெரிக்கப் படைகள் முகாமிட்டன. ஆப் கானிலிருந்து சோவியத் படைகளை விரட்டுவதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவைதாம் தாலீபன் அமைப்பும், அல்-கொய்தா அமைப்பும் ஆகும். ஒசாமா பின்லேடன், முல்லா உமர் போன்றவர்கள் அமெரிக் கப் படையினரிடம் பயிற்சி பெற்றவர்களாவர்.

ஆப்கானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறிய பின் தாலீபன் தலைவர் முல்லா உமர் ஆப்கானின் ஆட்சியைக் கைப்பற்றினார். சவூதி அரேபியாவில் உள்ள 5 இலட்சம் அமெரிக்கப் படைகளை வெளி யேறுமாறு ஒசாமா பின்லேடன் கூறினார். அமெரிக்கா இதை ஏற்காததால், அமெரிக்காவுக்கு எதிரான தாக்கு தல்களை நடத்தினார். இதன் உச்சக்கட்டமாக 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகர இரட்டைக் கோபு ரங்கள் தகர்க்கப்பட்டன.

இதன் எதிர்வினையாக அமெரிக்கா 2001 அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. 1991 ஆம் ஆண்டு குவைத் மீது சதாம் உசேன் படையெடுத்த தால், இனி சதாம் உசேனை வளரவிடக் கூடாது, ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்தது. அய்க்கிய நாடுகள் மன்றத்தைப் பயன்படுத்தி ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. மருந்து, உணவு கிடைக்காமல் 5 இலட்சம் குழந்தைகள் உட்பட 10 இலட்சம் ஈராக்கியர் இறந்தனர். ஆயினும் சதாம் உசேன் அமெரிக்காவுக்கு மண்டியிட மறுத்தார். அதனால் 2003இல் அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்தது.

சதாம் உசேன் ஈரானுக்கு ஆதரவாக இருந்த ஷியா பிரிவினரையும், குர்து இனத்தவரையும் ஒடுக் கினார். ஆனால் அவர் மதச்சார்பற்ற ஆட்சி செய்தார். அல்-கொய்தாவினர் சன்னி பிரிவினராக இருந்த போதிலும் ஈராக்கில் பின்லேடனின் அல்-கொய்தா கால் பதிக்கவிடாமல் தடுத்தார். ஆனால் சதாம் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா ஆட்சி அதிகாரத்தை ஷியா முசுலீம் களிடம் ஒப்படைத்தது. ஈராக்கின் பிரதமர் நவ்ரி அல்-மாலிகி இராணுவத்திலிருந்த 5 இலட்சம் சன்னிகளை வேலையிலிருந்து நீக்கினார்.

நிர்வாகத்திலும் பெருமளவில் இருந்த சன்னி பிரிவினர் அவர்களுடைய பதவிகளிலிருந்து விரட்டப் பட்டனர். பிரதமர் அல்-மாலிகி ஒரு இலட்சம் சன்னி முசுலீம்களைச் சிறையில் அடைத்து வைத்துள்ளார். அமெரிக்கப் படையினரை சன்னி பிரிவினரே கடுமை யாக எதிர்த்தனர். எனவே அமெரிக்கா ஈராக்கில் ஷியா- சன்னி மோதலை வளர்த்தெடுத்தது. இந்நிலையில் சன்னி பிரிவான அல்-கொய்தா ஈராக்கில் காலூன்றி வேகமாக வளர்ந்தது.

அபு முஷப் அல்-ஷர்குவி என்பவர் ஈராக் அல்கொய்தா அமைப்பை உருவாக்கியவராவார். இவர் ஷியா முசுலீம்களுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் எதிரான கொடிய தாக்குதல்களை நடத்தினார். 2006 சூன் மாதம் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார். அதன்பின் ஈராக்கில் அல்கொய்தா அமைப்பு “ஈராக் இசுலாமிய அரசு” என்ற பெயரில் இயங்கியது. 2011இல் சிரியாவில் அரசுக்கு எதிரான - அமெரிக்க ஆதரவுடனான ஆயுதமேந்திய கிளர்ச்சி தொடங்கி யதும் இந்த அமைப்பு அங்குச் சென்று போரிட்டது. ‘ஈராக்- சிரியா இசுலாமிய அரசு’ ((ISIS-அய்.எஸ்.அய்.எஸ்.) என்று இந்த அமைப்பின் பெயர் மாற்றப்பட்டது.

2014 சனவரியில் அய்.எஸ்.அய்.எஸ். படைகள் ஈராக்கில் பலுஜா, திக்ரித், மோசூல் முதலான பெரிய நகரங்களையும் பெரிய நிலப்பரப்பையும் கைப்பற்றின. இதன் தலைவர் அல்-பக்தாதி தன்னை கலிஃபாவாக அறிவித்துக் கொண்டுள்ளார். ஆனால் சவூதி அரேபியா உள்ளிட்ட இசுலாமிய நாடுகள் இவரை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் ஷியா, சன்னி பிரிவினரில் பெரும்பாலோர் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்றே விரும்பு கின்றனர். இனி ஈராக்கிலும் சிரியாவிலும் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இசுலாமியர்களே இசுலாமியர்களைக் கொல்லும் நிலையை மாற்றிட 150 கோடியாக உள்ள இசுலாமிய சமூகம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்கு அரசு தனி, மதம் தனி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அமெரிக்கா, மத்திய ஆசிய முசுலீம் நாடுகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தித் தன்னுடைய ஆதிக்க அரசியல் சதுரங்க விளையாட்டை நடத்திக் கொண்டி ருப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.

Pin It