ஆறு மலையில் தோன்றுதாம்

அங்கே சென்று பார்க்கலாம்

ஆறு காட்டில் நுழையுதாம்

அதனைக் கண்டு மகிழலாம்

ஆறு மரத்தைத் தழுவுதாம்

அந்தமரத்தில் தாவலாம்

ஆறு மடுவில் குதிக்குதாம்

அதிலே சென்று குளிக்கலாம்

ஆற்றில் பரிசில் சுற்றுதாம்

அதிலே ஏறிச் சுற்றலாம்

அருவி தூறல் போடுதாம்

அதிலே சற்று நனையலாம்

ஆற்றில் மீன்கள் துள்ளுதாம்

அதனைக் கையால் அள்ளலாம்

ஆறு அகன்றே ஓடுதாம்

அருகில் நின்று பார்க்கலாம்

ஆறு இரண்டாய்ப் பிரியுதாம்

அந்தப் பிரிவைக் காணலாம்

ஆறு ஊரைச் சுற்றுதாம்

அந்த ஊரைப் பார்க்கலாம்

ஆறு அய்ந்து ஓடுதாம்

அந்த ஊரைப் பார்க்கலாம்

ஆறு கடலில் கலக்குதாம்

அந்தக் காட்சி காணலாம்

வெண்ணாற்றங் கரையிலே

விரும்பித் தமிழ் படிக்கலாம்

விருதாச்சலம் அமைத்திட்ட

நாட்டார் கல்லூரி காணலாம்.
Pin It