கைபர் கணவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் இந்திய நாகரிகத்தைக் கண்டு வியந்து அனைத்து நல்ல பழக்கங்களையும் அவர்கள் நம்மிடமிருந்த கற்றுக்கொண்டு அவர்களிடமிருந்த கெட்ட பழக்கவழக்கங்களை (மது அருந்துதல், பிறன் மனைவி நாடல், சூதாடுதல்... போன்ற) நமக்குக் கற்றுக்கொடுத்து இன்றளவும் நம்மை அஃறிணையாகப் பார்த்து வருபவர்கள் ஆரியர்களே.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உயர் பதவிகளில் இருந்தால் அவர்களைச் செயல்படாவிடாமல் ஊறுவிளைப்பது, குற்றம் சொல்லிக் களங்கம் விளைவிப்பது அல்லது வெகுமக்களுக்கு விரோதச் செயல்களை இவர்களைக் கொண்டு செயல்படுத்தி எதிர்ப்பை உண்டாக்குவது போன்ற தீங்குகளைச் செய்வது போன்றவை ஆரியர்களின் செயலே ஆகும். 3 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள ஆரியர்கள் 97 விழுக்காடு உள்ளவர்களை ஆட்சி செய்வது நம்மிடையே உள்ள தன்னலக்காரர்களும் கருங்காலிகளுமே காரணமாகும்.
நாமும் நமக்கு நன்மை செய்யும் மானமிகு மற்றும் மாண்புமிகு மனிதர்களைக் கண்டு அவர்களுடன் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். 93 வயதிலும் இடப்பங்கீட்டுக்கு போராடும் அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் எண்ணம் வெற்றிபெறப் பாடுபடுவோம்.