2017இல் இந்தியாவில், மொத்தம் 819 பல் கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்துடனும் பல கல்லூரிகள் இணைந்துள்ளன. இவற்றில் கலை, அறிவியல் கல்லூரிகள், 2013 கணக்குப் படி, 35,539 உள்ளன. ஒரு கல்லூரியிலிருந்து, சரா சரியாக ஆண்டுதோறும் 200 பேர் பட்டம் பெற்று வெளி யேறுகிறார்கள்.

இவர்களில் பலர் 10ஆம் வகுப்பு வரையிலும் தாய்மொழி வழியில் படித்தவர்கள்; சிலர் ஆங்கில மொழி வழியில் படித்தவர்கள்.

இவர்களில் 12ஆம் வகுப்பு வரையில் சிலர் தாய் மொழி வழியிலும், பலர் ஆங்கில மொழி வழியிலும் படித்தவர்கள்.

ஆனல் இவர்கள் எல்லோரும், பட்டப்படிப்பிலும், மேல்பட்டப் படிப்பிலும் கலை, அறிவியல் முதலிய எல்லாப் பாடங்களையும் ஆங்கில மொழி வழியில் மட்டுமே படிக்கிறார்கள்.

இப்படிப் படித்துப் பட்டம் பெற்றவர்கள், இந்தியாவில் ஆண்டுக்கு 72 இலட்சம் பேர் ஆண்களும் பெண்களும் ஆவர்.

இவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களைச் சரிவர உள்வாங்கிக் கொள்ள முடியாது. அவரவர் எடுத்த படிப்புத் துறையில்-துறைபோன திண்ணிய அறிவைப் பெற முடியாது. பொது மக்களுக்குப் புரிகிற தன்மையில் எடுத்துச் சொல்ல முடியாது.

இந்தியா முழுவதிலும் 3,345 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகள்.

தமிழ்நாட்டில் மட்டும் 545 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இவற்றிலும் பெரும்பாலானவை தனியார் கல்லூரிகள்.

இப்படிப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், 1977 முதல் 2010 வரையில், 33 ஆண்டுகள் காலம், கள்ளப்பணம் அச்சடிக்கும் களங்கள் போல் பயன் பட்டன.

இவற்றில் எந்த மாநிலத்திலும் எந்த அரசுப் பொறி யியல் கல்லூரியிலும் அல்லது தனியார் பொறியியல் கல்லூரியிலும், பொறியியல் பாடங்களும், செய்வினைப் பாடங்களும் (Practical) அவரவர் தாய்மொழி வழியில் கற்பிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் 100 பேர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால், கடந்த 2017 ஆண்டு முதல் அந்த 100 பேரில் 45 (அ) 46 பேர் உயர் கல்விக்குச் செல் கிறார்கள் என தமிழக அரசு பீற்றிக் கொள்கிறது; பெருமைப்படுகிறது.

மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு மாநிலம் உயர்கல்வியில் முன்னேறியிருப்பது தமிழகத்துக்குப் பெருமைதான்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பல் கலைக்கழகமும்-இந்தியா முழுவதிலும் உள்ள 819 பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் உலகத் தரம் வாய்ந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக-2017 வரை இடம்பெறவில்லையே, அது ஏன்?

அமெரிக்கா, சீனா, இரஷ்யா, அய்ரோப்பா போன்ற எந்தத் தொலைதூர அயல்நாடுகளிலும் - ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் தாய்மொழி வழியில் மட்டுமே பாலர் வகுப்பு முதல் (கிண்டர் கார்ட்டன் முதல்) பல்கலைக்கழகப் படிப்பு வரையில் பாடங்களைப் பயிற்றுவிக்கிறார்கள்.

அதனால் அவ்வந்நாடுகளில் உள்ள உயர்கல்வித் துறை தங்கள் தங்கள் தாய்மொழியில் நூல்களையும், பாடப் பயிற்சிக்கான நூல்களையும், அகராதிகள், ஆய்வு நூல்கள் போன்ற கருவி நூல்களையும் உருவாக்கும் திறன் நிரம்பப் பெற்றிருக்கிறார்கள்.

ஆங்காங்கு உள்ள அரசுகளும் - எல்லாக் குடி மக் களுக்கும் ஒரே தரம் உள்ள கட்டாய - இலவசக் கல்வியை அவரவர் தாய்மொழி வழியில் தருகிறார்கள்.

இந்தியாவில் 1947 முதல் 1977 வரையில் தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சி இருந்த போதிலும், எந்த இந்திய மொழி யையும்-எந்தக் கலை, அறிவியல், பொறியியல், மருத்து வம், வேளாண்மை துறைகளைச் சார்ந்த அறிவைக் கற்பிக்க ஏற்ற தகுதிவாய்ந்த மொழியாக வளர்த்தெடுக்க வில்லை.

அதாவது - சுதந்தர இந்தியா, கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை எல்லாத் துறைகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழி, ஆங்கிலமே ஆட்சி மொழி, ஆங்கிலமே உயர்கல்வி மொழி என்கிற அடிமைப்புத்தியிலிருந்து 70 ஆண்டுகளாகியும் விடுதலை பெறவில்லை.

இந்தியாவில் ஏறக்குறைய 460 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

மருத்துவக் கல்வியைத் தரப்படுத்துதல் என்கிற நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற ஒரே வழியாக, பொது மருத்துவப் படிப்பு என்கிற பட்டப் படிப்பில் M.B.B.S. -இல் சேருவதற்கான பொதுத் தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வை எழுதச் செய்து, அனைத்திந்திய அளவில் - ‘நீட்’ (National Eligibility Entrance Test-NEET) என்ற ஒரு தேர்வை நடத்துவது தான் என்று மூடத்தனமாக இந்திய அரசு முடிவெடுத் திருக்கிறது. ஏன்?

இந்தியக் கல்வியாளர்கள், இன்னமும் பெரிதும் ஆளும் வகுப்பை - உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆக இருக்கிறார்கள்.

இந்திய சமுதாய அமைப்பில் 1800 வரையில், 100க்கு 90 பேராக உள்ள கீழ்ச்சாதி மக்கள், சாத் திரப்படி, எழுத்தறிவு மறுக்கப்பட்டவர்கள்.

1835க்கும் 2020க்கும் இடைப்பட்ட 185 ஆண்டுக் காலத்தில்தான் - எழுத்தறிவு என்பதை 100க்கு 90 இந்தியர்கள் சுவைத்தார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் இன்னமும் சிற்றூர்ப் புறங்களில் உடல் உழைப் பாளிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய பிள்ளைகளும், திருச்சி, சென்னை, பெங்களூர், மும்பை, புதுதில்லி, கல்கத்தா வாழ் நகரங்கழகளில் வாழ்கின்ற பிள்ளைகளும் ஒரே போட்டியில் - NEET தேர்வில் பங்கேற்றால், எப்படி சிற்றூர்ப்புற ஏழைப்பிள்ளைகள் வெற்றி பெற முடியும்?

அப்படி வெற்றி பெற்று, எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேரவோ அல்லது எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகு, மேலும் மேலும் M.D., M.S.. போன்ற ஆராய்ச்சிப் படிப்புக்கு - சீனா, இரஷ்யா, ஸ்விட்சர்லாந்து முதலான அயல்நாடுகளுக்குப் போனால்-முதலில், எந்த நாட்டில், படிக்க இடம் கிடைக்கிறதோ, அந்த நாட்டு மொழியை, இந்திய மாணவர் ஒவ்வொருவரும் ஓராண்டுக்குள் கற்க வேண்டும்.

அவர் எம்.பி.பி.எஸ். தகுதி பெற எந்த ஆங்கில வழியில் படித்தாரோ, அந்த ஆங்கிலம் - அன்றும் இன்றும்-சீனனுக்கு வேண்டப்படவில்லை; இரஷ்யனுக்குக் கிட்டவே வரக்கூடாது; ஸ்விட்சர்லாந்துக்காரனுக்குத் தேவையில்லை.

ஆனால், இந்தியன் ஒவ்வொருவனும் - தமிழன் ஒவ்வொருவனும், இந்திக்காரன் ஒவ்வொருவனும் 2018க்குப் பிறகும் ஆங்கில மொழி வழியில் கற்பான்; பேசுவான்; எழுதுவான்.

உருப்படுவானா தமிழன்? உருப்படுவானா இந்தியன்?

Pin It