கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு தமிழ் மக்களிடையே மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வந்த அதேகாலத்தில் சென்னையில் இந்தியை எதிர்த்து மறியல் கிளர்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருந்தன.

இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் சிறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறையேகி வந்தனர். அந்த வரிசையில் மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு அவர்களுக்கு 8.8.1938 அன்று ஆறு மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மறை திருநாவுக்கரசு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு வருமாறு :

“தாங்கள் ஜூன் 27-ஆம் அயனாவரத்திலும், ஜூலை 2-ஆம் தேதி கோடம்பாக்கத்திலும் பேசுகையில் பொது ஜனங்களை முதன் மந்திரி வீட்டு முன்னும், இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டிருக்கும் பள்ளிக்கூடத்தின் முன்னும் மறியல் செய்யும்படி தூண்டியிருக்கிறீர்கள். அதனால் தாங்கள் கிரிமினல் திருத்தச் சட்டம் 7ஆவது செக்ஷன் படியும் இ.பி.கோ. 117ஆவது செக்ஷன் படியும் குற்றம் செய்தவராகிறீர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு செக்ஷன்களுக்கு தலா ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 6 மாதச் சிறைத் தண்டனையாக மாறியது” (விடுதலை 9-8-1938).

மறை திருநாவுக்கரசு அவர்களின் தமிழாசிரியர் பணியும் இதனால் பறிபோனது. மறை திருநாவுக்கரசு மீது சென்னை நகர சபை கமிஷனர் நடவடிக்கை.

சென்னை, நுங்கம்பாக்கம் கார்ப்பரேஷன் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்துவரும் எதிர்ப்புக் கிளர்ச்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்து வருவதைக் துண்டு பிரசுரங்களின் மூலமாக வும், பத்திரிகைகளின் மூலமாக வும் கமிஷனர் அறிந்து, சர்க் காரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருவதற்குக் காரணம் காட்ட வேண்டுமெனக் கேட்டதற்கு, மறை திருநாவுக்கரசு அளித்த பதிலில் தம்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க யாது காரணமும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால், கமிஷனர் அவரது பதிலில் திருப்தி அடையாமல், இந்தி எதிர்ப்பில் கலந்துகொள் ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு மறை திருநாவுக்கரசு தாம் இந்தி எதிர்ப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாதென்று பதில் அளித்த தோடு சிறைக்குச் செல்லவும் தயாராயிருப்பதாகவும் தெரிவித்துவிட்டார். அதன் பேரில் கமிஷனர் மறை திருநாவுக்கரசு மீது கீழ்வரும் குற்றங்களைச் சாட்டி வேலையினின்றும் நீக்கிவிட்டார்.

செக்கண்டரி பள்ளிக்கூடங்களில் “இந்துஸ்தானி” யை கட்டாயப் பாடமாகப் புகுத்தியிருக்கும் சர்க்கார் செய்கையைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசி யிருக்கிறார். முனிசிபல் சிப்பந்திகள் ஒழுங்குமுறை விதியை மீறிவிட்டார். மாணவர்களுக்குச் சர்க்கார் மீது வெறுப்பு உண்டாகும் வகையில் தூண்டியிருக்கிறார்.

அவருடைய இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் பள்ளிக்கூடத்தின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படும் எனத் தெரிகிறது. 29-6-1938-ஆம் தேதி பிரதம மந்திரி அவரது பள்ளிக்கூடத்துக்கு விஜயம் செய்திருந்த போது, மந்திரி வெளியேறுவதற்குள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுப் புறப்பட்டு பக்கத்தில் கூடியிருந்த கூட்டத்திற்குச் சென்று சர்க்கார் இந்தி நுழைப்பு உத்தரவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். அவரது சமாதானமும் திருப்திகரமாக இல்லை.

மேலே கூறப்பட்ட காரியத்துக்காகவே அவர் போலீ சாராலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய போக்கு மேற்படி பள்ளிக்கூடத்தின் சர்க்கார் அங்கீகாரத் தை இரத்து செய்ய நேரிடும் என அறிந்து மேலே கூறப்பட்ட காரணங்களாலும் அவரை வேலையினின் றும் நீக்கிவிடுகிறேன் என்று உத்தரவிட்டார் ஆணையர்.

சென்னையில் மாபெரும் கட்டாய இந்தி எதிர்ப்பு ஊர்வலம்

சென்னை பொத்துநாயக்கன் பேட்டையில் கட்டாய இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இவ் ஊர்வலம் சென்னை சிவஞானம் பார்க்கிலிருந்து 6-8-1938 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டது. கட்டாய இந்தி வேண்டாமென்னும் கருத்துகள் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான அட்டைகளைக் கையிலேந்தி ஊர்வலத்தில் தாய்மார்களும் பெரியோர்களும் சென்ற னர். ஏராளமான விளக்குகளின் பிரகாசத்தின் இடையே மக்கள் அணிவகுத்துச் சென்றனர். பல்லாயிரக்கணக் கான தாய்மார்களும், பெரியோர்களும், மாணவர்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். சென்னை திருவொற்றியூரிலிருந்து ஓர் பிரம்மாண்டமான தாய் மார் ஊர்வலம் புறப்பட்டு வந்து இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் தோழர்கள் டாக்டர் தருமாம்பிகை அம்மையார், அ. நாராயணி அம்மையார், காந்தா பாய், ஜலஜாட்சி அம்மையார் முதலியோர் இடையி டையே இந்தி எதிர்ப்புப் பாடல் பாடினார்கள். தோழர் கள் மீனாம்பாள், டி.வி. முருகேசம், என்.வி. நடராஜன், மறைதிருநாவுக்கரசு, எஸ்.கே. சாமி, வ.ச. தேவசுந்தரன், சுவாமி நித்தியானந்தா, சுவாமி சண்முகானந்தா முதலியோர் இடையிடையே சொற்பொழிவாற்றி னார்கள்.

இவ் ஊர்வலம் பெத்துநாயக்கன்பேட்டை, சௌகார் பேட்டை, சைனா பஜார் ரோடு, யானைக்கவுனி, தண்ணீர்த் தொட்டி டிவிஷன் ஆகிய இடங்களுக்கெல் லாம் சென்று இரவு 11 மணிக்குச் சென்னை சிவ ஞானம் பார்க்கை அடைந்தது. அங்கு சுவாமி சண்முகானந்தா நீண்ட சொற்பொழிவாற்றனார். பின்னர் ஊர்வலம் பல பிரிவாகப் பிரிந்து தமிழ் வாழ்க! கட்டாயா இந்தி ஒழிக! எனக் கூறிக் கொண்டே சென்றது.

இது சென்னை சரித்திரத்திலேயே பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி “இரவு ஊர்வலம்” சென்றது இதுதான் முதல் தடவை என்று எங்கு பார்த்தாலும் மக்கள் பேசிக் கொண்டனர் (விடுதலை 9-8-1938).

அதே காலக்கட்டத்தில் பிரதம மந்திரி இராஜாஜி எங்கு சென்றாலும் அங்கு கறுப்புக் கொடி காட்டப் பட்டது. 28-7-1938 அன்று ஈரோடு சென்ற இராஜா ஜிக்குத் தங்கள் வெறுப்பைக் காட்டும் விதமாக ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் காவல் துறை யின் தடியடிக்கும் அஞ்சாமல் கைகளில் கறுப்புக் கொடி களுடன் நிற்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம். எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் அல்லது அறிஞர்களாக இருந்தாலும் இந்திக்கு ஆதரவாக பேசினால் இந்தி எதிர்ப்புப் போராளிகள் அவர்களுக்கு உடனடியாக தக்க விடை அளிப்பதில் தவறுவதே இல்லை.

hindi agitation

ஈரோட்டில் ஆச்சாரியாருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் மக்கள் -விடுதலை, 30-08-1938

இந்தி என்று ‘சோசியல் ரிபார்மர்’ என்ற இதழிலே கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையைக் கண்டித்து 10.8.1938 விடுதலை நாளேட்டில் முதல் பக்கத்தி லேயே கொட்டை எழுத்துகளில் சுபாஸ் சந்திரபோஸ் பிதற்றல் என்று தலைப்பிட்டுக் கடுமையான கண்டனத் தைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் வித்துவான் தெ.பொ.மீ. (தி.பி. மீனாட்சிசுந்தரனார்) சென்னை வண்ணாரப்பேட்டை யில் ஒரு பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் கட்டாய இந்தியை ஆதரித்து பேசி இருந்தார். அவரு டைய பேச்சைக் கண்டித்து காஞ்சி பரவஸ்து இராஜ கோபாலச்சாரியார் விடுதலையில் (13-8-1938) அன்று கண்டித்து எழுதினார்.

வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னை வண்ணாரப் பேட்டை அரசியல் கூட்டத்தில் தலைமையுரையாக ஆற்றிய சொற்பொழிவை அனைவரும் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தச் சொற்பொழிவு “சுதேச மித்திரன்” பத்திரிகையிலும் மற்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. அதில் நம்முடைய நண்பர், கட்டாய இந்தியை அரசியலார் புகத்துவதினால் நாம் அதை வரவேற்க வேண்டுமென்றும், தவிரவும், கனம் பிரதம மந்திரி அவர்கள் அதற்குக் காரணமாக இருப்பதி னாலும் (அவரும் ஓர் பெருந்தமிழராதலாலும்) தமிழ் மொழிக்கு யாதொரு கெடுதலும் நேரிடாதாகையாலும், இத்தகைய நவீன கல்வி முறையை ஆட்சேபிப்பது நலமல்லவென்றும், மந்திரியாருடைய மனப்போக்கை ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மந்திரி சபையின் மாட்டு அவர் கொண்டி ருக்கும் அன்பே காரணமாக இருக்கலாம். ஆனால் வேறு யாராவது (முதல் மந்திரி தவிர) கட்டாய இந்தி யைக் கொண்டுவந்திருந்தால் நமது நண்பர், தோழர் மீனாட்சிசுந்தரனார் உடனே அதை எதிர்ப்பதுமல் லாமல், இந்தி எதிர்ப்பாளருடன் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார். இதுதான் மிகவும் விசித்தரமாகத் தோன்று கிறது. உண்மையில் நண்பர் கட்டாய இந்தியால் தமி ழுக்கு ஊறு நேரிடுமானால், ஏன் இந்தி எதிர்ப்பாள ருடன் சேரக்கூடாது. கட்டாயப் பாடமாக இந்தியைப் புகுத்தினால், அதனால் தீங்குவரும் என்று உணர்ந்த இவர் அது கனம் பிரதம மந்திரி புகத்தினால் என்ன? கனம் டாக்டர் சுப்பராயன் புகுத்தினால் என்ன? அவர் மனம் அப்படி இல்லை. பிரதம மந்திரி பெரிய தமிழர்; அதனால் தமிழுக்குக் கெடுதல் இல்லை. வேறு யாரா னாலும் (டாக்டர் சுப்பராயன் அல்லது தமிழ்நாட்டில் பெரும் தமிழரென கருதப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யரானாலும் சரிதான்) கட்டாயப் பாடமாக இந்தியைக் கொண்டு வந்தால் இந்தியை எதிர்த்தே தீருவதாகக் கூறுகிறார். அன்பர்களே இதை நன்றாய் கவனிக்க வேண்டும். எனது நண்பர் இப்பொழுது கட்டாய இந்தியை எதிர்க்காத காரணம், அவர் வெளியிட்ட படியே கனம் பிரதம மந்திரி மாட்டு அவர் கொண்டுள்ள அன்புதான் காரணமாகிறது. வேறு யார் கொண்டு வந்தாலும் தமிழ் கெடும் என்று உணர்ந்த நண்பர், தோழர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்தால் கெடாது என்று தாம் நினைப்பதுமல்லாமல், பிறருக்குப் போதிப்பது இவர் கொண்டுள்ள மனப்பான் மையையும் தற்கால அரசியல் விசித்திரத்தையும் உணர்த்துகிறதல்லவா.

(தொடரும்)

Pin It