பல காலமாக, பல நாடுகளில் மனிதர்கள் பொருள்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் மற்றவர்களுக்குக் கொடுத்து, தேவையான பொருள்களைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

1975 வரை கடைசியாகப் பண்டமாற்றுப் பொருள்களாக வேப்பங்கொட்டை, புளியங்கொட்டை, உப்பு, பழைய உடைந்த உலோகங்கள், காய்கறிகள், போன்றவை பண்ட மாற்ற முறையில் மாற்றப்பட்டன. 2010 வரை கிழிந்த துணிகள், பழைய பேப்பர்கள், உடைந்த உலோகங்கள், பிளாஸ்டிக் குகள் போன்றவை பண்ட மாற்றுப் பொருள்களாகவும் இருந்தன.

பணம் புழக்கத்திற்கு வந்த பிறகு வியாபாரம் பண்ட மாற்று முறையிலிருந்து முற்றிலுமாக விலகி, தரகு வேலை செய்யத் தொடங்கினர். வாங்கிய பொருள்கள் மீது தன்னுடைய இலாபத்தைச் சேர்த்து விற்க ஆரம்பித்தனர். இதுவே இப்பொழுது மக்களைச் சுரண்டும் தொழிலாக மாறிவிட்டது. எந்த வரியையும் வியாபாரி ஏற்பதில்லை. அனைத்து வரிகளும் நுகர்வோரையே சார்ந்து விடுகின்றன. மக்களை ஏமாற்ற விதவிதமான விளம்பரங்கள்; பொய்யாகச் சொல்லி வியாபாரம் செய்கின்றனர். உற்பத்தி செய்பவருக்குக் கிடைக் காத இலாபம் தரகுகளுக்கு மட்டுமே கிடைக்கின்றது.

இன்றைய நவீன காலத்தில் மனித மூளையை விலைக்கு வாங்கி, தானே கண்டுபிடித்ததாக, எவரும் செய்ய முடியாதபடி ஒப்பந்தம் செய்து விற்கின்றனர். மனித விளையாட்டுத் திறமைகளை ஏலம்விட்டு, ஏளனம் செய்யும் மனிதர்கள் இப்பொழுது அதிகம்.

அறிவியல் வாதிகளுக்குப் படிப்புத் தேவையில்லை; மனிதநேயம் தேவையில்லை. தில்லுமுல்லு ஒன்று வெற்றி பெற்றால் போதும். அதிக தொகைக்குக் (கோடிகள்) குதிரை பேரம் பேசி நல்ல ஆட்சியையும் கவிழ்த்து, கொள்ளையர்கள் இப்பொழுது ஆட்சி செய்து, சட்டசபை உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கி, மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கேவலமான ஆட்சி செய்யும் அரசுக்கு பெயர்தான் குதிரை பேர அரசியல்.

Pin It