சோழநாடு சோறுடைத்து என்று புகழ் பெற்ற தமிழகத்தில், பல ஆயிரக்கணக்கான செடிகள், மூலிகைகள், பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. இப்பொழுது மனிதர்களே வாழத் தகுதியற்றதாக நிலம் மாறிவிட்டது.

இயற்கையாகவே நிலம் வளம் பெற்று நம்முடன் பல உயிரினங்கள் சேர்ந்து வாழ்ந்தபொழுது மட்டுமே. நாமே நம் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டோம். காடுகளையும், புல்வெளிகளையும், அழித்தனர். நீர்வரத்துக் குறைந்தது. இருக்கின்ற நீர்நிலைகள் அரசியல்வாதிகளாலும் வீட்டுமனைத் தரகர் களாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

தரம்மிகுந்த தானியங்களிலிருந்து உணவுப் பொருள்கள் தயாரிக்கும்பொழுதே உணவின் மணம் ஊர் எல்லையைத் தாண்டி மணக்கும். இப்பொழுது உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அனைத்தும் இரசாயன உரம் போட்டு விளைவிக்கப்படுகிறது. இதே தன்மையில் கோழி, இறைச்சி, மீன் முதலானவை இரசாயனம் கலந்து பயன்படுத்தப் படுகிறது.

நம்மிடையே உள்ள வியாபாரிகள் நுகர்வோர் உடல்நலம் பற்றிக் கவலைப்படாமல் இரசாயனப் பொருள்கள் கொண்டு காய்கறிகள், பழம், பால், மீன், இறைச்சி போன்றவற்றைப் பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற உணவு பொருள்களை வாங்கி உண்பவர்களுக்குப் பல நோய்கள் வருகின்றன. விளைவு, நல்ல வளர்ச்சியுடன் குழந்தைகள் பிறப்ப தில்லை. இந்த இரசாயனங்கள் புற்றுநோய்க்கு வித்திடு கின்றன.

தமிழகத்தில் இதுபோன்று கேடு செய்பவர்களை ஆளும் அரசும், அதிகாரிகளும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில்லை. உழவுத் தொழிலையும் மண்வளத்தையும் காப்பாற்ற ஆடு, மாடு, மற்ற உயிரினங்களையும் அனைத்து நீர் நிலைகளையும் காப்பாற்ற வேண்டும்.

Pin It