உ.வே. சாமிநாதையர் பதிப்புப் பணிக்கு உடனிருந்து உதவி செய்தவர்களை அந்தந்த அச்சுப் பதிப்புகளின் முகவுரையில் பெயர் சுட்டி நன்றி பாராட்டும் வழக்கத்தை அச்சுப் பதிப்பை வெளியிடத் தொடங்கிய காலம் முதலாகக் கைக்கொண்டிருந்தார். தம் பதிப்புப் பணியின் முதல்நிலைக் காலத்தில் வெளிவந்த சீவகசிந்தாமணிப் பதிப்பிற்கு உதவிய இருவரை இப்படி எழுதி மகிழ்ந்திருப்பார் சாமிநாதையர்.
யான் எழுதியனுப்பும் மேற்பிரதிக்கு அச்சுப்பிரதி வேறுபடாவண்ணம், சென்னை திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்திலிருந்து அவற்றைப் பலமுறை ஒப்புநோக்கிப் பேருதவி செய்துவந்த தேரெழுந்தூர், ப்ரம்மஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியரையும், திருமானூர் ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணையரையும் ஒருபொழுதும் மறவேன் (முகவுரை, சீவகசிந்தாமணி, 1887).
1887இல் சீவகசிந்தாமணி அச்சுப்பதிப்பிற்கு எழுதிய முன்னுரைதான் உ.வே. சாமிநாதையர் எழுதிய முதல் முன்னுரை ஆகும். சீவகசிந்தாமணிக்கு முன்னர் சுப்பிரமணிய தேசிகவிலாசச்சிறப்பு - வேணுவனலிங்க விலாசச்சிறப்பு (1878), திருக்குடந்தைப் புராணம் (1883) ஆகிய இரு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தாலும் இவ்விரு நூல்களுக்கும் முன்னுரை எழுதியமைக்கவில்லை.
சிந்தாமணி அச்சுப் பதிப்பிற்குத்தான் முதன்முதலாக முன்னுரை எழுதி அமைத்திருக்கிறார். சாமிநாதையர் அந்த முன்னுரைப் பகுதியில் சிந்தாமணி அச்சுப் பதிப்பிற்குக் காரணமாக விளங்கிய சேலம் இராமசாமி முதலியாரை நன்றி பாராட்டி மகிழ்ந்த பின்னர் தேரெழுந்தூர் இராஜகோபாலாச்சாரியருக்கும், திருமானூர் கிருஷ்ணையருக்கும் நன்றி பாராட்டி மகிழ்ந்திருப்பார்.
சாமிநாதையர் 1889இல் பதிப்பித்து வெளியிட்ட பத்துப்பாட்டு முதல் பதிப்பிற்கும், 1894இல் பதிப்பித்து வெளியிட்ட புறநானூறு முதல் பதிப்பிற்கும் திருமானூர் அ. கிருஷ்ணையர் உடனிருந்து உதவி செய்திருக்கிறார்.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் உதவி செய்தவரின் பெயரைச் சுட்டி நன்றி பாராட்டும் பண்பில் சாமிநாதையருக்கு நிகர் சாமிநாதையர்தான். சாமிநாதையருக்குப் பதிப்புப் பணிக்கு உடனிருந்து உதவியவர்களின் எண்ணிக்கையில் மிஞ்சியவர்களும் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவு பெருமளவு அன்பர்கள், நண்பர்கள் சாமிநாதையரின் பதிப்புப் பணிக்கு உடனிருந்து உதவியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் திருமானூர் கிருஷ்ணையர் தொடங்கி கி.வா. ஜகந்நாதையர் வரையிலுமாக நீண்டு நிற்கிறது.
சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் வெளிவந்த நூல்களின் அச்சுப் பதிப்புப் பணியைக் கல்லூரி விடுமுறைக் காலத்தில் சென்னைக்கு வந்து மேற்கொண்டிருக்கிறார்.
விடுமுறைக் காலத்திற்குள்ளாக அச்சகப் பணி முடிவுபெறாத நேரத்தில் உடன்வந்த ஒருவரைச் சென்னையிலேயே இருக்கச் செய்து அச்சகப் பணியை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சாமிநாதையர் கும்பகோணம் சென்றுவிடுவார்.
சென்னையிலிருக்கச் செய்த அன்பர் அச்சகத்திலிருந்து அச்சிட்டுக் கொடுக்கும் நூற்பகுதியைப் பெற்றுத் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் செய்துமுடித்து கும்பகோணத்திலிருக்கும் சாமிநாதையருக்கும் அனுப்பிவைத்து, அவர் திருத்தி அனுப்பும் பிழைகளை அச்சகத்திற்குச் சென்று திருத்தம் செய்து தரும் பணியைச் செய்வார். இந்தவகையில் பல அன்பர்கள் சாமிநாதையருக்கு உதவியிருக்கிறார்கள்.
இணைப்பு - 1
உ.வே.சாமிநாதையருடன் ஒப்புநோக்குதல், சுவடிபெயர்த்து எழுதுதல், பிழைத்திருத்தம் செய்தல் முதலான பதிப்புப் பணிகளுக்கு உதவியவர்களின் விவரங்கள் (சங்க இலக்கியம், காப்பியம், இலக்கணம், சில உரைநடை நூல்கள் மட்டும்)
சங்க இலக்கியம்
- திருமானூர் ம-m-m---ஸ்ரீ அ. கிருஷ்ணையர் (பத்துப்பாட்டு, முதல் பதிப்பு, 1889)
- மயிலாப்பூர், P.S. ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பிரஹ்மஸ்ரீ, இ. வை. அநந்தராமையர்
- சென்னை இராசாங்கத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர் (பத்துப்பாட்டு, இரண்டாம் பதிப்பு, 1918)
- சிரஞ்சீவி வே. சுந்தரேசையர் (உ. வே. சா. இளைய சகோதரர்)
- சிகந்தராபாத் மாபூப் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் சு. கோதண்டராமையர்
- சென்னை, கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாத ஐயர் (பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பு, 1931)
- ம-m--m---ஸ்ரீ வி. வெங்கையர்
- ம-m--m---ஸ்ரீ வி. கனகசபைப்பிள்ளை
- திருவல்லிக்கேணி ஸ்ரீமத். வை. மு. சடகோபராமானுஜாசாரியர்
- திருமாநூர், ம-m--m---ஸ்ரீ அ. கிருஷ்ணையர்
- மணலூர், ம-m--m---ஸ்ரீ இராமானுஜாசாரியார்
- ஸ்ரீசொக்கலிங்கத்தம்பிரான்
- திருப்பெருந்துறை, பொன்னுச்சாமிப்பிள்ளை (புறநானூறு, முதல் பதிப்பு, 1894)
- சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர், பிரஹ்மஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி ம. வே. துரைசாமி ஐயர்
- இராமகிருஷ்ணமிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி கோ. சேஷாத்திரி ஐயர் (புறநானூறு, இரண்டாம் பதிப்பு, 1923)
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- சிரஞ்சீவி வித்வான் கி. வா. ஜகந்நாதையர் (புறநானூறு, மூன்றாம் பதிப்பு, 1935)
- கும்பகோணம் டவுன்ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர் பின்னத்தூர் ம-m--m--- ஸ்ரீ நாராயணசாமி ஐயர் (ஐங்குறுநூறு, முதல் பதிப்பு, 1903)
- கும்பகோணம் டௌன் ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர் ம-m--m---ஸ்ரீ அ. நாராயணசாமியையர் (பதிற்றுப்பத்து, முதல் பதிப்பு, 1904)
- சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் ம-m--m---ஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர்
- இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி, ஜி.சேஷாத்திரி ஐயர் (பதிற்றுப்பத்து, இரண்டாம் பதிப்பு, 1920)
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயர்
- ‘கலைமகள்’ ஆசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாதையர் (பதிற்றுப்பத்து, மூன்றாம் பதிப்பு, 1941)
- திருப்பெருந்துறை, அ. பொன்னுசாமிப்பிள்ளை.
- மயிலாப்பூர் P.S. ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பிரஹ்மஸ்ரீ, இ. வை. அநந்தராமையர்
- சென்னை, இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர் (பரிபாடல், முதல் பதிப்பு, 1918)
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- வித்வான் கி. வா. ஜகந்நாதையர் (பரிபாடல், இரண்டாம் பதிப்பு, 1935)
- உ. வே. சா. இளைய சகோதரர் சிரஞ்சீவி வே. சுந்தரேசையர்
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயர்
- சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாதையர் (குறுந்தொகை, முதல் பதிப்பு, 1937) காப்பியம்
- வீடூர், ம-m-m---ஸ்ரீ சந்திரநாத செட்டியார்
- தேரெழுந்தூர், ப்ரம்மஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர்
- திருமானூர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணையர் (சீவகசிந்தாமணி, முதல் பதிப்பு, 1887)
- கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் ம-m--m---ஸ்ரீ ம. வீ. இராமானுஜாசாரியர்
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் ம-M--M---ஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- ஜைனசாஸ்திர பண்டிதர் வீடூர், ம-m--m---ஸ்ரீ அப்பாஸாமி நயினார் (சீவகசிந்தாமணி, இரண்டாம் பதிப்பு, 1907)
- சென்னை, இராசதானிக்கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் பிரம்மஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர்
- சென்னை இராமகிருஷ்ணமிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, கோ.சேஷாத்திரி ஐயர்
- ம-m--m---ஸ்ரீ வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (Retired Superintendent, Veterinary Department) (சீவகசிந்தாமணி, மூன்றாம் பதிப்பு, 1922)
- திருமானூர் ம-m--m---ஸ்ரீ க்ருஷ்ணையர் (சிலப்பதிகாரம், முதல் பதிப்பு, 1892)
- சென்னை இராசதானிக்கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் ம-m--m---ஸ்ரீ இ. வை. அனந்தராமையர்
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர்
- முதற் பதிப்பிற்கு உடனிருந்து உதவிய திருமானூர் ஸ்ரீ கிருஷ்ணையரவர்கள் குமாரர் சிரஞ்சீவி, கே. அருணாசல ஐயர்
- சென்னை இராசதானிக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ஜி.சேஷாத்திரி ஐயர் (சிலப்பதிகாரம், இரண்டாம் பதிப்பு, 1920)
- மளூர், ஸ்ரீமத் உ. வே. அரங்காசாரியர்
- கொழும்பு, Hon. பொ. குமாரசாமி முதலியார்
- இலங்கை பௌத்தவித்தியோதய பாடசாலைத் தலைவர் ஸ்ரீ ஸ§மங்களர்
- பெருகவாழ்ந்தான் ஸ்ரீமத், உ. வே. அரங்காசாரியர்
- கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் சமஸ்கிரு பண்டிதர் திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீமத், உ. வே. ஸ்ரீநிவாஸாசாரியர்
- திருமானூர் ம-m--m---ஸ்ரீ கிருஷ்ணையர்
- கும்பகோணம், பேட்டைத்தெரு, ம-m--m---ஸ்ரீ தியாகராஜபண்டாரம்
- திருப்பெருந்துறை, ம-m--m---ஸ்ரீ பொன்னுசாமிப்பிள்ள கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் மணலூர், ம-m--m--- ஸ்ரீ இராமானுஜாசாரியார்
- பின்னத்தூர், ம-M--M---ஸ்ரீ நாராயணஸாமி ஐயர்
- மணலூர், ம-M--M---ஸ்ரீ சந்தானமையங்கார்
- மளூர், ஸ்ரீமத், உ. வே. அரங்காசாரியார்
- ம-M--M---ஸ்ரீ V. P. சுப்பிரமணிய முதலியார், G. P., V.C.
- ம-M--M---ஸ்ரீ S. கிருஷ்ணசாமி ஐயர், B.A.,B.L
- ம-M--M---ஸ்ரீ ரி. றி. சோமசுந்தர ஐயர்
- ம-M--M---ஸ்ரீ க்ஷி. சுப்பிரமணிய ஐயர்
- ம-M--M---ஸ்ரீ வி. ஷி. நடேச ஐயர், ஙி. கி.
- ம-M--M---ஸ்ரீ ஸ§. கோபாலசாமி ஐயர், ஙி. கி.
- தமிழ்ப்பண்டிதர், திருவல்லிக்கேணி, ஸ்ரீமத் உ. வே. வை. மு. சடகோபராமானுஜாசாரியர் (மணிமேகலை, முதல் பதிப்பு, 1898)
- சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் ம-M--M---ஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர்.
- இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, கோ. சேஷாத்திரி ஐயர். (மணிமேகலை, இரண்டாம் பதிப்பு, 1921)
- மளூர், ராவ்பகதூர் ஸ்ரீ அரங்காசாரியார்
- கொழும்பு, ஸ்ரீ பொ. குமாரசாமி முதலியார்
- இலங்கை, ஸ்ரீ ஸுமங்களர்
- பெருகவாழ்ந்தான், ஸ்ரீ மஹாமஹோபாத்தியாய அரங்காசாரியார்
- திருமயிலை, ஈச்சம்பாடி சதாவதானம் ஸ்ரீ ஸ்ரீனிவாஸாசாரியார்
- சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்.
- மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா.ஜகந்நாத ஐயர் (மணிமேகலை, மூன்றாம் பதிப்பு, 1931)
- தியாகராஜபுரம் ஸ்ரீ நரஸிஹ்மாசாரியார்
- ஸ்ரீஸேது ஸம்ஸ்தான மகாவித்துவானும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியருமாகிய பாஷாகவிசேகர ஸ்ரீமத் ரா. ராகவையங்கார்
- தஞ்சாவூர், அவளிவணல்லூர்க் கர்ணம் பிரஹ்மஸ்ரீ. ஏ. ஐயாசாமி ஐயர்
- சிரஞ்சீவி வே. சுந்தரேசையர்
- திருப்பெருந்துறை, ஏம்பல், அன்பர் பொன்னுசாமிபிள்ளை
- பின்னத்தூர் ஸ்ரீ. அ. நாராயணசாமி ஐயர்
- ஸ்ரீநிவாஸநல்லூர், பிரஹ்மஸ்ரீ, ஷி. ராமசந்திர சாஸ்திரி
- சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் பிரஹ்மஸ்ரீ. இ. வை. அனந்தராம ஐயர்
- மயிலாப்பூர், பி. எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி, ம. வே. துரைசாமி ஐயர்
- திருமானூர், சிரஞ்சீவி, கே. அருணாசல ஐயர்
- சுந்தரபாண்டியம், சிரஞ்சீவி, கோதண்டராமையர் (பெருங்கதை, முதல் பதிப்பு, 1924)
- தியாகராஜபுரம் ஸ்ரீ நரஸிஹ்மாசாரியார்
- தஞ்சாவூர், அவளிவணல்லூர்க் கர்ணம் பிரஹ்மஸ்ரீ ஏ. ஐயாசாமி ஐயர்
- திருப்பெருந்துறை, ஏம்பல், அன்பர் பொன்னுசாமிபிள்ளை
- பின்னத்தூர் ஸ்ரீ. அ. நாராயணசாமி ஐயர்
- சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- வித்வான் கி. வா. ஜகந்நாத ஐயர் (பெருங்கதை, இரண்டாம் பதிப்பு, 1935)
- வீடூர், அப்பாசாமி சாஸ்திரியார்
- வித்துவான் ச. கு. கணபதி ஐயர் (உதயணகுமார காவியம், 1935) இலக்கணம்
- சிவகங்கை ஸப்டிவிஷன், சிறுவயல் அரண்மனை வித்வான் ம-M--M---ஸ்ரீ திரு. கிருஷ்ணையர்
- கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் மணலூர் ம-M--M--ஸ்ரீ இராமானுஜாசாரியார். (புறப்பொருள் வெண்பாமாலை, முதல் பதிப்பு, 1895)
- சுந்தரபாண்டியம், சிரஞ்சீவி, ஷி.கோதண்டராமையர் (புறப்பொருள் வெண்பாமாலை, மூன்றாம் பதிப்பு, 1924)
- மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பிரஹ்மஸ்ரீ இ. வை. அநந்தராமையர்
- சென்னை அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி ம.வே.துரைசாமி ஐயர் (நன்னூல் மயிலைநாதர் உரை, முதல் பதிப்பு, 1918)
- ஸ்ரீமீனாக்ஷி தமிழ்க் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சமூகரங்கபுரம், சிரஞ்சீவி, வே. வேங்கடராஜுலு ரெட்டியார் (நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை, முதல் பதிப்பு, 1925)
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி வித்துவான் வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- சிரஞ்சீவி, வித்துவான் கி. வா. ஜகந்நாதையர் (தமிழ்நெறி விளக்கம், முதல் பதிப்பு, 1937)
உரைநடை நூல்கள்
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயர்
- கலைமகள் உதவிப் பத்திரிகாசிரியர் சிரஞ்சீவி, வித்துவான் கி. வா. ஜகந்நாத ஐயர் (ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், முதற்பாகம், முதல் பதிப்பு, 1933)
- சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயர்
- கலைமகள் உதவிப் பத்திரிகாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாத ஐயர் (ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், இரண்டாம் பாகம், முதல் பதிப்பு, 1934)
- கோபாலகிருஷ்ண பாரதியாரின் மாணாக்கர் சிதம்பரம் பிருஹ்மஸ்ரீ ராஜரத்தின தீக்ஷிதர் (கோபாலகிருஷ்ண பாரதியார், 1936)
- சென்னைப் பிரிஸிடென்ஸி காலேஜ் ஸம்ஸ்கிருத போதகாசிரியர் ஸ்ரீமத் உ. வே. ராவ்பகதூர் அரங்காசாரியார் (புத்த சரித்திரம், பௌத்த தருமம் பௌத்த சங்கம், முதல் பதிப்பு, 1898).
- முனைவர் இரா.வெங்கடேசன்