பலூன்
அழுகைக்கு ஆறுதலாய்
வாங்கப்படுகிறது
சிறுமிக்கான ஒரு பலூன்....
நாள் எல்லாம் விளையாடிய
களைப்பில் ஓய்வெடுக்கின்றனர்
கட்டியில் சிறுமியும்
ஜன்னலில் பலூனும்....
மின்விசிறிக் காற்றில்
கசிந்து கொண்டிருந்தது
பலூன்காரனின் வாய்க்காற்று....
பெண்ணிலா
நிலவைக் காண
வெளியே வந்தாக
சொல்லுகிறாய் நீ...
உன்னைக் காண
பகலெல்லாம் காத்திருந்ததாக
சொல்லுகிறது நிலவு...
நண்பர்கள்
உனக்கான
காத்திருப்பில்
நண்பர்களாய்
நான்...
கல் இருக்கை...
பூங்கா மரங்கள்...
ஒற்றை மைனா...
- மணி ராமலிங்கம் (