ஜவஹர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ம் நாள், அவர் குழந்தைகளின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  

குழல் இனிது யாழ் இனிது என்பர் 

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - என 

தெய்வப்புலவர் திருவள்ளுவர், குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்பதன் ஆனந்தத்தை நினைத்து, சிலாகித்து வர்ணித்துள்ளார்.  

உண்மைதானே! பிறந்த குழந்தையின் அசைவு ஆனந்தம், கை-கால்களை நீட்டி மடக்கி முறுக்கிக் கொள்வதும், முகத்தைச் சுழித்துக் கொள்வதும், அதன் வாய் திறந்து சிரிப்பதும், இன்னும் சொல்லப் போனால் அது கொட்டாவி விடுவதும் கூட.... பார்க்கப்..., பார்க்க சலிக்காத ஆனந்தத்தை தரக்கூடியது. கொஞ்சம் வளர்ந்து விட்டால் அதன் ஆட்டமும், ஓட்டமும் நம்மையும் சேர்த்து ஒடவைத்து விடுகின்றன. இயல்பான வளர்ச்சியுடன், குழந்தை மகிழ்ச்சிகரமாக இருப்பதைத்தான் பெற்றோரும் விரும்புவார்கள். 

மாறாக, குழந்தைகள் இயல்புக்கு மாறான செயல்பாடுகளுடன், பல்வேறு உபாதைகளுடன் அவ்வப்போது அழுது, அடம் பிடித்துக் கொண்டிருந்தால் பெற்றவர்களும், உற்றவர்களும் பரிதவித்துப் போவார்கள். 

இதில் பெற்ற குழந்தை இயல்பாக இல்லாமல் வித்தியாசமாக இருந்து விட்டால் எத்தனை வேதனை. வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் பிரச்சினைத் தீர்ந்து விடுமா என்ன? சில குழந்தைகள் மனவளர்ச்சிக் குறைபாடு, உணர்வுரீதியான பிரச்சினை காரணமாக சமூக உறவில் குறைபாடு, பேச்சுத்திறன் குறைவு, காது கேட்பதில் குறைபாடு, பார்வைக் குறைபாடு, படிப்பதில் குறைபாடு என பல வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவற்றுள் சில முக்கியமான பாதிப்புகளைப் பற்றி பார்ப்போம். 

டிஸ்லெக்சியா: இக்குறைபாடுள்ள குழந்தைகள் அதிக துருதுருப்பு, ஏராளமான ஞாபக சக்தி, அறிவுத்திறன், கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்வது எல்லாம் இருக்கும். பார்வை கோளாறு இருக்காது. ஆனால் எழுதும்போது போர்டைப் பார்த்து எழுதுவதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த, படிக்க இயலாமை, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக படித்தல், படிக்கும்போது குழம்பிப் போகுதல், அடிக்கடி விழுவது, காயம்பட்டுக் கொள்வது போன்றவை இருக்கும்.  

b என்ற எழுத்தை, d என்றும், was என்பதை, saw என்றும் மாற்றிக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் அறிவில் குறைந்தவர்கû இல்லை. உலகப் புகழ் பெற்ற ஐன்ஸ்டின், சர்ச்சில், (சார்லி) சாப்ளின் போன்றவர்கள் இக்குறைபாடு உடையவர்களே. இது போன்ற குழந்தைகள் ஓவியம்.

- Dr R.லோகநாயகி

Pin It